(Reading time: 24 - 47 minutes)

மேலும் மாணிக்கம் சொல்லும்படி சிவா தன் கடந்தகாலத்தை சொல்ல விரும்பாததற்கு பின்னால் ஏதெனும் கசப்பான விவகாரமிருந்தால் இவளால் அதை தாங்கிக்கொள்ள முடியுமா?

பல்வேறு சிந்தனைகளில் அகப்பட்டு வேதனையில் இருந்தவள், காவ்யா பலமுறை சொல்லியும் கட்டிலில் இருந்து அசையவில்லை, வெகு நேரத்திற்கு பிறகு குழித்துக் கிளம்பினாள், காவ்யாவின் காரில் அவளது ட்ராலியை மாணிக்கம் தூக்கிவைத்தார். தர்ஷினி கிளம்பும்போது,

“அப்பா, இதனால எதுவும் மாறப்போறதில்ல…. வீணா ஏதும் கற்பனை பண்ணாதீங்க!” என்றாள்

“அது சரி, அத அப்புறம் யோசிக்கலாம் இப்போ நீ கார்ல ஏறு!” காவ்யாவின் அதட்டலுக்கு காரின் பின்புற சீட்டில் ஏறினாள். காவ்யா காரைக்கிளப்பி வெகு நேரம் ஆகியும், அவளிடம் ஏதும் பேசவில்லை தர்ஷினி. ரிஷியின் கெஸ்ட் ஹவுஸ் சென்ற பின்பும் அவள் ஏதும் பேசவில்லை. காவ்யா செய்து வைத்த  அறிமுகத்திற்கும், மாணிக்கம் வெளியூர் சென்றதாக அவள் சொன்ன கதைகளுக்கும் அவள் ஏதும் வாய்த்திறக்கவில்லை. நாள் முழுவதும் அறையினுள் தான் கிடந்தாள். எத்தனை முறை காவ்யா வந்து அழைத்தும் அவள் வெளியே நடமாடவில்லை. இரவு உணவை முடித்து, அந்த சிறிய மாளிகையின் வெளிப்புறம் அமைந்திருந்த பூந்தோட்டத்தின் சிறிய கல் அமர்வில் அவள் முட்டைக்கட்டிக்கொண்டு வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

கடந்த சில மாதங்களில் வாழ்கையில் தான் எத்தனை மாற்றங்கள், காவ்யாவின் பிறந்த நாள் ஞாபகம் வந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிவாவை மீண்டும் சந்திக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு மாற்றங்கள் வந்திருக்காது தான். சமந்தமே இன்றி இங்கு வந்து அவள் அமரும் நிலை வந்திருக்காது.  மாணிக்கத்தை எதிர்ப்பது அவளுக்கு சொல்ல ஒன்னா வேதனையைத்தந்தது. அதை யாரிடமும் பகிரவும் இயலாது அவள் தன்னை வருத்திக்கொண்டிருந்தாள்.

வானத்து நிலவை பார்க்கும்போது, ஏதோ ஒரு தாழ முடியாத ஏக்கம் உள்ளே வந்துபோனது. அந்த வலி எவ்வளவு முறை அழுது தீர்த்தாலும் தீர்க்க முடியாது என்பது புரிந்தது. அவளின் தோளின் மீது படர்ந்தது ஒரு மென் கரம். அவளுக்கு தெரியும் அது காவ்யா என்று. தர்ஷினி திரும்பாது அமர்ந்திருந்தாள்.

“கவல படாதீங்க.. தர்ஷினி!” என்ற ரிஷியின் குரலுக்கு பதறி, கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு திரும்பினாள். அருகே அவள் தோளைப்பற்றிகொண்டு காவ்யாவும் சற்று தள்ளி விரிந்த புல்தரையில், ரிஷியும் நின்றிருந்தனர்.

“ஏன்டி பேசமாட்டிக்கிற…? என் மேல கோபமா? ஒரு விரலை நாடியின் மீது வைத்து முகத்தை தூக்கினாள். காவ்யாவின் முகத்தைப்பார்க்க வருத்தமாக இருந்தது, அவள் மீது கோபமாக இருப்பதாக இப்போது காட்டிக்கொள்ள முடியாது, இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி.

