(Reading time: 24 - 47 minutes)

“என்னடி இது, வேலைக்குபோயிட்டு வர்றவர இராத்தி நேரம் வேலை வாங்கிட்டு இருக்க காலைலேயே இளமாறன்ட்ட குடுக்க வேண்டியதுதானே..!”

“இல்ல பரவாயில்ல! நான் தான் அவகிட்ட இலாவ டிஸ்டர்ப் பன்னாதனு சொன்னேன். போலாமா செல்வி?”

அடுத்த ஐந்து நிமிடங்களில் ஈரக்கூந்தலை தளர்வாக பின்னலிட்டு கையில் எடுத்துக்கொண்ட புத்தங்களுடன் வந்து நின்றாள், அதற்குள் வனிதா கொடுத்த காபியை இருசித்து பருகி முடித்தவன், அவள் வந்ததும் வெளியே வந்தான்.  காருக்கு பதில் அவன் எடுத்து வந்திருந்த ஸ்ப்லண்டர் பைக்கைப் பார்த்ததும் ஒரு நொடி தயங்கி நின்றாள்.

“கார் செர்வீஸ் விட்டுருக்கேன்..உனக்கு அன் கம்ஃபர்டபில இல்லனா, கேப்ல போயிட்டு வரலாம்!”

“இல்ல இதுல என்ன இருக்கு.. போலாம்!”

அவனிடம் தோன்றிய லேசான புன்முறுவலை அவள் அறியாது அடக்கியவண்ணம் வண்டியைக் கிளப்பினான். அவன் தோளையோ இடுப்பையோ தொடாது தன் வண்டியின் கம்பியை பிடித்தவாரு அவள் அமர்ந்திருந்த வண்ணத்தை இரசித்தான், முடிந்தவரை அவளை சங்கடப்படுத்தாது வண்டியை ஓட்டினான். அவள் கைக்காட்டிய இடத்தில் அமைந்திருந்த லெண்டிங்க் லைப்ரரி எனப்படும் நூல் நிலையத்தின் அருகே நிறுத்தினான், ஆள் இல்லாத அமைதியான சாலை.  எதிரே நூல்நிலையம் நடந்து செல்வது எளிது, அங்கும் இங்கும் ஆளமாக வெட்டப்ப்டடிருந்த பள்ளங்கள். நடுவே ஒடுக்கமான மண் சாலை. எனவே வண்டியை சாலையின் அருகே நிறுத்திவிட்டு நடக்க நினைத்தனர்.

 வண்டியை நிறுத்தி அதன் மீது சாய்ந்து நின்றவன், மென்மையான மின் விளக்குகளின் ஒளியில் மின்னிய அவளது முகத்தைப்பார்த்தான். சிறிது மௌனத்திற்கு பிற்கு அவனே தொடங்கினான்,

“சொல்லு ஏன் வர சொன்ன?”

“உங்கக்கிட்ட சாரி கேட்க?”

“சாரியா எதுக்கு?” அவளது முகத்தை நேரேப் பார்த்து அவன் கேட்டதில் கொஞ்சம் தினறிப்போனாள். என்னவென்று விளக்குவது இவனுக்கு?

“உங்கள கஷ்டப்படுத்தனும்னு நான் நினைக்கல விக்னேஷ், நான் ரிஷிகிட்ட பேசப்போய்.. உங்கள கஷ்டப்படுத்திட்டேன்!” அவனது உணர்வுகளை முகம் பிரதிபலிக்குமா என அவள் எதிர்பார்த்திருந்தாள் அவள் ஏமாந்தாள் எனலாம். கல்லென எந்த மாற்றமும் இன்றில், கண்கள் மட்டும் இவளைப்பார்த்தது.

