(Reading time: 9 - 17 minutes)

தனித்திருந்த இருவருக்குள்ளும் எண்ணற்ற எண்ண அலைகள்!!

"லவ் பண்றீங்களா சிவன்யா?"-திணறியது அவன் குரல்.அவளிடம் பதில் இல்லை.

"உங்க பர்ஸ்னல்ல தலையிட நினைக்கலை.ஐ ஆம் ஸாரி!நான் கிளம்புறேன்!"-வேறு ஏதும் உரையாடாமல் எழுந்தான் அவன்.அவனது விலகல்,அவளுக்கோ பெரும் ஏமாற்றம்!!மனம் சுக்கலாய் உடைந்திருக்க,அவளிடமிருந்து விலகி நடந்தான் அசோக்.விருப்பம் ஏதும் நிறைவேறாத ஒரு அழுத்தம் அவன் மனதுள்!!

"ரத்தன் காரை எடு!"-என்று கார் கதவை  திறந்தவன்,அவன் சிவன்யாவின் குரலால் தடுக்கப்பட்டான்.

"ஒரு நிமிஷம் கலெக்டர் சார்!"

"............"

"பேசணும்!"-உறுதியாக உரைத்தாள் அவள்,அச்சங்கள் ஏதுமின்றி!!

"சொல்லுங்க!"

"தனியா பேசணும்!"-அவள் கூற்றை கவனித்த ரத்தன்,மெல்ல அங்கிருந்து நழுவிக் கொண்டான்.

"சொல்லுங்க!"

"நீங்க ஏன் அப்படி சொன்னீங்க?"

"என்ன சொன்னேன்?"

"பர்ஸ்னல் விஷயத்துல தலையிட விரும்பலைன்னு!"

"ஓ...ப்ச்!என்ன தான் கலெக்ட்ரா இருந்தாலும்,உங்களுக்கு நான் யாரோ தானே!நம்ம சில சந்திப்புகள் நமக்குள்ள ஒரு நல்ல உணர்வை வளர்த்தாலும்,நான் அதை அடிப்படையாக வைத்து உங்க தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்துக் கொள்ள...."-பேசிக் கொண்டே சென்றவனின் வாயை பொத்தினாள் சிவன்யா.அவளது அச்செய்கை உண்மையில் அவனை திகைப்படையவே வைத்தது.என்ன செய்கிறாள் இவள்?என்ற வினா அவன் மனதுள் எழுந்தாலும்,அவள் எடுத்த உரிமையை பறிக்க துணிவில்லாததாய் நின்றது அவன் மனம்!!

"நான் ஒருத்தரை லவ் பண்றேன்!அது யாருன்னு தெரியணும்.அவ்வளவு தானே!"-அவன் இமைக்காமல் அவளை பார்த்தான்.ஒரு நொடி கண்களை இறுக மூடி,மூச்சை உள்வாங்கி,தைரியத்தை வரவழைத்தவள்,சற்றே நிமிர்ந்து அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒரு நொடி ஒற்றி எடுத்தாள்.அவளது அச்செய்கையே அவனது அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்தது.உலக சுழற்சி நின்றுபோக,சிலையாகி போனான் அவன்.அவன் வினாவிற்கு விடையளித்த பூரிப்பு தேகத்தின் அங்கம் எங்கிலும் பரவி,அவளிடத்தில் பெண்மையின் குணங்கள் விழித்துக்கொள்ள,ஒரு நொடி அவன் முகம் பார்த்து புன்னகைப் பூத்தவள்,அங்கிருந்து விலகி மறைந்தாள்.

ஆம்...!அவளது மனதின் ஆழத்தினை அவள் கூறிவிட்டாள்!அவள் எடுத்த உரிமை கூறிவிட்டது.முதன்முதலாய் அந்த ஆணின் மனமும் நாணத்தை உணர்ந்து , முகமும் மலர, அன்றுவரை தலைகீழாய் சுழன்ற அவன் பூமிப்பந்து,அந்நொடி காலத்தை நேருக்கு நேராய் துணிவுடன் நிமிர்ந்துப் பார்த்தது.

ந்தத் தைரியத்தில் அவனிடம் அப்படி நடந்துக்கொண்டேன்!என்ற எண்ணமே அவளை நிலையில்லாமல் தவிக்க வைத்தது.முகம் முழுதும் மலர்ந்தப்படி தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்ட புதல்வியை புரியாமல் பார்த்தார் உதயக்குமார்.

ஏனோ அவன் அருகாமை,அவன் அல்லாத நிலையிலும் இருப்பதாய் ஓர் உணர்வு அவளுக்குள்!!

"அவர் என்னை ஏற்பாரா?"-என்ற வினா அவளுள் மெல்ல எட்டிப் பார்த்தது.உடனடியாய் அனைத்து மலர்ச்சியும் தொலைந்துப் போனது.

"அவர் என்னை தவறாக எண்ணிவிட்டால்??நான் ஏன் அவ்வாறு ஒரு காரியம் புரிந்தேன்?"திடீரென முகம் வாடியது.காதலை கூற கேட்டவர்களை விடவும்,அகிலத்தில்,காதலை கூறியவர்களுக்கே பதற்றம் அதிகம் போலும்!!

ன்றைய மாலைப்பொழுது...

காலை நிகழ்ந்த நிகழ்விற்காக மனம் எண்ணற்ற வினாக்களால் தவித்திருந்தது அவளுக்கு!!நன்றாக இருட்டிய சூழலில் மனதை அமைதியுற செய்ய தனித்து சாலையில் நடந்தாள் சிவன்யா.அசோக்கின் அருகாமை ஒரு புறம் அவளுக்கு குளிரும் நிலவாகவும்!மறுபுறம் அவன் எண்ணங்களை எண்ணி தகிக்கும் தனலாகவும் இருந்திருக்க,ஊசி குத்தும் குளிரில் தனித்து நடந்தாள் அவள்.

"ஏன் தனியாக செல்கிறாய்?நானும் உடன் வரவா?"என்று உடன் வர ஆயத்தமானது சாரல் மழை.ஏனோ அச்சூழல் சற்றே எரிச்சலூட்ட,மழையை வெறுத்தது அவள் மனம்!!தடுமாறி நின்றவளுக்கு பாதுகாப்பாய் குடை பிடித்தான் அசோக்.திடீரென உருவான கவசத்தை எதிர்நோக்கியவள் உறைந்துப் போனாள்.

"நீ...நீங்களா?"

"ம்....சும்மா ரௌண்ட்ஸ் வந்தேன்!"

"ம்..."

"குளிரில் ஏன் கம்பளி கூட இல்லாம?"

"அது...வந்து...மறந்துட்டேன்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.