(Reading time: 21 - 41 minutes)

“நீ சொல்லும்போது என்மேல தப்பு இருக்குனு புரியுதுடா.. ஆனா .. ஆனா அம்மா இதுவரைக்கும் என்னை தப்பு சொன்னதே இல்லையே? எப்படி?”

“ஏன்னா அவங்க நீங்க கடந்து வந்த கஷ்டத்தை மட்டுமே முன்னிறுத்தி பார்த்து யோசிச்சிருக்காங்க. நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்தால் நிம்மதியா இருப்பீங்கனு நினைச்சிருக்காங்க.. ஆனா நான், எதிர்காலத்துல நீங்க இன்னும் கஷ்டப்பட கூடாது யோசிக்கிறேன்.

சினிமாவில் இருக்குறவங்களும் மனுஷங்கத்தான். இது மக்களுக்கு புரியலனு புலம்பி புலம்பி அந்த உண்மையை நீங்களே மறந்து போயிட்டீங்க. சினிமா உங்க தொழில் அவ்ளோதான். எல்லாருக்குமே அவங்கவங்க துறையில் சருக்கல் வெறுப்பு இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் கடந்து வரது இல்லையா? அந்த மாதிரிதானே நீங்களும் இதை பேஸ் பண்ணனும்.”

“சரி ..நான் பேஸ்பண்ணுறேன்.. நீ என்னை கைட் பண்ணு.. நான் எங்க தப்பு பண்ணுறேன்? என்ன பண்ணனும்னு சுட்டி காட்டு .. நான் காபரேட் பண்ணுறேன்.”என்றான் சத்யேந்திரன்.

“அப்படி வாங்க வழிக்கு..முதல்ல உங்க செல்ஃபொனை கொடுங்க!”என்று கண்மணி கை நீட்டிட தன் ஃபோனைத் தந்தான் சத்யன். அவளின் முதல் படி என்னவென்று அறியும் முன்னர், வாங்க அபி-ராகவை பார்ப்போம்.

ப்போ கல்யாணம் ? என்ற கேள்வியின் மூலமாகவே தான் அர்ப்பணாவின் மனதை படித்து வைத்திருப்பதை உணர்த்தினான் ராகவேந்திரன். சூரியனைக் கண்ட தாமரையென முகம் மலர்ந்தான் கன்னியவள்.

“ஹெலொ பாஸ் ஒரே நாளில் என்னை இப்படி கவிழ்த்தா எப்படி? கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரஸ் பண்ணலாம்ல?”என்று இயல்பான குரலில் தனது நெகிழ்ச்சியை அடக்கமுயற்சித்தாள் அர்ப்பணா.

“ஹா ஹா.. நீ எவ்வளவு இன்ப அதிர்ச்சிகளை தாங்குறன்னு நான் டெஸ்ட் பண்ணுறேன் அபி” என்று அவன் காதலுடன் அவளை நெருங்க அவன் கைவளைவில் சிக்கிக் கொள்ளாமல் ஓடி போய் ஃபோனை எடுத்தாள் அர்ப்பணா.

“கொஞ்சம் வேலை இருக்கு. இருங்க வரேன்”என்று ஃபோனுடன் அவள் நகர்ந்துவிட, ராகவும் அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

த்யனின் செல்ஃபோனை கையில் எடுத்த கண்மணி, அதில் யூடியுபில் சற்றுமுன் தான் பேசிய பேட்டியை அவனுக்கு காண்பித்தாள். ஊடங்கங்களின் வேகத்தை சரியாய் கணித்து வைத்திருந்த தன்னை தானே மனதில் மெச்சியும் கொண்டாள்.

“என்னடா இது?”

“இதுக்கே ஆச்சர்யபட்டா எப்படி? ஃபுல்லா கேட்டு முடிங்க”

“இதில் என்ன வில்லங்கம் இருக்கோ தெரியலையே!” என்றுநினைத்தவன் அவள் பேசியதை கவனிக்க ஆரம்பித்தான். காணொலியின் இறுதியில் இன்னும் சில நிமிடங்களில் சத்யன் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகார்ப்பூர்வமாக இணைந்து “லைஃப்”ஆக உரையாட போவதாக சொல்லியிருந்தாள். “நினைச்ச மாதிரியே நடந்துருச்சே”என்று மனதிற்குள் எண்ணினான் சத்யேந்திரன். விளக்கெண்ணை குடித்தது போல முகத்தை அவன் வைத்துக் கொள்ள கண்மணியோ,

“உங்க ரியக்ஷன் எல்லாம் அப்பறமா பார்க்குறேன். ஃபோன் கொடுங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு”என்று ஃபோனை பிடுங்கினாள்.

ன்னொருபக்கம், ராகவேந்திரனின் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் அர்ப்பணா.

“என்ன நீ இம்புட்டு வேகமா ட்ரைவ் பண்ணுற?” பயந்த குரலில் கேட்டான் ராகவ்.

“ஹா ஹா ..ஊரே பயப்படுற ஏசீபி என்னை பார்த்து பயப்படுறாரு.. வாவ்..”

“என்ன பண்ணுறது ஏசீபி இன் வாழ்க்கையே இப்போ உன் கையில் தானே இருக்கு?”

“அச்சோ ரொம்பதான். நான் ஒன்னும் அவ்வளவு வேகமா ஓட்டல. உங்க அதிரடி நடவடிக்கைகள் விட நான் எவ்வளவோ பரவாயில்லை..”

“இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கா?”

“இல்லன்னு சொல்ல மாட்டேனே..”

“அப்போ டைரக்ட்டாவே கேளு .. என்ன விஷயம்?”

“ வினய் எங்க? என்ன ஆனான்?”

“..”

“அவனை நீங்க வீட்டில் வெச்சு என்ன பண்ணிங்கன்னு நிரூ சொல்லிட்டா”

“நினைச்சேன்.. அந்த உளறுவாயி வேலையாகத்தான் இருக்கும்னு”

“ஹலோ அவ என் ப்ரண்டு”

“இப்போ எனக்கும் ப்ரண்டு..என் ப்ரண்டை நான் திட்டலாம்”

“ஹா ஹா.. சரி .. பேச்சை மாத்தாமல் சொல்லுங்க.. அவனை என்ன பண்ணீங்க?”

“என்ன பண்ண விட்டாள் நிரூ? அதான் என் கையை கட்டி போட்டுட்டாளே.. அவனை விட்டாச்சு?”

“இத நான் நம்பனுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.