(Reading time: 12 - 24 minutes)

“அட கிறுக்கி... சாணம் தெளிக்கிறதே கொசு வராம இருக்கத்தான்.. அது தெரியல உனக்கு.. என்ன படிப்ப படிச்சியோ.. “

“ஆச்சி.. உன் பேத்தி தான நான்.. உனக்குள்ள அறிவு எனக்கும் இருக்கும்.. நீ சொன்னது எல்லாம் சரிதான்.. சாணமே நல்லது தான்.. ஆனால் முன்ன எல்லாம் ஆடு மாடு இது எல்லாம் வீட்டிலே பிள்ளைய வளர்க்கிற மாதிரி வளர்த்தாங்க.. நம்ம வீடு காய்கறி குப்பை, மீந்த சாப்பாடு, வைக்கோல் புண்ணாக்கு இது எல்லாம் போட்டாங்க.. மாடும் ஆரோகியமா இருந்தது.. அதிலே கிடைக்கிற பொருளும் ஆரோக்கியமா இருக்கும்.. இப்போ எல்லாம் மாட்ட எங்க வீட்டிலே வளர்க்கிறாங்க.. அது தெரு, தெருவா மேய விட்டுறாங்க.. அதுக்கு சாப்பாடு செவுத்து போஸ்டரும், குப்பைதொட்டிலே கிடைக்கிற பிளாஸ்டிக் பேப்பரும் தான்.. அதில் என்ன நல்லது இருக்கும்.. அதான் இந்த முறை சாணி எல்லாம் வேண்டாம்ன்னு நாதான் உன் மருமவ கிட்ட சொன்னேன்.. போதுமா ? “

“அதுக்கு வழி வழியா செய்யறத எப்படி விட முடியும்.. கண்ணு.. ?” இப்போ ஆச்சியின் குரல் கொஞ்சம் தழைந்து விட்டது..

“நான் வீட்டிலே சேர்த்து வைக்க வேண்டாம்னு தான் சொன்னேன்.. பண்டிகைக்கு கொண்டு குடுக்கிற மாதிரி பேசி வச்சிருக்கோம்.. நீ ரொம்ப வம்பு பண்ண, பொங்கலுக்கு பதில் தீபாவளி கொண்டடிவோம் பார்த்துக்கோ.. “

“என்னது தீபாவளி கொண்டாடுவியா? எப்படித்தா ?”

“ஹ்ம்ம்.. உன் வாயிலே அணுகுண்டு வெடிச்சுடுவேன் பார்த்துக்கோ “

“ஆத்தாடி.. நீ செஞ்சாலும் செய்வத்தா.. “ என்று வெற்றிகரமாக பின் வாங்கியவர்,

“ஏன் கண்ணு.. உங்கிட்டே கோபபடுவேனா.. “

“அப்போ எங்க அம்மா கிட்டே மட்டும் கோப படுவியோ “

“அப்படி இல்ல கண்ணு.. எனக்கும் உங்கப்பனையும், ஆத்தாளையும் விட்டா யாரு இருக்கா.. சும்மா வம்பு வளர்க்கிறது தான்.. “

“அப்போ எதுக்கு காலைலேர்ந்து சவுண்ட் விட்டுட்டு இருக்க..?”

“உங்கம்மா நான் சொன்னா எப்பாடு பட்டாவது செஞ்சுடுவா.. ஆனா அவ புள்ள நீன்னு வரும்போது உன் இஷ்டத்துக்கு தான் விடுவா.. அதான் அவள சீண்டி உன்ன செய்ய வைக்கலாம்னு நினைச்சேன் ராசாத்தி..”

“ஆச்சி.. நான் உன் பேத்தி தான்.. நீ சொன்னாலும் நான் கேப்பேன்.. ஆனா அதுக்குன்னு காலத்துக்கு ஒத்து வராத மாதிரி எதுவும் சொன்னதான் கேட்க மாட்டேன் புரியுதா ?”

