(Reading time: 9 - 17 minutes)

நிலத்தோடு நிலமாக பின்னிப்பிணைந்த படியே வில்வமரத்தடியில் நிலவொளியில் ரம்யமாய் கண்ணில் விழுந்தது சிவலிங்கம்..

மழை பெய்ததன் அறிகுறியாய் மர இலையிலிருந்து சிவனின் தலையில் சொட்டிக்கொண்டிருதது சில மழைத் துளிகள்..

சற்று தொலைவில் சிவனைப் பார்தபடியான ஒரு நந்தியின் சிலை..

“ரொம்ப ஆச்சர்யாமா இருக்கு.. எப்படி இந்த நடுக்காட்டில் கோயில் அமைத்திருக்கிறார்கள்..??”,என்றாள் க்ரியா..

“எல்லாம் மும்மூர்த்தி அரசனின் செயல்..”,என்றது அன்னம்..

“மும்மூர்த்தி அரசனா..?? யார் அவர்..??”,என்று கேட்டாள் தியா..

“உங்களுக்கு நன்றாக தெரிந்தவர் தான்.. அவரைப் பற்றி கண்டிப்பாக சொல்கிறேன்..”,என்ற கருடன் அனைவரிடமும்,”உங்கள் பணியை விரைவாக முடியுங்கள்..வேறு ஒரு இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும்..”,என்றது..

“எங்கே..??”,என்று கேட்ட எழிலுக்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்த கருடன் சிவசிஷ்யனுடனும் அன்னத்துடனும் சற்று தள்ளியிருந்த பாறையின் மேல் சென்று அமர்ந்து கொண்டது..

ங்க செவுவூரில் நமக்கு கிடைத்த ஓலைச்சுவடி போல் ஏதாவது கிடைக்குமா..??”,என்று கேட்டான் விக்கி..

“தெரியல விக்கி..தேடிப் பார்த்தால் தான் தெரியும்..”,என்ற எழில்,”ஆளுக்கு ஒரு திசையில் பார்க்கலாம்.. வித்யாசமாக ஏதாவது தென்பட்டால் சொல்லுங்க..”,என்றவன் நந்தியை சுற்றத் துவங்கினான்..

க்ரியா விக்கி மாயாவுடன் சுற்றுப்பகுதியை அலச தியா ரிக்கி இருவரும் லிங்கத்தை பார்வையிட எழிலுடன் இணைந்து கொண்டான் வ்ருதுஷ்..

கம்பை வைத்து நிலத்தைக் குத்திக் கொண்டிருந்த விக்கியை முறைத்த மயா,”இப்போ எதுக்கு இந்த குத்து குதற..சேறு மேல தெறிக்குது..”,என்றாள்..

“செழுவூர் கோயில் ரொம்ப பழமையானதுன்னு சொன்னீங்க.. அப்போ இதுவும் மோஸ்ட்டா பழமையானதாகத் தானே இருக்க வேண்டும்.. காட்டிற்கருகில் சில வருடம் பராமரிக்காமல் கோயில்கள் இருந்தாலே மண்ணில் புதைந்துவிடும்.. காட்டிற்கருகில் இருப்பதே புதைந்து போய் விடுகிறது என்றால் பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்தக் கோயில் கண்டிப்பாக சில அடியாவது மண்ணுக்கும் புதைந்திருக்கலாம் அல்லவா..??”,என்று லாஜிக்காக ஒரு கேள்வி எழுப்பினான்..

“யூ ஆர் அப்சலூட்லி ரைட் விக்கி..”,என்றாள் அவனது கேள்வியை கேட்டுக் கொண்டிருந்த தியா..

“அப்போ தோண்டி பார்க்கலாமா இந்த இடத்தை..??”,இது மயா..

“சுற்றிடங்களை தோண்டி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்..”,என்ற க்ரியா,”நந்தியின் சிலையையும் சிவனின் சிலையையும் பாருங்கள்..முக்கால்வாசி சிலை தான் வெளியில் தெரிகிறது.. மீதி மண்ணுக்குள் புதைந்திருக்கிறது..”,என்றாள்..

“ஓ கே.. தோண்டிப் பார்த்திடுவோம்..”,என்ற ரிக்கி தான் கொண்டு வந்திருந்த பேகிலிருந்து சின்னச் சின்ன மண்வெட்டிகளை எடுத்து அனைவருக்கும் கொடுத்தான்..

சிவலிங்கத்தையும் நந்தியை சுற்றியும் மண்ணை அகற்றியவர்கள் சிலையில் ஏதாவது எழுத்து பதிக்கப் பட்டிருக்கிறதா எனத் தேடினர்..

“க்ரியா நந்தியுடைய சிலையில் எந்த எழுத்துக்களும் இல்லை..”,என்றாள் மயா உதட்டை பிதுக்கிய வண்ணம்..

“இங்கேயும் அதேதான்..”,என்று பதிலுக்கு கத்தினாள் சிவலிங்கத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த க்ரியா..

“சிலைகளில் மட்டும் தான் எழுத்துக்கள் பதித்திருக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லையே..”,என்றான் ரிக்கி..

“சரி தான் ரிக்கி.. மே பீ இந்த சுற்றிடத்தை லேசா தோண்டிப் பார்த்தால் என்ன..??”,இது எழில்..

சரி தோண்டுவோம் என்று ஒத்துக்கொண்ட அனைவரும் மேல ஒரு பிடிமானதிற்காக எடுத்து வந்த கொம்புகளை ஒரு பக்கம் மட்டும் கூர்மையாக கத்தியால் சீவி குழி தோண்டத் துவங்கினர்..

நந்தியின் பாதத்திலிருந்து லிங்கத்தின் பாதை வரை கருங்கற்களால் ஒரு நடைபாதை ஒன்று தென்பட்டது..

“என்னடா இது ஒண்ணுமே கெஸ் பண்ண முடியல..”,என்றாள் மயா எழிலிடம்..

“எதையோ நம்ம மிஸ் பண்ணிட்டோம் மயா..”,என்ற எழில் லிங்கதிற்கும் நந்திக்கும் இடையில் இருக்கும் நடைபாதையில் நடைபயிலத் துவங்கினான்..

“எனக்கு பயங்கரமா கால் வலிக்குது.. ஒரு டூ மினிட்ஸ்..”,என்ற க்ரியா வில்வமரத்தை ஒட்டியிருந்த ஒரு கல்லில் அமர்ந்தவாக்கில் மரத்தில் சாய்ந்து அமர்ந்தாள்..

சிறிது நேரத்தில் சோர்ந்த விக்கி க்ரியா அமர்ந்திருந்த மரத்திற்கு அருகில் வந்து அவள் அருகில் இருந்த மற்றொரு கல்லில் அமர்ந்து கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.