(Reading time: 21 - 41 minutes)

“நிஜம்மாத்தான் அபி. அவனை உருத்தெரியாமல் அழிக்கனும்னு வெறி இருந்தது உண்மைதான். ஆனால் நிரூபணாதான் என்னை தடுத்திட்டா. உனக்கும் அது பிடிக்காதுன்னு சொன்னா. என்னுடைய பலமும் நீதான் பலகீனமும் நீதான். அப்படி இருக்கும்போது நான் என்ன பண்ணியிருப்பேன் நீயே சொல்லு?”

“ ம்ம்.. அப்போ அவன் எங்க இருக்கான்? மறுபடியும் ஜெயில்ல இருக்கானா?”

“ம்ம்ஹ்ம்ம் இல்ல… டிபார்ட்மண்ட்ல பேசி அவனை மனநிலை மருத்துவமனையில் கவுன்சிலிங்க்கு அனுப்பி இருக்கேன்!”. ராகவேந்திரனை மெச்சுதலாக பார்த்தாள் அபி.

“நல்ல முடிவுங்க”

“பின்ன? எல்லா குற்றத்துக்கும் தண்டனை அவசியம்தான். ஆனால் அந்த தண்டனை குற்றவாளிக்கு தீர்வையும் தரணும் இல்லையா? அவ்வளவு நாள் வினை ஜெயில்ல இருந்தும் அவன் திருந்தலையே. அவனுக்குள் இருந்த வெறி அதிகமானதுதான் மிச்சம். மூணு வருஷம் இல்லை..முப்பது வருஷம் ஆனாலும் அவன் வெறி அடங்காது. அந்த வெறிக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சேன். இதுதான் சரினு தோணுச்சு.”

“ உண்மைதான். வினய்கு மனதளவில் பிரச்சனை இருக்கு. எது பிடிச்சிருக்கோ அதை அடையனும்னு ஒருவிதமான வக்ரமான வெறி. அவன் என் படத்தை மட்டும் மார்ஃபிங் பண்ணலனு கண்டுபிடிச்சப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?”

“ எல்லாரும் உன்னை மாதிரி தைரியமா நின்னுருப்பாங்களா அபி? வினய் மாதிரியானவங்களோட வெறிக்கு எத்தனை பொண்ணுங்க பலி ஆகி இருக்காங்க? அவனுங்களுக்கு தண்டனை கொடுக்குறது தீர்வாகாது அபி. ஒரு ஆண் வளரும்போதே அவன் மனசுல பொண்ணுங்கள பத்தின எண்ணங்கள் வக்ரமா இருக்கா அல்லது ஆரோக்யமா இருக்கானு தெரிஞ்சு அதை சரி பண்ணனும். வெளிநாட்டுல ரேப் கேசுல பிடிப்பட்ட அவனுடைய ஜின்ல (gene) x chromosome எப்படி இருக்கு, அவனுக்குள்ள காம உணர்வு சராசரி மனுஷக்கு இருக்குற லெவல்ல இருக்கானு செக் பண்ணுவாங்க. அப்படி அது அதிகமா இருந்தால், அவனுக்கு ஆயுள் தண்டனை அல்லது கவுன்சிலிங் தராங்க..ஆனா நம்ம நாட்டுலத்தான் மன்னிப்பை கொடுக்குறாங்க.. நூத்தில் பத்து பேரு தானே தண்டனையை அனுபவிக்கிறான். மிச்சம்? “

“..”

“பெத்த தாய், கூட பொறந்த சகோதரியை தவறான கண்ணோட்டத்துல பார்க்குறது குற்றம் இல்லை. அது ஒருவகையான நோய். அதுக்கு தேவை தண்டனை இல்லை, சிகிச்சை! சட்டம் அறுக்காத கெட்டதை சயின்ஸ் அறுக்கும். ஆனா இதை புரிஞ்சுக்கத்தான் ஆள் இல்லாமல் போகுது.”

