(Reading time: 24 - 47 minutes)

16. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

லுவலகம் முடிந்து இரவு விக்னேஷ் வீட்டிற்குள் நுழைந்ததும், அவனது அம்மா கலைவாணி அவனது வாயில் துளி இனிப்பை ஊட்ட, கேள்வியோடு அதனை மென்றவன், ஏதும் கேட்காது, நாற்காலியில் அமர்ந்து செய்திதாளை புறட்டிக்கொண்டிருந்த தனது தந்தையைப் பார்க்க அவர் புன்னகைத்தார். வீட்டிற்குள் நுழைந்தவன் ஆடையை மாற்றிவிட்டு தன் அறைக்கு செல்ல எத்தனிக்க அவனது அம்மா அவனை அழைத்தார்.

“டேய்.. இங்க என்ன நடக்குதுனு கூட கேட்காமா அப்படி என்னடா உனக்கு முக்கியமானவேலை?”

மாடிப்படிகளில் ஒன்றிரண்டை கடந்திருந்தவன், கீழே இறங்கிவந்தான்,

“என்ன சொல்லுங்க?” விட்டேற்றியாய் கேட்டவனின் கைகளைப்பற்றி, தன் அருகே அமர்த்தினார் கலைவாணி. நானும் ஒரு மாசமா பார்க்குறேன் ஒழுங்கா சாப்பிட மாட்டிக்கிற, வீட்டுக்கும் வரமாட்டிக்கிற, கேட்டா வேலை வேலைனு சொல்ற, உன் முகமே சரியில்லை, நீ இப்படி இருந்தா நாங்க எப்படிடா நிம்மதியா இருக்க முடியும்?”

“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா, நான் நல்லாதான் இருக்கேன்!”

“இருப்ப இருப்ப, நான் உன் அம்மாடா, நீ முறைச்சா என்ன அர்த்தம் முகம் வாடினா என்ன அர்த்தம்னு எனக்கு தெரியும்”

செல்விக்கும் தனக்கும் நடுவே இருக்கும் மனக்குழப்பம் அம்மாவிற்கு தெரிந்துவிட்டதா என மௌனமாக அவன் யோசிக்க..

“ம்ம்.. எல்லாம் அந்த பெண்னை பத்திதானே.. எனக்கு தெரியும்!”

“அம்மா..”

“என்னட அம்மா நொம்மா.. எல்லாம் எனக்கு தெரியும் அருந்ததி அக்கா பேசினாங்க.. அவ்ளோ பெரிய இடம், ஏதோ அவங்க நேரம் இப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுது..!”

“ஹப்பாடா …” என்று ஒரு பெரு மூச்சை வெளியேவிட்டவன்..அருந்ததி அத்தை, செல்வியின் குடும்பத்தை பற்றி சொல்லியிருக்கக் கூடும் என புரிந்துகொண்டான். ஆனால் கிழிக்க முடியாத ஒரு கானல் நீரிலான திரை இருவருக்கும் இடையே இருக்கிறதென்ற உண்மையாரும் அறிய வாய்ப்பில்லைதான். கடந்த ஒரு வாரமாக செல்வி தன்னை அலைபேசியில் அழைத்திருந்ததன் அர்த்தம் இப்போது அவனுக்கு விளங்கியது. “என்ன பேசுவதென புரியாது, அவன் அழைப்பை ஏற்கவில்லை!”

“என்னடா முழிக்கிற..?”

“ரகு மாமா அருந்ததி அத்தைய பத்தி, செல்விய தவிர வேறயாருக்கும் அவங்க வீட்டுல தெரியாதும்மா..!”

“எல்லாம் எனக்கு தெரியும்.. அக்கா சொன்னாங்க…நிச்சயம் முடியட்டும் நாம பேசிக்கலாம்..”

“நிச்சயமா?”

