(Reading time: 21 - 41 minutes)

“நான் வேணும்னா, அட்வான்ஸ் பணத்தோடு சேர்த்து நஷ்ட ஈடையும் சேர்த்து தந்திடுறேன்..உங்க கதாப்பத்திரத்திற்கு வேறு கல்யாணம் ஆகாத மூஞ்சிய பார்த்துக்கோங்க” என்றபடி விருட்டென எழுந்தாள் அர்ப்பணா. வேகமாய் அங்கிருந்து புறப்பட முனைந்தவள் ஒரு நொடி நின்று,

“சில நடிகைகள் திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு செய்தி படிக்கும்போது நினைப்பேன் சார், கல்யாணம் என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்..அதை ஏன் மறைச்சு பண்ணுறாங்க? வாழ்க்கை முழுக்க ஓடி போயி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு ஏன் பேர் வாங்கிங்கிறாங்கனு.. ஆனா இப்போத்தான் புரியுது, அதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய குழியை நீங்கல்லாம் தோண்டி வைக்கிறீங்க..பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ? அருமை சார்” என்று கைத்தட்டி ஆதங்கமாய் மொழிந்துவிட்டு நடந்தாள் அர்ப்பணா.

அவளது கோபம்,ஆதங்கம், கடைசியாய் பேசிப் போன வார்த்தைகள் எல்லாமே அந்த இயக்குனரை பெரிதும் பாதித்தது. அதே நேரம் அவரை மூளைச்சலவை செய்ய தொடங்கினார் உதவி இயக்குனரில் ஒருவர்.

“சார் இப்போ எல்லாம் கல்யாண ஆகின நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதும் ஒரு ட்ரெண்டிங்க் சார்.. அது மட்டுமில்ல நம்ம கதாநாயகியை அர்ப்பணா மேடமாலத்தான் நூறு சதவிகிதம், நடிப்பால் உயிர் தர முடியும். அதுமட்டும் இல்ல, அவங்க அடுத்து யாரோட படம் பண்ணுறார்னு உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன்..அவரே அதுக்கு சரினுதான் சொல்லி இருக்கார்”என்றதுமே அந்த இயக்குனர் ஆச்சர்யமாய் நிமிர்ந்தார்.

“ஆமா சார்.. சோ அவசரபட்டு  முடிவெடுக்காதீங்க.. அர்ப்பணா மேடம்கிட்ட நான் பேசுறேன்”என்று அந்த உதவி இயக்குனர் சொல்லவும், சரி என்பது போல தலை அசைத்தார் அவர். (சில நேரங்களில் இயக்குனர்களின் தவறுகள்கூட உதவி இயக்குனர்களின் கைக்கொண்டே திருத்தப்படுகின்றன!

தன் வயிற்றில் முகம் புதைத்திருந்தவனின் கேசத்தை தடவி கொடுத்தாள் கண்மணி.

“ஷ்ஷ் என்னப்பா இது? இது ஹாஸ்ப்பிட்டல்.. இப்படி அநியாயம் பண்ணுறீங்களே..யாராச்சும் வந்துட போறாங்க.. எழுந்திரிங்க”என்று அவள் சொல்லவும் களுக்கெனசிரித்தபடி நிமிர்ந்தான் சத்யேந்திரன்.

“ஹா ஹா மத்தவங்க என்ன நினைப்பாங்கனு பயப்படுற ஆளாநீ? உனக்கே இது ஓவரா இல்லையாடா?”என்று அவளைக் கேட்டான் அவன்.

“ஹ்ம்ம்… ஏன் கேட்க மாட்டீங்க.. எதுவுமே சொல்லாமல் இப்படி ஒய்யாரமாஎன் மடியிலபடுத்துக்கிட்டா நான் என்ன்னுநினைக்கிறதாம்? மத்தவங்க நினைப்பு மேல எனக்கு கவலை இல்லத்தான்.. ஆனா உங்களை அப்படி விட முடியுமா?”என்று அவள் கேட்கவும் கண்மணியின் கரங்களைப்பற்றி முத்தமிட்டான் சத்யன்.

“நான் வார்த்தையால சொன்னா கூட உனக்கு புரியாது.. அவ்வளோ சந்தோஷமா இருக்கு.. ரசிகனின் அன்புக்கு இப்படி ஒரு சக்தி இருக்கா? நான் அவங்களுக்குனு ஒன்னுமே பண்ணலயே? யாருனே தெரியாத ஒருத்தன் மேல இப்படி அன்பை காட்ட முடியுமா என்ன?”

“நம்மளை அதிகமா வெறுக்குறவங்க கூட, வேற யாராவது மேல உயிரா இருப்பாங்க.. ஏன்னா நேசிக்கிறது மனித இயல்பு. இன்னைக்கு தொடங்கிய இந்த சந்தோஷம் எப்போதுமே நிலைச்சிருக்கும்..”என்று கண்மணி புன்னகைத்தாள். அவளை ஆழ்ந்துநோக்கி மனதில் நெகிழ்ந்த சத்யேந்திரன் அவளுடன் செல்ஃபி ஒன்ற எடுத்தான்.

அவனது முதல் ட்வீட்டாக,

கண்ணின் மணிபோன்றவளே

கட்டியமுதே கண்ணம்மா

என்று பதிவிட்டான்.

இந்த சந்தோஷம் இனி எப்போதும் நிலைக்கட்டும் என்ற வாழ்த்துக்களுடன் தற்காலிகமாக விடைப்பெறுவோம்..டாட்டா!

-வீணை இசைந்திடும்-

Episode # 27

Next episode will be published as soon as the writer shares her episode.

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.