(Reading time: 21 - 41 minutes)

“ரெடியா LIVE on பண்ணவா?”என்று கண்மணி கேட்கவும்,மூன்று முறை மூச்சிழுத்து கொண்டான் சத்யேந்திரன்.அவனது செய்கையைன் பார்க்க சிரிப்பாக இருந்தது கண்மணிக்கு.

“லுக், நான் டிப்ஸ் தரேன்.. எப்பவுமேநாம பெரிய ஸ்டார்.. ஒரு அப்பாடக்கருன்னு நினைச்சுக்கிட்டாத்தான் எதை செய்யுறதா இருந்தாலும் தயக்கம் வரும்.. சோ அந்த இமேஜை வீசிடுங்க.. இப்போ உங்க காலேஜ்ல நீங்கதான் சீனியர்.. யாரு உங்களை பார்த்தாலும் ‘வாவ் மை டியர் சீனி’ நு கண்ணுலயே ஹார்ட் அனுப்பி அதுல அம்பும் விடுவாங்க.. அப்படி ஒரு சாக்லெட்பாய்.. அந்த சாக்லெட் பாய்கிட்ட சில பேரு பேச போறாங்கனு நினைச்சுக்கோங்க.. ஏதாச்சும் பதில் சரி இல்லன்னா நான் ஹெல்ப் பண்ணுறேன்.. யூ கேட் டூ இட்”என்றவள் அவனே எதிர்பாரா நேரத்தில் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

3..2..1.. ஸ்டார்ட்..

லேசாய் தயங்கிய குரலில் ஆரம்பித்து பின் சரளாமாக அனைவருக்கும் தன் வணக்கத்தை சொல்லி பேச ஆரம்பித்தான் சத்யன். அவன் நேரலைக்கு வந்ததுமே கமெண்ட்கள் குவிந்தன. அதில் முக்கியமான கேள்விகளுக்கு சிறப்பாகவே பதில் தந்தான்.

“ஏன் இந்த திடீர் நேரலைன்னா, உங்க எல்லாருகிட்டயும் நேரடியாக பேசனும்னு ஆசைப்பட்டேன்.”

“ஹா ஹா ரொம்ப பன்ச் டைலாக் படத்துல வருதா? அவசியம் இல்லாத இடத்தில் அப்படியே பேசாமல் இருக்க முயற்சி பண்ணுறேன்”

இடையிடையில் அவனுக்கு வந்த “ஐ லவ் யூ”மெசெஜ் களை பார்த்து பூரித்து போனான் சத்யன்.

“உங்க எல்லாருடைய அன்புக்கும் நன்றி. அந்த அன்புக்கு பிரதிபலனான படங்களை பண்ண முயற்சி பண்ணுறேன்..”

“ம்ம்.. இப்போ ஒரு படப்பிடிப்பு போயிட்டு இருக்கு.. அடுத்த படம் அனேகமாக கல்யாணத்துக்கு அப்பறம்தான்”என்றான் சத்யேந்திரன். கண்மணியைப் பற்றியும் அர்ப்பணாவை பற்றியும் கேள்விகள் எழும்பி அவனுக்கு தலையசைத்து ஊக்கமளித்தாள் கண்மணி.

“இதுவரைக்கும் ஏன் கண்மணி பத்தி அதிகம் பேசலனு கேட்குறீங்க.. இதுவரைக்கும் தனியாய் கண்மணியை பத்தி யாரும் ஆவலாக என்கிட்ட கேட்கல.. எல்லாருமே இன்னொரு நடிகையை பிரிந்து தான் கண்மணியை கல்யாணம் பண்ணிக்கிறெனானு ஒரு பொயை உண்மையோடு இணைச்சு கேட்டாங்க.. அதனாலத்தான் பதில் சொல்லல.”