“அப்பாவ பத்தி உங்களுக்கு இவ்வளவு தெரிஞ்சுருக்கு, நான் தான் முட்டாள் தனமா உங்கள…”

“லூசு மாதிரி பொண்ணுங்க பின்னாடி சுத்துரவன்னு நினைச்ச…!” அவன் முடித்த விதம் தனில் குரலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை அவள் உணார்ந்தாள். இன்று வரை அவன் மென்மையானவன் என நினைத்திருந்தாள், அவனது முகமும் வார்த்தைகளில் ஏற்படும் தின்னமும் உள்ளூர ஏதோ ஒரு ஏமாற்றத்தை தருவதை அவளால் உணர முடிந்தது. ஆயினும் அவசரமாய் தலையை ஆட்டி,

“இல்லங்க ப்ராமிஸ்… எல்லா பொண்ணு பின்னாடியும் சுத்துரவாரா நினைக்கல, ஆனா என்ன ஏன் காரணம் இல்லாம பிடிச்சுதுனு நினைச்சேன்.. வீட்டுல அம்மா ஒத்துக்காம இருக்கிறப்ப இவ்ளோ பிடிவாதமா ஏன் நின்னீங்கன்னு நினைச்சேன் விக்கி, நீங்க அன்னிக்கு சொன்னப்புறம் நான் உங்களப்பத்தி நினைச்சது எவ்ளோ தப்புனு புரியுது.. உங்கள அன்னைக்கு காயப்படுத்திட்டேனு புரியுது.. சாரி.. “  மிகுந்த வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்.

“அத ஃபோன்லயே சொல்லிருக்கலாம்!”

“இல்ல,  உங்க முகத்தப்பார்த்து சாரி சொல்லனும்னு தோணுச்சு!”

“நீ கஷ்டப்படுறத நான் என்னிக்குமே விரும்பல செல்வி அது இந்த சாரி விஷயமா இருக்கட்டும் இல்ல நம்ம கல்யாண விஷயமா இருக்கட்டும்.. உன்ன கட்டாயப்படுத்தவும் நான் விரும்பல!”

அதற்கு அவளது பதில் என்னவாக இருக்குமென அவன் யோசிக்கும்போது..”இன்னும் பத்து நாள்ல நிச்சயதார்த்தத்த வச்சுட்டு இப்ப முடிவ எடுக்க சொல்றீங்க விக்னேஷ்!”

“ஆமா செல்வி இதுவே அதிகம்..இவ்வளவு நாள் அம்மா மனசு மாற நான் எவ்வளவு முயற்சி செஞ்சேன், இப்ப அவங்க நான் உன்ன விரும்புறதா நம்புறாங்க.. அவங்கிட்டபோய் இல்லம்மா, நான் தான் பைத்தியக்காரத்தனமா நினைச்சுட்டேன், அந்த பெண்ணிற்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்லனு என்னால சொல்லமுடியாது.. என்ன பொருத்தவரைல நானா எதையும் தடுக்கமாட்டேன்..”

அவள் துடித்துப்போனாள், ஒரே நல்ல விசயம் அவன் ரிஷியின் பேரை எடுக்காதது. உள்ளங்கையில் தன்னை வைத்து தாங்கும் கணவன் கிடைக்க எந்த ஒரு பெண்ணும் தவம் செய்திருக்க வேண்டும்.. அவளது பண்புகளுக்காக அவளை விரும்பும் அவனை இழந்தால் இவள் நிச்சயம் முட்டாள் தான். ஆனால் காதல் கசப்பைத்தேடி செல்வது, சில நேரங்களில் நம் கண் முன்னே இருக்கும் இனிப்பான வாழ்கையை மறைத்து விடுகிறது. இப்போது இதயத்தில் ரிஷி இல்லைதான், அவன் இன்னொரு பெண்ணுக்குரியவன் என்ற எண்ணம் வந்தபோதே அவன் யாரோவென ஆகிப்போனான். ஆனால் அதற்காக உள்ளம் விக்னேஷை விரும்புவதாய் அர்த்தமில்லை. அப்படியே ஏதோ ஒரு எண்ணம் தோன்றினாலும் அதை இவனிடம் இப்போது எப்படி சொல்வது? உதட்டைக்கடித்துக்கொண்டு அமைதியாக நின்றாள், அவன் கையிலிருந்த அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.