(Reading time: 16 - 31 minutes)

கோவிலுக்கு செல்லும் அன்று அதிகாலையே எழுந்து அனைவரும் கிளம்ப ஆரம்பித்துவிட்டனர்...

புது துணிகளில் அனைவரும் புத்தம் புது நட்சத்திரங்களாக மின்னினர்....கவி அஸ்வினுக்கு முன்பு எழுந்து குளித்து விட்டு அவனை எழுப்பி குளிக்க அணிப்பினாள்.

அவன் வருவதற்குள் அஸ்வினது மாமா வாங்கி தந்த சேலை கட்டி தயாராகிக கொண்டிருந்தாள் கவி.

வெளியில் வந்து அவளை பார்த்தவன் அப்படியே இமைக்க மறந்தான்..

பிங்க் நிறமும் ,தக்காளி நிறமும் சேர்ந்து நெய்த பட்டு சேலையில் அழகாக இருந்தாள் கவி..

அவனது சோப்பு வாசனையிலேயே அவனது வரவை உணர்ந்த கவி அவனது புறம் திரும்ப  அவனது பார்வை  கவியின்  உடலையெல்லாம் சிலிர்க்க செய்தது...

“அஷு மாமா..,எதுக்கு இப்படி பாக்குற..”என்று கவி கேட்க “நீ தான் அப்படி பார்க்க வைக்கிற..” என்று அவன் கூற..”மாமா இன்னைக்கி நாம கோவிலுக்கு போறோம் அதனால ஒழுங்கா இருங்க..”என்று கவி சொல்ல,

“ம்..”என்று மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னான் அஸ்வின்.

“இந்த புடவை  எனக்கு  எப்படி இருக்கு அஷு மாமா..”என்று அவள் கேட்க மீண்டும் முன்பு போல் உற்சாகம் கொண்டவன்

“உனக்கு என்னடி அழகா இருக்க..,நான் தான் பாக்க முடியாம கஷ்ட படுறேன்..”என்று அவன் கூற

“எதுக்கு அஷு மாமா எனக்கு இது நல்லா இல்லையா..,இந்த புடவை எனக்கு நல்லா இல்லையா..”என்று அவள் தனது உருவத்தை கண்ணாடியில் பார்க்க

“அடி என் மக்கு காதலியே..,நீ இந்த புடவையில..இல்ல..இல்ல...நீ கட்டுனதால இந்த புடவையே அழகா இருக்கு போதுமா..”என்று அவன் கூற அவனது வர்ணிப்பில் கவியின் கன்னங்களில் செம்மை ஏறியது..

அதை பார்த்தவனின் மனம் தான்  பாடாய் பட்டது..

அவள் கோவிலுக்கு செல்கிறோம் என்று கூறியதால் அமைதியாக இருந்தான்..

அனைவரும் ஒரு வழியாக கிளம்பி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் முடித்துவிட்டு வந்தனர்.

அனைவரின் வேண்டுகோளும் இதுபோல தங்களது குடும்பம் ஒற்றுமையாக என்றும் இருக்க வேண்டும் என்பதுதான்...

அவர்களுக்கு தெரியவில்லை போராட்டம் என்ற ஒன்று இல்லா விட்டாள் வாழ்க்கை சுவாரசியம் மிகுந்ததாக இருக்காது என்பது..

எந்த தாயும் தனது குழந்தைக்கு தித்திப்பு சுவையை மட்டும் தந்துக் கொண்டிருக்கமாட்டால்,

கசப்பு,துவர்ப்பு என்று அனைத்து சுவையையும் சேர்த்து தான் தருவாள்..

உடலின் உறுதிக்கு எப்படி நம் அன்னையோ..,அது போல தான் வாழ்க்கை அன்னையும் நமது மனதின் உறுதிக்கு கஷ்டங்களையும், இன்பத்தையும், வெற்றியையும், தோல்வியையும்,

சோகத்தையும், சந்தோசத்தையும் என மாற்றி மாற்றி தருவாள்...அதை தான் அவள்  அவர்களுக்கு தர தயரானாள் வாழ்க்கை அன்னை..

aeom

ஊருக்கு போய் விட்டு வந்ததும் அஸ்வின் தனக்கு அலுவலக வேலை இருப்பதால் கவியை தூங்க சொல்லிவிட்டு தனது அலுவலக அறைக்கு சென்றுவிட..

உடை மாற்றியவள் இன்று அவள் அணிந்து சென்ற நகையை பத்திர படுத்துவதற்காக அவனது கணவனின் அன்பளிப்பு அல்லவா,அவள் கோவிலுக்கு செல்ல அணிந்து செல்வதற்காகவே அஸ்வின் வாங்கி வந்து தந்திருந்தான்.. அலமாரியை  திறந்து வைக்க அப்பொழுது அவளது கண்களில் அவளது அன்னையின் டைரி கண்ணில் பட்டது..

எப்படியும் அஸ்வின் வரும் வரை தான் தூங்க போவதில்லை என்பதை உணர்ந்தவள் தனது அம்மாவின் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்..

அந்த டைரியின் முதல் பக்கத்திலேயே அவளது அன்னையின் பெயர் திருமதி.கவியரசி மலர்கண்ணன் என்று இருந்தது..

ஆம் அவளது தந்தையின் பெயர் மலர்கண்ணன் அவரது வருகைக்காக தான் இவ்வளவு வருடம் அவள் காத்திருக்காள்.

தனது அன்னையின் பெயரை தடவி பார்த்தவளின்  கண்களில் கண்ணீர் துளிகள்..

அடுத்த பக்கத்தில் அவளை கையில் வைத்துக் கொண்டிருந்த அவளது அன்னையின் புகைப்படம்..

அவர் கருவுற்ற நான்கு மாதத்தில் இருந்து தனது கணவரிடம் சொல்வதாக நினைத்து அந்த டைரியில் எழுதி இருந்தார்.. வயிற்றில் இருந்த தனது குழைந்தையின் ஒவ்வொரு அசைவையும் தனது கணவனுக்காக எழுதி இருந்தார்.அந்த டைரி நாட்கள் கணக்கில் தொடர்ந்து எழுத படவில்லை..அவரது வாழ்வில் மறக்க முடியாது என்று நினைத்த நிகழ்வுகளை மட்டமே எழுதி இருந்தார்..

தங்களது மகளுக்கு தனது பெயரையும்,அவளது தந்தையின் பெயரையும் இணைத்துத்தான் கவிமலர் என்று வைத்ததாக கவியரசி அந்த டைரியில் குறிப்பிட்டிருந்தார்

அடுத்து சிறு வயது கவியின் சிறு வயது குறும்புகளை குறிப்பிட்டிருந்தவர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.