“இப்போ சொல்லுனுமா? சரி.. எனக்கு கண்மணியை மூன்று வருடங்களாகவே தெரியும். மூன்று வருட காதல் இது! எனக்கொரு ஆக்ககர சக்தியாய் இருக்காங்க கண்மணி..எப்பவும் இருப்பாங்க”

“அர்ப்பணா பத்தி என்ன சொல்ல ? அர்ப்பணாவும் நானும் முதல் படம் நடிக்க ஆரம்பிச்சப்போ எந்த கிசுகிசுவும் வரல.. அவங்களுடைய ஒரு பிரச்சனைக்கு நான் சப்போர்ட் பண்ணப்போத்தான் கிசுகிசுக்கள் தொடங்கிச்சு. எனக்கு இன்றுவரைக்கும் புரியாத விஷயம் இதுதான்.. ஒரு பெண்ணை பாதுகாக்கவேண்டியது ஆணின் கடமை இல்லையா? அது நம்மளோட பொறுப்புதானே? அதற்கு காதலனாகத்தான் இருக்கனுமா? அப்படின்னா நான் கண்மணியை மட்டும்தான் காப்பற்ற முடியும்”என்று சிரித்தான் சத்யேந்திரன். அவன் தொடர்ந்து இன்னும் சில நிமிடங்கள் பேச, சரியாய் ஒரு மணி நேரம் ஆகும் வேளையில் கண்மணி சமிக்ஞை செய்ய,

“இனி அடிக்கடிபேச முயற்சி பண்ணுறேன்”என்ற சத்யன்,ஃபோனை கண்மணி பக்கம் திருப்பி,

“என் வாழ்க்கையில் புதுப் புது சந்தோஷங்களை தரும் என் வருங்கால மனைவிக்கு என் நன்றிகள். விரைவில் கல்யாண தேதியை இதே மாதிரி நேரலையில் வந்து சொல்லுறேன்”என்று கூறி விடைப்பெற்றான்.

அதுவரைக்கும் புன்னகை ததும்பிய முகமாக இருந்தவன், கண்மணியை தன் பக்கம் இழுத்து அமர வைத்து அவள் வயிற்றில் முகம் புதைத்தவாரு படுத்துக் கொண்டான்.

இன்னொரு பக்கம், தற்பொழுது பணிபுரியும் இயக்குனரிடம் பேசிக்கொண்டிருந்தாள் அர்ப்பணா.

“என்ன விளையாடுறீங்களா அர்ப்பணா.. பாதி படத்தை முடிச்ச பிறகு சொல்லுறீங்க?”

“சார், கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு எடுத்ததுமே சொல்லுறேனே.. கல்யாணம் பண்ணிட்டாவந்து சொல்லுறேன்?”என பொறுமையிழந்த குரலில்கேட்டாள் அவள்.

“என்ன சார் பிரச்சனை? கல்யாணம் ஆகிட்ட நடிக்க கூடாதா? என் வருங்கால கணவரே என்னுடைய வேலைக்கு துணை இருக்குறப்போ நீங்க என்ன சார்? என்ன சார் பிரச்சனை?”

“மார்கெட்.. அதுதான் பிரச்சனை..உங்களுக்குனு தனி ரசிகர் கூட்டமே இருக்கு.. கல்யாணம் ஆகிருச்சுனா அது அப்படியே இருக்காதும்மா.. நானும் ரிஸ்கு எடுக்க முடியாது..இதில் பல பேருடைய உழைப்பு இருக்கு..”

“மன்னிக்கனும் சார். என்னவோ நான் கல்யாணம் ஆகதவளாக இருக்குறதுனாலத்தான் எனக்கு ரசிகர்கள் இருக்காங்கனு சொல்லுற மாதிரி இருக்கு.. இது என் திறமைக்கு கிடைக்கிற இழுக்கு மாதிரி இருக்கு..ஒருவேளை அதுதான் உண்மைனா அப்படிபட்டரசிகர்கள் எனக்கு வேணாம் சார்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.