(Reading time: 24 - 47 minutes)

பல காரணங்களை முன்னிட்டு அவன் அழைப்பை ஏற்கவில்லை, ஆனால் தன் தாய்க்கும் அவளுக்கும் இடையே ஏற்பட்ட இந்த புதிய பினைப்பு அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதன் மூலம் அவள் எதை உணர்த்த விழைகிறாள் ?.. அம்மாவிடம் இயல்பாக பேசுகிறாள் எனில் இந்த வீட்டிற்கு வருவதற்கு அவளுக்கு சம்மதமா? ஒரு நிமிடம் அவன் வீட்டில் அவனது அறையில் அவன் மனைவியாக செல்வியை நினைக்க அவனுக்கு தித்திப்பாய் இருந்தது. வாழ்வின் பெரும்பகுதியில் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்தவள், ஒருவேளை அவள் ரகுவினது மகளாக வளர்ந்திருந்தாள் அந்த வீட்டின் இளவரசியாக இருந்திருப்பாள். எனினும் அவள் மீது அனுதாபம் ஏற்படாது காதல் தானே ஏற்பட்டது. அப்படி கன்னியமாக வளர்க்கப்பட்டவள், அவளை விட அதிகப்படியான வசதிகள் தனக்கிருக்கலாம் ஆனால் அவளைப்போன்ற பண்புகள் எந்த பெண்ணிற்கும் இருக்காது.. இதைதான் அவன் இதயம் சொன்னது. அவளை சந்திக்கும் ஆவல் மேலோங்கியது.. அலைபேசியை எடுத்து அவளது புகைபடத்தை இரசித்தான்..ஒரு வேளை செல்வி இவனிடம் பேசத்துடித்தது அவளது தந்தையைப் பற்றி அறியும் நோக்கத்திலா? எதுவாயினும் அவளை சந்திக்க மனம் துடித்தது.

கைப்பேசியில் செல்வியின் எண்ணெய் பலமுறை எடுத்துப்பார்த்தான், இங்கும் அங்கும் நடந்து ஒரு முடிவுக்கு வந்தவனாய், இறுதியில் அவளை அழைக்க, அழைப்பு மணி அடித்த ஒன்றிரண்டு நொடிகளிலேயே, அவள் அழைப்பை ஏற்றாள். “யார் முதலில் பேசுவது?” இருவரும் அமைதியாய் இருக்க.. அவளது குரலைக்கேட்கும் தவிப்பில் அவன். ஒரு சில நொடி கரைந்த பின்னே அவளே தொடர்ந்தாள், “விக்னேஷ்..லைன்ல இருக்கீங்களா?” இப்போது அவனது அம்மா ஊட்டிய இனிப்பு நாக்கை நனைத்ததுபோன்று இருந்தது.

“ம்.. சொல்லு…?”

“வேலையா இருக்கீங்களா?”

“இல்ல.. மிஸ்டு கால் பார்த்தேன் எதுக்கு கூப்பிட்ட..?”

அவள் தினறிபோனாள், எதற்கு அழைத்தாள் என்று அவளுக்கும் தான் தெரியாது.. அந்த தனிமையில் அவன் குரல் உள்ளே எதையோ கிளரத்தான் செய்தது. இதற்கு என்ன பொருள், எதை சொல்லுவாள்? அமைதிகாத்தாள்.

எத்தனையோ நாள் செல்வியின் மௌனமும் பாராமுகமும் இவனை வதைத்திருக்கிறது. இன்று அதுவே அமுதமாய், அவள் சொல்ல தயங்கும் விசயம் எதுவாயினும் இனி அவனைக் காயப்படுத்தாது என்பதுபோல் இருந்தது.

“இல்ல இப்ப விட்டீல இருக்கேன்.. “

அப்படியென்றால் இப்போது ஏதும் பேச முடியாது என அர்த்தம் கொள்ளவேண்டுமா? அவன் யோசனையின்போது..

“உங்கள பார்க்க முடியுமா?”

எத்தனை நாள் இந்த ஒரு வார்த்தைக்கும் அவளை சந்திக்கும் தருனத்திற்கும் அவன் காத்திருந்தான், இன்று அவளே வலிய அழைக்கிறாள் என்ன சொல்வதென்ற கேள்வி உள்ளே., கொஞ்சம் மௌனம் சாதித்தால் தான் என்ன?  என்ன செய்வாளாம் அவள், அவனைத்தேடி வருவாளா? உண்மையில் அவன் மேல் அன்பிருந்தால் பெண் நிச்சயம் அவனைத் தேடி வருவாள் என தோன்றியது.

“பிஸ்னஸ் விஷயமா கொஞ்சம் வெளில போறேன்…!”

“ஓ…” என்ற விதம் தனில் அப்படி ஒரு ஏமாற்றமிருந்தது. “நாளைக்கு பார்க்கலாமா?”

அவள் இன்றே இப்போதே அவனை பார்க்க நினைத்திருப்பாளென அவன் நினைக்கவில்லை, சில்லென்ற மழைச்சாரல் மனதை நனைத்தது.

“இல்ல.. நான் வெளியூர் போறேன்.. இன்னும் இரண்டு நாள் ஆகும், வந்த பின்னாடி கூப்பிடட்டுமா?”

“ம்ம்…நீங்க எப்ப கிளம்புறீங்க…ஃப்ளைட்லனா..ஏர்ப்போட்ல மீட் பன்னலாமா?”

அவனது இதழ்கள் சப்தமில்லாது புன்னகைத்தது. “இப்போ எப்படி வருவீங்க.. நைட் ஆயிடுச்சே?”

“நீங்க வந்தீங்கன்னா.. அம்மா வெளில விடுவாங்க!” ஏக்கமாய் இருந்தது அவள் குரல்.

“ம்ம்.. சரி, அப்ப வர்றேன்..!”

“கவனமா ட்ரைவ் ப்ன்னுங்க..நான் ரெடியா இருப்பேன்!”

அழைப்பைத் துண்டித்தவன் மனது துள்ளிக்குதித்தது. அவன் சொன்னதுபோலவே அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வீட்டிற்கு வந்தான். இளமாறன் இல்லை வனிதா புன்னகையுடன் வரவேற்றார்.

“வாப்பா.. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்கலா?”

“எல்லாரும் நல்லாயிருக்காங்க..! செல்வி வர சொன்னா…அதான் பார்த்துட்டு போலாமேனு!”

வனிதா வினோதமாய் பார்த்தார். அதற்குள் இரவில் குளித்து இரத்தலையில் சுற்றிய தூவாலையுடன், கன்னத்தில் சில முடிக்கீற்றுகளில் ஈரம் சொட்ட, பாவடைத் தாவணியில் ஓவியமாய் வீட்டிற்குள் நுழைந்தவளின் முகம் பார்க்க இரம்மியமாய் இருந்தது.

“செல்வி, மருமகன் வந்திருக்கார்..!” வனிதாவின் பார்வையில் கேள்வி இருந்தது.

செல்வி லேசாக உதட்டைக்கடித்தவள். “இல்லம்மா லைப்ரரி புக்ஸ் ரிட்டன் பண்ணனும் நான் மறந்துட்டேன், அதான் அவங்க கூட போயிட்டு..!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.