(Reading time: 11 - 21 minutes)

17. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

இந்த வீக் ரொம்ப குட்டி எப்பி.. நிறைய பேசர்னல் வொர்க் வந்ததால எழுத முடியல..

அட்ஜஸ்ட பண்ணிக்கோங்கஸ்பெல் செக் கூட பண்ணல.. smile

சிவாவ நீங்க விரும்புறீங்கன்னு தெரிஞ்சப்பவே உங்கக்கிட்ட அவர் எல்லாத்தியும் ஷேர் பண்ணிருப்பாரு நினைச்சேன்.. மேபீ காவ்யாவுக்கு வேணும்னா அது தெரியாம இருந்திருக்குனு எனக்கு ஒரு தாட்…” - ரிஷி

“ஹலோ இப்டி மென்னு முழுங்காம மேட்டருக்கு வர்றீங்களா?” – காவ்யா

வெற்றிடத்தில் பார்வையை பதித்திருந்தவன், இப்போது காவ்யாவைப்பார்த்தான். துருதுரு கண்களுடன் இவனது வார்த்தைகளுக்கு எதிர்நோக்கி ஆர்வமாய் அவனைப் பார்த்திருந்தாள்.

“அவந்திகா, அவதான் சிவாவோட மிஸஸ். அழகான பெண், சிவாவோட அப்பா அருள் பிரகாஷோ ‘லீகல் கன்சல்டேஷன் ப்ரொவைடிங்க் கம்பெனியோட ஒன் ஆஃப் த பார்ட்னர் அண்ட் அருள் அங்கிள் ஓட பெஸ்ட் ஃப்ரண்ரோட பொண்ணுதான் அவ!”

“செம ப்ரையினி.. லா படிக்காட்டி கூட  அவங்கப்பாவோட நிறைய டீல் கன்சல்டேஷன அவ பார்த்திட்டு இருந்தா, நான் ஜெர்மென்ல ஸடடீஸ்க்காக போனப்ப ஐ மெட் ஹெர்…அப்படிதான் எனக்கு அவந்திகாவ தெரியும்..அவங்களப்பத்தி எனக்கு தெரிஞ்சவரைக்கும் ஷீ வாஸ் இன் எ ரிலேஷன்ஷிப் வித் அ ஜெரிமன் கை தேர்…”

“ஹான் அப்படியா?” – இது காவ்யா. வாய்விட்டு கேட்டாள். திரும்பிப்பார்த்து புன்னகைத்தவன், தர்ஷினியின் முகத்தைப்பார்த்து தொடர்ந்தான்.

“ம் எஸ்.. அது கன்ஃபார்ம் தான்.. பிகாஸ் அவங்களே இத எங்கிட்ட ஒரு தடவ ஷேர்  பண்ணினாங்க, அன்ட் அவங ஒரே வீட்ட ஷேர் பண்ணிக்கிட்டாங்க..எல்லா பார்ட்டீஸ் அன்ட் பிஸ்னஸ் மீட்டுலயும் அவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து தான் பார்த்திருக்கேன்..”

“ஒன் இயர் கழிச்சு நான் சென்னை வந்தப்ப.. ஷீ வாஸ் எங்கேஜ்ட் வித் சிவா”

“பட் அவங்க எங்கேஜ்மென்ட் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு அப்புறம் தான் வெளில சொன்னாங்க.. எனக்கு தெரிஞ்சு சிவா அப்ப வெரி பிஸி இன் ப்ராக்ட்டீஸ்..அவரு இங்கயும் வெளிநாடுமா இருந்தாரு..அப்புறம் கொஞ்ச நாள்ல சிவாவோட அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு.. இதுல ஒரு மோசமான விசயம் என்னன்னா அவங்க அப்பா டெத்க்கூட அவந்திகா வரல, அவளோட பேரண்ட்ஸ் தான் இருந்தாங்க..”

“நீ பார்க்காத நேரம் அவ அங்க வந்திருக்கலாம்..இல்லனா உனக்கு சரியா தெரியாம கூட இருந்திக்கலாம் இல்ல..” – காவ்யா

“ஹான் அன்னைக்கு நான் உன்ன மாதிரி தான் நினைச்சேன், அந்த வீக் என்ட் ஐ மெட் ஹெர் இன் எ பப் நியர் ஈசியார்…”

“கடவுளே…! இவன் வேறென்ன வேலையெல்லாம் பண்ணினானோ.. பப்பு மப்பு.. இந்த ஃப்ளாஷ் பேக் முடியட்டும் டீ.. அப்புறம் உன்ன கேக்குற விதத்துல கேக்குறேன்..!” இப்படியாக காவ்யா.. ரிஷி அவன் போக்குக்கு பேசிக்கொண்டிருந்தான்..

