(Reading time: 24 - 47 minutes)

“விக்கி, இதுவரைக்கும் அம்மாவோட வார்த்தையையோ, அண்ணாவோட வார்த்தையையோ நான் மீறினதில்லை, இப்பவும் அப்படித்தான், ஆனா அதுக்காகா நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கால, முடிஞ்சுபோனதுக்காக வருங்காலத்த இழக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லுவாங்க,  என்னோட முடிவுதான் அபத்தமானதா ஆயிடுச்சு, இப்ப நான் இருக்கிற மனநிலைல இந்தக்கல்யாணம் ஒரு வடிகால்! உங்கள விரும்புறேன்னு சொல்ற தகுதி எனக்கு கிடையாது என் மனசு இப்ப அப்படி சொல்லவும் இல்ல, ஆனா நீங்க உங்கம்மாகிட்ட சொன்னமாதிரி ஒரு நல்ல மருமகளா இருக்க ட்ரை பண்ணுவேன்!”

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும்போது பேச்சு தடைப்பட்டுபோனது. அவனது வார்த்தைகளுக்காக இவள் ஏங்கி நின்றாள். அவனோ அவளது இந்த வார்த்தைகளை மௌனமாக கிரகித்துக்கொண்டிருந்தான். அவர்களை கடந்து சென்ற இரு சக்கிர வாகனத்தில் இருந்தவர்கள் இவர்களது நிலையைப்பார்த்து விசிலடிக்க, கலைந்து திரும்பினர்.

அந்த சாலையின் வழியே கடந்து சென்ற கார், திரும்பிவந்தது. இவர்களது அருகே நிற்கும்போது அது ரிஷியின் காரெனப் புரிந்தது. இருவரும் திகைக்கும்போதே, ட்ரைவர் கோபியும் அவனும் இரங்க, அவனது காலில் இருந்த கட்டில் இருவர் கவனமும் சென்றது.

“சார் பார்த்து…” – கோபி

“டேய் விடுடா.. நான் நடப்பேன்!” வாக்கிங்க் ஸ்டிக்கின் உதவியோடு அவன் இறங்க, அவன் அருகே வந்தான் விக்னேஷ்.

“கட்ட இன்னும் பிரிக்கலயா ரிஷி?”

“இல்ல, ஜஸ்ட் ஒன்வீக் வெயிட் பண்ண சொன்னாங்க..! அப்புறம் என்னடா இது ரோட்டில நின்னுட்டு அதுவும் இருட்டீட்டு, வீடு பக்கத்தில தான அங்க போயிருக்கலாம்ல?”

“இல்ல டா, சும்மா தான்!”

செல்வி இன்னும் மௌனமாய் தான் இருந்தாள். ரிஷியைப் பார்க்கவோ பேசவோ இல்லை, அது ரிஷிக்கும் புரிந்தது.

“விக்கி, நான் ஃபைமினிட்ஸ்ல புக்ஸ் ரிட்டன் பண்ணிட்டு வந்துடுறேன்!” அவனது பதிலுக்கு காத்திராமல் ரிஷியைக் கடந்து சென்றாள். உள்ளம் மிகவும் வேதனைப்பட்டது. அவள் கடந்து செல்வதைப் பார்த்திருந்தவன்,

“கோபி அப்படியே ஒரு வாக் போயிட்டு வா..!” என்றான்

அதை புரிந்துகொண்டவனாய் கோபி அவர்களை விட்டு விலக..”சாரிடா நீ நிக்கிறது மட்டும் தான் தெரிஞ்சுது, ஒரு வேலை வண்டி ஏதோ பிரச்சனைனு நினைச்சேன், இறங்கின பின்னால தான் செல்விகிட்ட பேசிட்டு இருக்கனு தெரிஞ்சுது..!”

“அதல்லாம் ஒன்னுமில்லடா..!”

