(Reading time: 21 - 41 minutes)

“வாட் எ மேன் அபி.. இங்க வந்துருக்கோம் என்பதற்காக சொல்லல, நிஜமாவெ நான் இவரை ரொம்ப ரசிக்கிறேன்..தெரியுமா?’

“ஹா ஹா.. அவரை பிடிக்காதவங்க யார்தான் இருக்காங்க?”

“உண்மைதான். ஆனா அவருக்கான இடம் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைக்கல தெரியுமா? எவ்வளவு தடைகள், சவால்கள், விமர்சனங்கள்?”

“என்ன நிஜத்தை விட்டுட்டு நிழல்மேல அப்படியொரு காதல் ரெண்டு பேருக்கும்?” முதுமையிலும் தடுமாறாத தெளிவான குரலுக்கு சொந்தக்காரராக நின்றிருந்தார் அந்த இயக்குனர்.

வெள்ளை நிற வேஸ்ட்டி சட்டை, நெற்றியில் திருநீர் மூக்கு கண்ணாடி என நேர்த்தியார் காணப்பட்டார் அவர்.

“அய்யா..வணக்கம்”என்று இருவருமே கை கூப்பிட,

“வாழ்க வளமுடன். உட்காருங்க”என்றார்.

“தொந்தரவு பண்ணிட்டேனுங்களா ஐயா?” தயக்கமான குரலில் அர்ப்பணா கேட்க,

“இந்த மணிதுளிகள் உங்களுக்கு மட்டும்தான் ..என்ன செய்தி சொல்லுங்க” என்றார்.

“ஐயா, நாங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்”

“சாட்சி கையெழுத்து போடனுமா?” குறும்புடன் கேள்வி வந்தது அவரிடமிருந்து. இருவருமே மரியாதை நிமித்தமாய் சிரித்து மட்டும் வைக்க, அவர் பெரிதாகவே புன்னகைத்தார்.

“கல்யாணம் பண்ணுறது நல்ல விஷயம்தான். அதுவும் கொஞ்சம் இளம்வயசுலேயே நல்ல வாழ்க்கை துணையோடு வாழ்க்கைய ஆரம்பிக்கனும். திருமண வாழ்க்கை உங்களுக்கு எல்லா விதத்திலும் இன்ஸ்பையர் பண்ணும்”என்று அவர் பேசும்போதே அவரது மனைவி வந்தார்.

“தேங்க்ஸ்மா.. நீங்களும் இப்படி பக்கத்துல வந்து உட்காருங்களேன்”என்று ஒரு காஃபி கப்பை கனிவுடன் தன் மனைவியிடம் கொடுத்தார் அந்த இயக்குனர். அவர்கள் இருவரிடைய இழையோடிய காதல் அபி-ராகவ் இருவரின் மனதையும் கவர்ந்தது.

“இந்த உலகம் என்னை எது எதுக்காகவோ சாதனையாளன்னு சொல்லுது. ஆனா எனக்கு எது சாதனை தெரியுமா? என் மனைவியை மனநிறைவா வெச்சுருக்குற ஒவ்வொரு நாளையும் நான் சாதனையா பார்க்கிறேன்.. எண்ணங்கள் சீரா இருக்கனும்னா சந்தோசமான மனசு அவசியம். அந்த சந்தோசத்தை கொடுத்தது என் மனைவிதான்” என்று தன் மனைவியின் கரங்களை பற்றிக் கொண்டு பேசினார் அவர்.

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் தங்களுக்கான ஆசியாகவே பாவித்தனர் இருவரும்.

“சோ தாராளமா கல்யாணம் பண்ணுங்க.. இதை சொல்லத்தான் பார்க்கனும்னு கேட்டியாமா? “

“அது வந்து சார், இப்போ பண்ணுற பட்த்துக்கு அப்பறம், சாரோட படத்துக்கு தான் சைன் பண்ணி இருக்கேன். இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது படத்தை பாதிக்குமா தெரியலை. ஒரு இயக்குனரா உங்ககிட்ட முன்கூட்டி சொல்லனும்னு நினைச்சேன்..”

“ஏன், கல்யாணத்துக்கு அப்பறம் முதல் படத்தில் அறிமுகமாகி ஆம்பள ஹீரோவாகலாம்.. பொண்ணுங்க ஆக கூடாதா? நீ தாராளமா பண்ணிக்கோம்மா..” என்று உடனே பதில் வந்தது அவரிடமிருந்து.

இதுதான் அவரின் அடையாளம். முற்போக்கு சிந்தனைகளுக்கு அகராதியாய் திகழ்பவர், அதேநேரம் தன் கருத்தினை சுருக்கமாக தெளிவாக முன்வைப்பவர்.

“ரொம்ப சந்தோசம் சார்” என்ற அர்ப்பணா, ராகவேந்திரனை பார்க்க அடுத்த நொடி இருவருமே அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

“வாழ்க..வாழ்க.. அந்த ஆறுபடை முருகன் எல்லாத்துக்கும் துணை நிற்பான்”என்று இருவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார் அவர்.

“மனசே லேசாகிடுச்சு அபி.. உனக்கு எப்படி இருக்கு?”என்று வினவினான் ராகவேந்திரன் மனம் சிலிர்த்தபடி.

“எனக்கும்தான்.. ஆனால் இன்னும்கொஞ்சம் நெர்வஸ் இருக்கு. இப்போ படம் பண்ணிட்டு இருக்கேன்ல..அவர்கிட்டயும் பேசனும். இப்பொ அங்கத்தான் போகனும்பா..”என்றவள் அப்போதுதான் நினைவு வந்தவளாய் ராகவை பார்த்தாள்.

“சாரிப்பா.. உங்களுக்கு ஏதும் முக்கியமான வேலை இருக்கானு கேட்க மறந்துட்டேன்.. எப்போ எப்போனு ஒரு குழப்பத்துல இல்லாம எல்லாத்தையும் இன்னைகே பேசி முடிவெடுக்கனும்னு வேகத்துல உங்களுக்கு வேலை இருக்கும்னே மறந்துட்டேன் பாருங்களேன்..”

“ஹீ ஹீ.. உன்னோட ப்ளான் இப்படி இருக்கும்னு தெரியாதுதான் அபி. ஆனாலும்,உன் வீட்டுக்கு வரும்போதே, வேற வேலைய கவனிக்க அவசியம் இல்லாதபடி எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டுத்தான் வந்தேன்”என்றான் ராகவ்.

“அப்போ ஓகே.. போகலாமா?”

“ஓ யெஸ்..”என்றபடி அவளை பின் தொடர்ந்தான் ராகவேந்திரன்.

“டென் டெடைன்ன்ன்…பேஸ்பூக் அண்ட் ட்வீட்டர் அக்கவுண்டு ரெடிப்பா.. ரெண்டு பேருக்கும் ஞாபகம் இருக்குற மாதிரி தான் பாஸ்வர்ட் வெச்சிருக்கேன். ஒருவேளை உங்களால கவனிக்க முடியலன்னா நான் பார்த்துக்குறேன்” என்றாள் கண்மணி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.