“அமாம்டா.. செல்வியோட அண்ணன்ட கூட பேசியாச்சு ஒரு மாசம் டைம்ல நிச்கியம் வச்சு,  அடுத்த மாதத்திற்குள்ளார கல்யாணத்த முடிச்சுடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்”

“என்னம்மா நீங்க இவ்ளோ ஃபார்ஸ்டா டெசிஷன் எடுக்குறீங்க?”

“ஆமாம்டா நான் தான் உங்கிட்ட வந்து நீ இவள தான் கட்டனும்னு பிடிவாதம் பன்னினேனா என்ன? நீ தான் அவளை லவ் பன்றேன் அது இதுனு படுத்துன இப்ப ஏன்டா தள்ளிபோடனும்னு சொல்ற? ஏன் உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சனையா?”

“மா.. நீங்க வேற, கொஞ்சம் டைம் இருந்தா பிஸ்னஸ் செட் பன்னீட்டு கல்யாணம் பன்னலாம்னு நினைச்சேன்…”

“அதுக்கும் இப்ப நேரம் வந்தாச்சு.. எல்லாம் என் மருமகள் வரும் நேரம் தான்” என்றார் விக்னேஷின் அப்பா.

“ஆமாம்டா, நீ லோன்னுக்கு அப்ளை பண்ணிருந்தியே அது சேங்க்ஷன் ஆயிடுச்சு, அதுக்கும் சேர்த்து தான் இனிப்பு கொடுத்தேன்.. அப்பா சொல்ற மாதிரி எல்லாம் அந்த பெண் வரும் நேரம் தான்..அவங்க வீட்டுல பேசின மறுநாளே லோன் மேட்டர் கன்ஃபார்ம் ஆயிடுச்சு..”

விக்னேஷ் புன்னகைத்தான், அம்மாவின் கழுத்தை சுற்றி கைகளைப் போட்டவன், “தேங்க்ஸ் மா..” என்றான்.

“சீ போடா.. பெருசா தேங்க்ஸ் சொல்றான்..” போய் ரெஸ்ட் எடுத்துக்கோ.. அவகிட்ட ஃபோன் ஏதாச்சும் பேசனும்னா பேசு..அத இத யோசிச்சுகிட்டு பேசாம இருக்காத!”

ஆச்சரியமாக அன்னையைப்பார்த்தான். “பின்ன என்னடா, நீ அவகிட்ட இப்பெல்லாம் பேசுறதே இல்லையாமே?”

விக்னேஷின் கண்கள் விரிந்தது. “இப்பெல்லாம் மாமியாரும் மருமகளும் ஒரே கான்வர்ஷேஷன் தான் உனக்கு தெரியாதா?” சிரித்தார் விக்னேஷின் அப்பா. இவனுக்கு இன்னும் ஆச்சரியம் … அவன் முகம் மலர்ந்தது. உள்ளே மென்மையான மலர் மலர, உதட்டைக்கடித்து சிரித்தான்.

“அவதான் சொன்னா, நீ பேசுறதில்லைனு..அம்மா இன்னும் சம்மதிக்கலையேனு ஏதும் யோசிக்காம ஹேப்பியா இரு.. அவளை எங்கயாவது அழைச்சுட்டு போ..சரி இப்ப போய் ரெஸ்ட் எடு.. அம்மா மேல டிஃப்பன் கொடுத்து அனுப்புறேன்..!”

அவனுக்கு அப்போது உண்மையில் தனிமை தேவைப்பட்டது. தொழில் தொடங்க அவன் விண்ணப்பித்த தொகை வங்கியில் கடனுதவியாக கிடைத்தது ஒரு பெரும் மகிழ்ச்சி அந்த தாள்களை கையில் புரட்டியவாரு மாடிக்கு தாவி தன் அறைக்குள் நுழைந்தான். செல்வி முந்தைய நிகழ்விற்கு பிறகு அவனை பல முறை அழைத்தாள் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.