“சாரி மச்சி, பூசை வேலைல கரடி மாதிரி வந்துட்டேனா..?” அவன் கிண்டலாய் கேட்க

“ஓ பூசை அளவுக்கேல்லாம் இன்னும் போலடா.. ஏதும் வசை வாங்காத வரை நல்லது”

”டேய் எல்லாம் குட் நியூஸா கேள்விபட்டேன், எங்கேஜ்மென்ட் வரைக்கும் வந்துட்டு, வசை அது இதுனு..! எனக்கென்னமோ இது நல்ல சேஞ்சாதான் தெரியுது!”

“எது? இப்படி நடு ரோட்டில நிக்கிறதா?”

“தனியா நிக்காம கட்டிக்கப்போறவளோட நிக்குறியே.. அது..!”

“அதெல்லாம் இல்ல, அவளா இன்னும் சம்மதம்னு சொல்லல, அம்மாக்காக, அண்ணனுக்காகனு.. வெருப்பா இருக்குடா?”

“டேய் உன்ன உதைக்கனும் அவ இவ்வளவு சொல்றதே பெரிய விசயம், சின்ன பொண்ணுடா, உலகம் தெரியாம வீட்டுக்குள்ளே வச்சு வளர்த்திருக்காங்க.. என்னதான் ஆனாலும் அவ என் அத்த பொண்ணு, குறை ஏதும் சொன்னேனா பல்லதட்டிடுவேன்..ஒழுங்கா கரைக்ட் பண்ணி கல்யாணம் பண்ணு!

“ரிஷி, அவ சொன்னத பத்தி..”

“ஷ்ஷ்.. ஸ்டாப் தட்.. உங்கூட இப்படி நின்னு பேசுற பொண்ணாடா அவ, இதெல்லாம் நடக்குதுனா, அவ உன்னோட லவ்வ புரிஞ்சுக்கிட்டானு தான் அர்த்தம், தேவையில்லாதத பேசாத.. உங்களோட தனிமைய டிஸ்டர்ப் பண்ணலை சோ நான் கிளம்புறேன்..!”

பின்னால் திரும்பி அவன் கோபியை அழைக்க, அவன் ஓடி வந்தான்.

செல்வியின் மனம் குளம்பி இருந்தது. ரிஷியை ஏன் பார்த்தோம் என்ற எண்ணம். நண்பர்கள் இருவரும் எந்த துணுக்கும் இல்லாது பேச, இவளுக்கு தான் உள்ளம் குடைந்தது. ஏதோ தவறு செய்ததாய் மனம் வருந்த, அங்கிருந்து நூல் நிலையத்திற்குள் போனாள். எப்படியும் ரிஷி உறவென்று ஆகிப்போனான், அவனை சந்திப்பதை தவிர்க்க முடியாது. எனில் அவனை எதிர்கொள்ளும் மனதைரியம் வேண்டும் என நினைத்தாள்.

நூல் நிலையத்தில் இருந்து திரும்பியவள், மண் பாதையில் நடக்க எத்தனிக்க கால் வைத்த இடத்தில் கல் இடறி, “விக்னேஷ்” என அலறியவாரே.. பள்ளத்தில் விழுந்தாள்! பத்தடி ஆழமுள்ள பள்ளம், கடந்த சில நாட்களில் பெய்த, பெருமழையில் வஞ்சமில்லாது நிரம்பியிருந்தது. இவள் விழுந்த விதம் தனில் முன்னெற்றிக் கிழிந்து இரத்தம் கசிந்தது. அங்கிருந்த மூவரும் அதிர்ந்து ஓடி வந்தனர்,  உள்ளே இறங்கப்போன விக்னேஷை ரிஷித்தடுத்தான்,

“டேய் இருடா கொஞ்சம் பொறு அவ ஏதோ கல்லுல நிக்குறா இது ரொம்ப ஆளமான பள்ளம் நீயும் உள்ள குதிச்சா ஒரு வேலை மண் இன்னும் சரியலாம்!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.