(Reading time: 9 - 17 minutes)

16. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

பௌர்ணமி இரவில் வானமகள் குளிரொளியை பரப்பிக்கொண்டிருக்க தங்களை நெருங்கி வந்த நான்கு முகங்களைக் கண்ட இளவட்டங்கள் கண்ணிமைக்க மறந்து அவர்களை எழுந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்..

அகிலனின் வழிகாட்டலில் சிவசிஷ்யன் அன்னம் கருடன் என மூவரும் வந்தது அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தி இருந்தாலும்.. தியா மட்டும் வில்லன்களை எதிர்ப்பார்த்ததற்கு மாறாக ஹீரோக்களைக் கண்டதால் மனதில் சின்ன ஒரு சலிப்பு கொண்டாள்..

மென்னகையோடு தியாவை நோக்கியபடி இருந்த சிவசிஷ்யன் இப்பொழுது அனைவருக்கும் ஒரு புன்னகையை பரிசளித்து விட்டு அகிலனிடம் திரும்பி,”இவர்களுக்கு முதலில் உணவை பரிமாறு..”,என்றது..

அவரது கட்டளையை ஏற்றுக்கொண்ட அகிலன் தனது சிறகை ஒரு முறை பட படவென அடித்தது.. பனி மூட்டம் ஒன்று எதிர் வீட்டுத் திண்ணையில் உருவாகி சற்று நேரத்தில் மறைந்து விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட ஒரு டைனிங் டேபிள் உருவானது..

தனது உருவத்தை பெரிது படுத்திய அகிலன் அந்த டேபிளை தனது உருவத்தால் மறைத்து புரியாத ஏதோ பாஷையில் எதையோ முனுமுனுப்பாய் உரைத்து தனது இயல்பான உருவம் தரித்தது..

மண் பாத்திரங்களில் வித விதமான உணவு பதார்த்தங்கள் தயாராக கண்ணுக்கு விருந்தளிக்க இருக்க.. நான் சூடாக உங்களுக்கு ஏற்றதாய் இருக்கிறேன் என்பதாய் பதார்த்தங்களிலிருந்து வெளிவந்து ஆவி.. உணவின் மனமானது அனைவரது வாயிலிருந்து எச்சிலை ஒழுகச் செய்தது..

அகிலனை செயலை அனைவரும் ஒரு ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர் என்றால் எழில் மட்டும் பிரம்மிப்புடனும் ஒரு வித அலைபுருதளுடனும் பார்த்துக் கொண்டிருந்தான்..

டைனிங் டேபிளை நோக்கி தனது சிறகுகளை நீட்டிய அன்னம்,”நீங்கள் அனைவரும் மதியத்திலிருந்து எதுவும் உன்னவில்லையல்லவா..?? பசியாறுங்கள்..”, என்று அனைவருக்கும் கட்டளையிட்டது..

எதையோ கேட்க வாய் திறந்த ரிக்கியைத் தடுத்த கருடன்,”எந்த கேள்வியாக இருந்தாலும் உணவிற்கு பிறகு..”,என்று தனது சிறகுகளையும் அந்த டேபிளை நோக்கி நீட்டியது..

இளவட்டங்கள் சிறிது தயங்கினாலும் அவரவர் வயிற்றிலிருந்து எழுந்த ஒலியால்  பேசாமல் உண்ணத் துவங்கினர்..

இரவுணவு முடித்து விட்டு அனைவரையும் பொதுவாகப் பார்த்த கருடன்,”நாங்கள் அனைவரும் உங்களை ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கிறோம்..எங்களைத் தொடர்வீர்களாக..”,என்றது..

“எங்க கூட்டிப் போக போறீங்க..??”,என்ற மயாவின் கேள்விக்கு மென்னகையொன்றை பரிசளித்த அன்னம்,”இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து கொள்ளத் தானே போகிறீர்கள்..”,என்றபடி பறக்க ஆயத்தமானது..

இனி இந்நால்வரிடமிருந்தும்யாரிடமிருந்தும் பதிலைக் கறக்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் அவர்களின் பின் நடக்கத் துவங்கினர்..

சாந்தமிக்க சந்திரன் செல்லும் பாதையை வகுத்துக் கொண்டுக்க நான்கு பிரமுகர்களுடன் காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தனர் இளவட்டம்..

காற்றில் ஆடும் மரஞ்செடிகளின் ஒலி இவர்களின் பாதப் பதிப்பு..இதைத் தவிர வேறெந்த ஒலியும் கேட்கவில்லை அவர்களுக்கு..

மலைப்பாதையின் அருகில் வந்ததும் கருடன் குமிந்து கிடந்த மூங்கில் கம்புகளை சுட்டி,”ஆளுக்கு ஒரு கம்பை எடுத்துக்கொள்ளுங்கள்.. மலை ஏறுவதற்கு வசதியாக இருக்கும்..”,என்ற விட்டு ரிக்கி வ்ருதுஷ் மற்றும் தியாவின் கையில் ஒரு கட்டையில் துணியை சுற்றி அதில் (தீ) பந்தமேற்றிக் கொடுத்தது..

தியா முன்னால் நடந்து கொண்டிருந்த சிவசிஷ்யனை பின் தொடர மற்றவர்களும் அவர்களை தொடர்ந்து கம்பு ஊனி நடக்கத் துவங்கினர்..

நான்கைந்து மயில்களுக்கப்பால் சிவசிஷ்யன் தனது வேகத்தைக் குறைத்து தியாவிடம்,”அந்த பந்தத்தை இந்த பாறையில் இருக்கும் பொந்தில் சொருகு..”,என்றது..

சிவசிஷ்யன் கூறியது போல் சொருகி நிமிர்ந்தவளுக்கு அந்த பாறைக்கு எதிராய் எதுவோ திறக்கும் ஒலி கேட்டது..

“அந்த ஒலியை நோக்கி தான் நம் பயணம்..”,என்ற சிவசிஷ்யன் பாறையின் எதிர் திசையில் அனைவரையும் வழிநடத்தி அழைத்துச் செல்லத் துவங்கியது..

ஒரு பரலாங்கு முடிவில் ஒரு பறந்து விரிந்த நிலப்பரப்பின் கோடியில் அமைந்திருந்த சிறு காட்டாறை அடைந்தபின் தனது நடையை நிறுத்திய சிவசிஷ்யன் அனைவரிடமும் திரும்பி அவர்கள் அணிந்திருந்த காலணிகளை கழட்டச் சொல்லி விட்டு ஆற்றில் கால்களை சுத்தம் செய்ய சொன்னது..

காட்டாற்றின் ஓரமாய் வளர்ந்திருந்த ஒரு பெரிய வில்வ மரத்தை காட்டிய சிவசிஷ்யன்,”நீங்கள் தேடி வந்திருக்கும் சிவாலயம் அங்கு தான் உள்ளது..”,என்றது..

அது சொல்லி முடித்து தான் தாமதம் அனைவரும் அந்த மரத்தை நோக்கி விரைந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.