“ச்ச அதெல்லாம் ஒன்னுமில்ல!” அவள் சொன்ன விதம் தனில் தன் மீது தர்ஷினிக்கு இருக்கும் கோபத்தை புரிந்து கொண்டாள் காவ்யா.

“அங்கிள் பேசுறதிலேயும் கொஞ்சம் ஞாயம் இருக்கு தர்ஷூ” – காவ்யா

காவ்யாவின் முகத்தைப்பார்த்து முறைத்தாள் தர்ஷினி. “என்ன ஞாயம்? பொண்ணோட மனச புரிஞ்சுக்காம.. எடுத்தோம் கவுத்தோம்னு பேசுற ஞாயம்…இதுல நீ வேர!”

“இல்லப்பா, அங்கிள் சொல்றதவச்சுப்பார்த்தா… நாமதான் கொஞ்சம் அவசர பட்டுடோமோனு தோணுது!”

“ஒரு புண்ணாக்கும் இல்ல…உன் அங்கிள் பேசுறது மட்டும் எப்படி உண்மையா இருக்கும்!”

“ஆனாலும் சிவா உங்கிட்ட, அவரோட ஃபர்ஸ்ட் வைஃப் பத்தி ஏதும் சொல்லல இல்லையா?”

“ஏன் சொல்லனும்?”

“என்னடி இப்படி பேசுற!”

“பின்ன, நான் அவர சந்திக்கும்போது அவரோட வைஃப் இறந்துட்டாங்க…நான் வாழப்போறது அவரோட வருங்காலத்துல தான், முடிஞ்சுபோன விசயங்கள பேசி அவர நான் காயப்படுத்த விரும்பல..”

“அது சரி, நீ கவலப்படாம இருக்கலாம்.. அங்கிள் அப்படி இருக்கமுடியுமா?”

பதில் பேச இயலாது அமைதி ஆனாள் தர்ஷினி.

“உங்கிட்ட பழைய விசயங்களை ஷேர் பன்னாட்டிலும்.. அங்கிள் கிட்ட அவர் பேசணும்..எனக்கென்னவோ நீ ஏதோ தப்பு பண்ணுதேனு தோணுது தர்ஷூ”

அவாள் அமைதியாக இருந்தாள். ரிஷி நடந்து அவள் முன்னே வந்தான்.

“தர்ஷினி..” அவன் அழைப்பிற்கு நிமிர்ந்தாள்.

“காவ்யா, சொல்றது இருக்கட்டும், ஒரு வேளை, சிவா ஏதாவது தப்பு பண்ணிருந்தா அவர் விசயத்தில உன் முடிவு என்னவா இருக்கும்?”

“அவர் ஏதும் தப்பு பண்ணல ரிஷி…அப்படி பண்ணிருந்தா நிச்சயம்  எங்கிட்ட மறைச்சிருக்க மாட்டாரு…அப்படி சொல்லமுடியாத சூழ்நிலைல இருந்தாலும் நான் அவர இழக்க தயாரா இல்ல.. அவர்கிட்ட நான் எந்த விளக்கமும் எதிர்பார்க்கல அது அவருக்கே நல்ல தெரியும், நீங்க சொன்ன மாதிரி ஏதாவது தப்பு பண்ணிருந்தா, அவரோட சேர்ந்து நானும் அந்த தண்டனைய ஏத்துப்பேன், அவர தனியா இனி கஷ்டப்பட நிச்ச்யமா விட மாட்டேன்!”

“ஆ” வென்று வாயைத்திறந்து கேட்டிருந்த காவ்யா,  “லூசாடி நீ!” என்றாள்.

சிறிது மௌனத்திற்கு பிறகு ரிஷி, “தேங்க்ஸ் தர்ஷினி, நீங்க காவ்யா மாதிரி இல்லாம தெளிவா இருக்கீங்க..!” என்றான் குறும்பு புன்னகையுடன். காவ்யா ரிஷியை  முறைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.