அவளருகே நடந்து வந்து அவள் தலையில் ஓர் கையை வைத்து தட்டியவன்..”இதுக்கு தான் நான் எதையும் உங்கிட்ட சொல்லல..” என்றான். தர்ஷினி அசையாது அவன் சொன்னதைக்கேட்டிருந்தாள்..
“ரிஷி.. அவந்திகா தற்கொலை பண்ணிகிட்டாங்களா?” – தர்ஷினி
“ம்ம்.. அப்படி தான் அவங்க பேமிலி அன்ட் போலீஸ் எங்கொயரியும் கன்ஃபர்ம் பண்ணிச்சு..சிவா அவங்க இரண்டு பேருக்குள்ளேயும் நிறைய கருத்துவேறுபாடு இருந்துச்சுன்னு சொல்லிருந்தாரு.. அதனாலதான் அவங்க தற்கொலை செஞ்சுகிட்டதாகவும் சொன்னாரு…ஆனா அவர் போலீஸ்க்கு கொடுத்த டீடைல்ஸ்ல அவந்திகாவ பத்தி ஒரு வேர்டு கூட தப்பாசொல்லல..கொஞ்ச நாள் சிவாதான் கொலை பண்ணிருப்பாரோனு கூட டவுட் இருந்துச்சு, பட் அவந்திகா வீட்டுல சிவாக்கு பயங்கிற சப்போர்ட்..இன்னொரு விசயம் அவந்திகா அப்படி பண்ணினப்ப வீட்டுல அவளோட பேரண்ட்சும் இருந்தாங்க.. சோ அதனால அது சிவாமேல திரும்பலனு என்னோட கெஸ்!”
கொஞ்ச நேரம் மௌனம் அனைவரிடமும்…!
“தர்ஷினி..அவந்திகா அடிப்படைல நல்ல பெண் அது சிவாவிற்கும் தெரியும்.. இல்லனா சிவா அவந்திகாவ ட்ரூவா லவ் பண்ணிருக்கலாம்..இதுக்கெல்லாம் மேல… இப்ப அவர உண்மையா நேசிக்கிற பெண் அவருக்கு லைஃப்ல கிடைச்சிருக்கு.. அவ்வளவு பெயிங்க்கு அப்புறம் சிவாவுக்கு கிடைக்கிற கேயின் நீங்க தான்.. என்னப் பொறுத்தவரைல அவந்திகா தற்கொலை பண்ணிகிட்டாங்க.. இல்லன சிவியர் ட்ரக் அட்டம்ட்ல அவங்க இறந்திருக்கலாம்..அது வெளில தெரியக்கூடாதுனு பழிய தன் மேல சிவா போட்டுறக்கலாம்.. எது எப்படியோ.. சிவா ஸ் எ குட் பேசர்சன்.. யங்க் மேன் டூ.. இனிமேல் தான் அவரோட லைஃபே ஸ்டார்ட் ஆகப்போகுது… உங்களவிட யாராலையும் அவர புரிஞ்சுக்கு முடியாதுனு எனக்கு தோணுது..!”
“அங்கிள எப்படியாவது சரி கட்டப்பாருங்க..” - ரிஷி
இல்ல அது ரொம்ப கஷ்டம்..பெட்டர் ரிஜிட்டர் மேரேஜ் பண்ணீட்டு அங்கிள்கால்ல விழுந்திரு… ” – காவ்யா
“ஏய்.. சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டினு.. அவரே பேசாம இருந்தாரு, நீ தான் அத இத சொல்லி இங்க இழுத்துட்டு வந்த… நான் பேசாம அங்க இருந்தாலாவது ஏதாச்சும் ட்ரை பண்ணிருப்பேன்!”
“எப்படி அங்கிள் கீழ தூங்கிறப்ப நீங்க மொட்டமாடில டிஸ்கஸ் பண்ணீங்களே அத மாதிரியா?” கிண்டலாக காவ்யா சொல்லிமுடிக்கவும் தர்ஷினி காவ்யாவின் வாயைப் பொத்தினாள்.
