(Reading time: 9 - 17 minutes)

"ம்...இதைப் பிடிங்க!"-குடையை அவளிடம் அளித்தவன்,தான் அணிந்திருந்த கம்பளி ஆடையை கழற்றி,அவள் மீது போர்த்தினான்.அது அவளது தேகத்திற்கு மட்டுமன்றி,அவள் இதயத்திற்கும் அரவணைப்பை நல்கியது.அவள் முகத்தை உற்று நோக்கியப்படி குடையை வாங்கிக் கொண்டான் அசோக்.நான்கு கால்களும் ஒரே திசையில்,ஒரே பாதையில்,ஒரே நேரத்தில் தங்கள் பயணத்தை தொடர்ந்தன.அவனது அருகாமை எண்ணற்ற படபடப்புகளை ஒன்றாக அவளுடன் பிணைத்திருக்க,நிசப்தங்கள் சப்தமாய் ஒலித்தன.

"அது...நான் உங்கக்கிட்ட பேசணும்!"-தடுமாறினாள் சிவன்யா.

"சொல்லுங்க!" நடைப்பயணம் நின்றது.

நீண்ட நேரமாய் முயன்றாள்.ஆனால்,இதழ்களிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன.ஒரு குடைக்கீழ் எதிரெதிராய் நின்ற இருவருக்குள்ளும் எண்ணற்ற எதிர்ப்பார்ப்புகள்!!அவள் கேட்க விரும்பும் வினாவை அக்கருவிழி நோக்கியே கண்டறிந்தான் அசோக்.அதற்கு பதில் கூறுவதாய்,தனது கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.அவனது எண்ணத்தை பெருமளவு ஊகித்தவள்,அவனது கரத்திற்கு தனது கரத்தினை துணையாக நல்கினாள்.

"இனி,நான் இருக்கும் வரை,இந்தப் பாதுகாப்பு உடையாது!"என்றான் மென்மையான குரலில்!!சொல்லாமல் சொல்லப்பட்ட காதல்,அவள் உயிரினில் பரவிய மழைச்சாரலாய் சிலிர்க்க செய்ய,அவளது சிரம் தன்னிச்சையாக நிலம் நோக்கியது.

"ஆனா...ஒரு முக்கியமான உண்மை தெரியணும்!"-என்றான் மௌனத்தை கலைக்க!"

"என்ன?"

"அது தெரிந்து இந்தக் காதல் இருந்தா,மேற்கொண்டு யோசிக்கலாம்!"

"என்ன?"

"நாளைக்கு காலையில சொல்றேன்!-தயக்கமடைந்தது அவன் குரல்!!

"உங்களை வீட்டில் விட்டுவிடுறேன் வாங்க!"-வேறு ஏதும் கூறாமல் அவளை அழைத்தான்.அவளது மனதில் அவன் வார்த்தைகள் மட்டும் ஒலித்தவண்ணமே இருந்தன.

பாலைவனத்தில் சில நேரம் ஊற்றெடுக்கும் நீரானது,பல நேரங்களில் வழிப்போர்க்கர்களுக்கு அமிர்தச்சுவையாய் தித்திக்கும்.வளம் கொழித்த பூமி என்றாலும்,மக்களின் தாகம் தணிக்க பருகப்படும் நீரே சுவை மிகுந்து காணப்படும்.ஆம்..!இன்று அவன் பாலையில் கங்கை நீர் சுரந்தது!!கங்கை வந்துவிட்டாள்!!அவன் துயர் களைய!!அவன் நிம்மதியாய் துயில் கொள்ள!கங்கை வந்துவிட்டாள்.ஆனால் நிரந்தரமாய் வந்தாளா????

Episode 05

Episode 07

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.