“நான் சொல்றத புரிஞ்சிக்கோ புள்ள.. நீ கல்யாணம் கட்டி போற இடத்துலே நம்ம வழக்கம்ன்னு உன்கிட்ட கேப்பாங்க.. அப்போ நீ என்னனு தெரியாம முழிச்சுகிட்டு நின்னா , உன்ன அப்படி வளர்த்த எங்கள தான் குறை சொல்லுவாங்க.. அதான் உனக்கு தெரியனும்நு சொல்றேன்..”

“முதலில் ஒன்னு புரிஞ்சிக்கோ .. நீ சொன்ன எல்லாமும் நம்ம வீட்டிலே இதனை வருஷமா செஞ்சுகிட்டுதானே இருக்கோம்.. இந்த ஊர்லே இருக்கிறவங்க யாரும் வீட்டு வாசலிலே பொங்கல் வைக்கிறாங்களா.. நாம வருஷந்தவராம வீட்டு வாசலில் மண் அடுப்பு, வெண்கல பானையில் தானே வைக்கிறோம்.. அத நானும் பார்துக்கிட்டுதானே இருக்கேன்.. இப்போ நீ சொன்ன மத்தது எல்லாம் நானும் செய்யரவ தானே.. அப்போ ஏன் இந்த பயம் உனக்கு? அதோட நீ என்னவோ நான் ஊரு பக்கம் கட்டிக்கிட்டு போவேன்னு நினைசுகிட்டு இருக்க.. எனக்கு வாறவன் இந்த ஊர்காரனா இருந்தா என்ன பண்ணுவ ?” என்று விளையாட்டாக கேட்டாள்.

இப்போது அவள் ஆச்சி “மலரு... “ என்று அதட்டினார்..

வடிவு சற்று வம்பு சண்டை போடுபவராக இருந்தாலும், மலரின் மேல் மிகுந்த பாசம் உடையவர்.. அவரின் அழைப்பு எல்லா கண்ணு, செல்லம் என்று தான் இருக்கும்.. அவர் மலர் என்று அழைத்ததே இல்லை எனலாம்.. இப்போ இப்படி கூப்பிடவும், அதிர்ந்து விழித்தாள்..

அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தவர் , தன்னை கட்டுபடுத்திக் கொண்டவர்,

“விளையாட்டுக்கு கூட அந்த மாதிரி சொல்லாதத்தா.. உனக்கு வாறவன் நம்ம ஊர் பக்கம் உள்ளவன்தான் வருவான்.” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார்.

மலர் புரியாமல் தன் தாயை பார்க்க, அங்கே அவள் அப்பாவும், அம்மாவும் ஏதோ ஜாடையில் பேசிக் கொண்டார்கள்..  அதோட அவளை கண்டு ஒரு பெருமூச்சும் விட்டனர்..

மலரின் அப்பா தன் தாயை தேடி போக, மலரின் அம்மாவோ சமையல் கட்டிற்கு சென்றார்.. அவரை தொடர்ந்த மலர்,

“அம்மா.. என்னம்மா ஆச்சு.. ஆச்சிக்கு.. ? விளையாட்டா பேசிட்டு இருந்தா தீடிர்னு இவ்ளோ சீரியஸ் ஆகிட்டாங்க.. அதோட அவங்க ஏதோ முடிவு பண்ணி பேசற மாதிரி இருக்கு.. ?”

“ஒன்னும் இல்லைடா.. அவங்களுக்கு ஊர் விட்டு வந்த ஏக்கம் அதிகமா இருக்கு.. அதான் அப்படி பேசிட்டு போறாங்க.. ?”

“அது இருக்கட்டும்.. அதுக்காக என் கல்யாணம் வரைக்கும் அவங்க யோசிச்சுட்டு இருக்காங்க..”

“ஆமாம்மா. அவங்களுக்கு உன்னை ஊர் பக்கம் கட்டி கொடுக்கணும்னு நினைப்பு.. உங்க அப்பா கிட்டே அதுக்கு சம்மதமும் வாங்கிடாங்க.. “ என்று சொல்ல, அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டாள் மலர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.