“பட் அன்னிக்கு அவகிட்ட பேசுற நிலைமைலலாம் இல்ல, அவ டெம டைட்.. அவளப்பார்த்ததோட சரி அப்புறம் அவங்க மேரேஜ் தான்..”

“டைட் நா?” – காவ்யா

“ட்ரக்..”

“போதையா?”

“ம் ஆமாம் நிறைய யங்ஸ்டர்ஸோட உயிரையும் வாழ்கையும் நாசமாக்கிற போதை!” – ரிஷி

“அது அவந்திகாவோட லைஃபையும் குடிச்சுட்டுனு தான் நான் சொல்லுவேன்!”

“கல்யாணம், ரிஷப்சன் இதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்ல, அப்போ அங்க அவளப்பார்த்தபோது ஷீ வாஸ் ஹேப்பிட்டூ மேரி சிவானு தோணுச்சு”

“ஆனா அடுத்த கொஞ்ச நாளைலேயே அவங்க இரண்டு பேருக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனை…ஒரு தரவ பப்புக்கே டேரக்டா வந்து சிவா, அவந்திய இழுத்துட்டுபோனதா ஃப்ரண்ட்ஸ் சொன்னாங்க..”

“அவங்க கல்யாணமாகி ரொம்ப ஷாட் டைம்ல அவங்களுக்கு பேபி பிறந்திட்டு, மேபி கல்யாணத்திற்கு முன்னாடியே அவங்க…ஐ டோன்ட் நோ.. பட் பேபி பிறந்த கொஞ்ச நாள்ல அவந்திகா டிவர்ஸ் அப்ளை பண்ணினா.. அது தெரியும்.. பட் அதுக்கு சிவா முடியாதுனு சொல்லிட்டார்.. ஈவன் அவந்திகா ஃபேமிலி கூட சிவாக்கு தான் சப்போர்ட்”

“ஆனா அவந்திகா அவ்ளோ ஈசியாலாம் ஒத்துகல.. கிட்டத்தட்ட ஒரு வருஷம் இரண்டு பேருக்கும் நிறைய பிரச்சன..சிவாவோட ஆஃபீசுக்கு ஒரு தரவ அவ வந்து பயங்கறமா கத்தி பிரச்சன பண்ணினதா கூட நாள் கேள்விபட்டேன்..சிவாவ அவ நிறைய இடத்துல அசிங்க படுத்தி தாறுமாற.. ச அதெல்லாம் ரொம்ப கொடுமைதான்…”

“ஒரு நிமிஷம்.. ரிஷி, சிவாவ அவங்க ஏன் திட்டனும், டிவர்ஸ் தரலேங்கிறதுக்காகவா..?”

“ஆக்சுவலா அவங்ககுள்ள ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் முதல்ல இருந்தே இல்லங்கிற மாதிரி ஐ ஹீயர்டு..அவந்திகாவோட அப்பா அவங்க சொத்தெல்லாத்தையும் அவந்திகா-சிவாவோட பேபி மேல எழுதிட்டாங்க.. சோ ப்ராப்பர்டி வைஸ் ஷீ கான்ட் கெட் எனிதிங்க்.. அப்புறம் இவரும் டைவர்ஸ் தரலா கோட்ல, அவந்திகா ஒரு ஹிஸ்டீரியா பேஷன்ட்னு சொல்லி அவங்கக்கிட்ட பேபிய கொடுக்கமுடியாதுனு சொல்லிட்டாரு சிவா..சோ வேற வழியே இல்லாம சிவாகூட இருக்கிற நிலைமை.. அதுவும் அவ்வளவு ஈசீ இல்லனு வர்றப்ப ஷீ அட்டம்ப்ட் சூசைட்.. தூக்கு மாட்டீட்டு..”

“ப்ளீஸ் ரிஷி போதும்…இதுக்கு மேல சொல்லாத பயமா இருக்கு!” இரண்டு கைகளையும் காதில் வைத்து முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனைப்பார்த்தாள் காவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.