“நீ எல்லாத்தையும் இழுத்துப்போட்டுட்டு செய்யாத, அதுக்கெல்லாம் நமக்கு ஆள் நிறைய இருக்கு, நின்னு மேற்பார்வை பார்த்தா போதும்!” – கலைவாணி சொன்னதற்கும் அவன் தலையசைத்தான். மனமெங்கும் மகிழ்ச்சி பொங்கியது, இந்த நாளிற்காக அவன் எத்தனை நாளாய் காத்திருந்தான்.
விக்னேஷ் காரைக்கிளப்பும்போது, “டேய் விக்கி, நான் கண்ணாடிய செல்விகிட்ட வச்சுட்டேன்னு நினைக்கிறேன்!” என்றார் கலை. அவன் இறங்கி உள்ளே போனான். அவன் போனதும், “இலா அடுத்து உனக்கும் நல்ல பெண் பார்க்க வேண்டியதுதான்” என்றார் கலை. இவ்வளவு நேரம் இதயத்தின் ஓரத்தில் அவ்வப்போது எட்டிப்பார்த்த முகம், இப்போது மனம் முழுவதும் விரிந்தது.
விக்னேஷ் வீட்டிற்குள் சென்று, செல்வியின் அருகே கண்ணாடியைத்தேடினான், “இதையா தேடுறீங்க?” அவள் குரலுக்கு முகம் பார்க்கும்போது தாமரையென மலர்ந்து புன்னகைத்தாள். அவள் கைகளில் இருந்தது கண்ணாடி கூடு.
“ஹேய் விழுச்சிட்டா இருக்க.. இப்ப எப்படி இருக்கு?”
“நல்லா இருக்கேன், கால்ல மட்டும் கொஞ்சம் வலி இருக்கு!” எழுந்து அமர்ந்தாள்.
“ஸ்ட்ரெயின் பண்ணாத!” அவள் அருகே கட்டிலில் அமர்ந்தான்.
“உங்களுக்கு ஒன்னும் ஆகாலல்ல..” அவள் வார்த்தைகளில் உண்மையான வருத்தமிருந்தது.
இதழ் பிரிக்காத புன்னகையுடன் இல்லையென தலையசைத்தான். “ரொம்ப பயந்திட்ட இல்ல?”
“இல்ல நான் பயப்படல.. நீங்க இருக்கீங்கன்னு தைரியமாதான் இருந்தேன்..”
“அப்ப ஏன் பயமாய்ருக்குனு சொன்ன?” கண்ணை சிமிட்டி கேட்டான்.
ஓரிரு நொடி மௌனத்திற்கு பிறகு, “உங்கக்கிட்ட சொல்லவந்தத முழுசா சொல்லாமலே செத்திருவனோன்னு தோணுச்சு அதான்!” அவள் முடிக்கும்போது, தன் வலது கையால் அவள் வாயைப்பொத்தினான்.
“ஏய், லூசா நீ!”
அவள் உடம்பு சில்லிட்டிருந்தது. அவன் கைவிரல்கள் சூடாய் இருந்தது. தன் இருகைகளால் அவனது கையைப்பற்றிப்பார்த்தாள். உள்ளுணர்வுக்கு என்னப் புரிந்ததோ? தன் வலது கையை அவன் நெற்றியின் மீது வைத்தாள். அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டது. பிரிந்திருந்த சட்டை பொத்தானின் உள்ளே ஒரு கையை வைத்து அவன் உடல் சூடை அவள் அறிய முற்பட, அவளை இழுத்து அனைத்துக்கொண்டான் அவன்.
“உங்களுக்கு காய்ச்சல் அடிக்கு” அவன் மார்பின் அனைப்பில் முகம் புதைத்துக்கொண்டே சொன்னாள்.
“இல்ல நீ தொட்டதால சூடேறிருக்கும்!”
“இருக்கும் இருக்கும் இப்ப எங்கம்மாவோ இல்ல அத்தையோ உள்ள வந்தா உண்மையா காய்ச்சல் வந்திடும்!”
அவன் சிரித்துக்கொண்டே அவளை விலக்கினான். அவளுக்கு ஏமாற்றமாய் தான் இருந்தது. “கிளம்புங்க” அவள் நீட்டிய கையைப்பார்த்தான். கையைப்பற்றி கண்ணாடி கூடை வாங்கிக்கொண்டு கண்ணடித்து கிளம்பினான். அவன் செல்லும் திசையையேப்பார்த்திருந்தாள் அவள். அவ்வளவு நேரம் உடலுள் மறைந்திருந்த வலியை அப்போதுதான் உணர்ந்தாள். எனினும் அது வலியாய் தோன்றவில்லை.
தொடரும்
{kunena_discuss:1120}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.