அவளது கையை மெதுவாக விலக்கியவள், ரிஷியைப் பார்த்து, “இனிமே கேர்ள்ஸ் டாக், சோ நீங்க கொஞ்சம் கிளம்புறீங்களா?”
“ஹான் நேரம் டீ..!” - ரிஷி
“ஆமாம் ஆமாம் நேரம் தான் டீ நீ போ உன கோஞ்சம் கவனிக்க வேண்டீ இருக்கு, மொதல்ல இந்த பஞ்சாயத்த முடிச்சுட்டு அங்க வர்றேன்..” அவள் குறும்பாக ரிஷியைப்பார்த்து கூற அவன் வீட்டைநோக்கி நடந்தான்.
செல்வி கண்விழிக்கும்போது அவள் முகத்தில் தெரிந்தது விக்னேஷின் முகம் தான். அவள் படுத்திருந்த அறையின் கதவு திறந்திருந்தது, அவள் வீட்டு ஹாலில் சுவறில் சாய்ந்தபடி விக்னேஷ் நிற்க, வனிதாவின் அருகே விக்னேஷின் அம்மா கலைவாணி அமர்ந்திருந்தார், “அக்கா, நீங்க கவலைப்படாதீங்க, அதான் செல்விக்கு ஒன்னுமில்லனு டாக்டர் சொலிட்டாருல சின்ன அடி தான் சரி ஆயிடும்!”
“இல்லங்க அவ தைரியம் ஆனா பொண்ணுதான், கல்யாணம் வைக்கிற நேரத்தில இப்படி ஆயிட்டேனு?”
“எல்லாம் இவன சொல்லனும் இராத்திரி நேரம், அவள கூட்டீட்டு போறோமே, பத்திரமா கூட்டீட்டு வரணும்னு தெரியவேண்டாம்.. இவன் போய் புக்ச ரிட்டர்ன் பண்ணிருக்கனும் அத விட்டுட்டு..!”
“கேளுங்கக்கா, அவ காலைல போலாம்னுதான் சொல்லிருக்கா, இவன் ஒரு அவசரக்கொடுக்கை..!”
வனிதா புரிந்துகொண்டதாய் விக்னேஷைப்பார்த்தார். கலை மீண்டும் தொடர, “நாம் பேசினபடி எங்கேஜ்மென்டையும் கல்யாணத்தையும் முடிச்சுடுவோம், நீங்க ஒன்னும் பயப்புடாதீங்க செல்வி அதுகுள்ள ஜம்முனு சரி ஆயிடுவா! அப்புறம் இவன்பாடு இவன் பெண்டாட்டி பாடு! அவ நடக்க முடியாட்டி இவன் தூக்கீட்டு போவான்”
“அப்படி சொல்லு கலை, அதெல்லாம் சின்ன மயக்கம் தான், கால்ல கூட சின்ன ஸ்பெரெயின் தான்..எல்லாம் சரி ஆயிடும், நாம எங்கேஜ்மென்ட் வேலையப் பார்ப்போம், நீங்க செல்விய மட்டும் நல்ல பார்த்துக்கோங்க..” விக்னேஷின் அப்பா சொன்ன விதம் தனில் வனிதாவிற்கு ஆருதலாய் இருந்தது.
அவர்கள் கிளம்பும்போது இளமாறன், விக்னேஷின் தந்தைக்கு ஓடிச்சென்று காரின் கதவைத்திறந்து விட, அவர் தடுத்து அவன் கன்னத்தில் தட்டினார், “இலா இதெல்லாம் நீ செய்யக்கூடாது, செல்வி எங்க வீட்டு பெண் ஆகப்போறா, நீயும் எனக்கு விக்னேஷ் மாதிரி தான் புரியுதா!” கண்டிப்பும் அன்பும் கலந்து அவர் சொன்னபோது அவன் புன்னகைத்தான்.