“ம்ம்.. ஒரு வகையில் எங்க சினிமா கூட இதுக்கு ஒரு தூண்டுதலா இருக்கு. ஐட்டம் சாங் போடுறது, பொண்ணுங்களோட அங்கங்களை வர்ணிச்சு காட்டுறது, இல்லன்னா பொண்ணுங்கள கேவலமாக ஏமாத்துறவங்களா காட்டுறது.. இதெல்லாம் ஒரு பார்க்குறவங்க மனசுல கெட்ட்தை தானே விதைக்கிது.”

“..”

“என்னுடைய போன படத்துல ஒரு சின்னபையன் நடிச்சான்.. ஞாபகம் இருக்கா?”:

“அவனுடைய பேட்டி கூட வைரல் ஆனிச்சே?”

“அவனேதான். அவன் எல்லா பேட்டியிலும் நான் பசங்ககூடத்தான் பேசுவேன். பொண்ணுங்கள பிடிக்காதுன்னு சொன்னான். இது இயல்புதான். சில சின்ன பசங்களுக்கு எதிர்பாலினமா உள்ளவங்ககிட்ட பழக அசௌகரியமா இருக்கும். ஆனா இந்த பையன் என்ன சொன்னான் தெரியுமா? பொண்ணுங்க சீன் போடுவாங்க, அவங்க தப்பு.. அப்படினு சொல்லுறான். இந்த வார்த்தைகளும் பேச்சும் எங்க இருந்து வந்திருக்கு?”

“என்னவோ போ. இந்த காலத்து பசங்கள பார்க்குறப்போ கொஞ்சம் சீக்கிரமா பொறந்த்தை நினைச்சு சந்தோஷமா இருக்கு”

ஹா ஹா ரைட்டு” பேசிக்கொண்டே ஒரு ப்ரம்மாண்டமான வீட்டினுள் காரை பார்க் செய்தாள் அர்ப்பணா. அங்கு இருந்த பெயர்பலகையில் இருந்த பெயரை படித்த ராகவேந்திரனுக்கு ஒருகணம் சர்வமும் சிலிர்த்து போனது.

அது ஒரு பிரபல இயக்குனரின் வீடு. பிரபல இயக்குனர் என்பதை விட, தமிழ் சினிமாவிலேயே தனி பாணியை உருவாக்கிய மரியாதைக்குரியவர் அவர். அவர் பெரிய கோபக்காரர், எதையும் சுற்றி வளைக்காமல் பேசுபவர், கறார் பேர்வழி இப்படி அவரைப்பற்றி நிறைய செய்திகள் உள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் படமின்று இயக்கவிருப்பதாக செய்தி.

“இங்க ஏன் வந்தோம்?”

“ஹா ஹா.. அய்யாவோட அடுத்த படத்தில் நடிகை அர்ப்பணாவும் நடிக்கிறா” என்று இயல்பாக சொன்னாள் அர்ப்பணா.

“வாட்..அப்போ அந்த செய்தி நிஜம்தானா?”

“மீடியா சொல்லுற எல்லா செய்தியுமே பொய்யா இருக்கும்னு இல்லப்பா. உண்மையும் எழுதுறாங்க. வாங்க உள்ள போகலாம்!”

வெளியில் இருந்த ப்ரம்மாண்ட்த்திற்கு உள்ளேயும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல்  இருந்தது. வரவேற்பறையின் பிரதாமான இடத்தில் அவரின் ஆளுயர புகைப்படம் ஒன்று கம்பீரமாக இருந்தது. சில நொடிகள் இமைக்காமலேயே அந்த படத்தை பார்த்துக்கொண்டு நின்றான் ராகவேந்திரன். வியப்பின் எல்லையை தொட்டதை போல மிளரும் அவனது பார்வையை ரசித்துக் கொண்டு நின்றாள் அர்ப்பணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.