(Reading time: 16 - 31 minutes)

அதற்கு பிறகு எழுத ஆரம்பித்திருந்தது அவர் இறப்பதற்கு  பதினைந்து நாட்களுக்கு முன்பு

அதில் அவர் எழுதி இருந்ததை பார்த்தவளுக்கு இதுவரை அவள் அன்பு வைத்திருந்த பலரது மேல் அவளுக்கு கோபம் தான் வந்தது...என்ன எழுதி இருந்தார் அவர் அன்னை..(இப்பே சொல்லிட்டா எப்படி..,ரொம்ப ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தா..,மன்னிச்சிடுங்க...,அப்புறமா சொல்லுறேன் ரகசியம்ல...)

அதைப் படித்தவள் உணர்ச்சியற்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள்.அவளது மனதில் எண்ணிலடங்கா எண்ணங்கள் ஓடியது..

அவளது மனதில் முழுவதும் வலிகள் மட்டுமே நிறைந்திருந்தது....

தனது வேலைகளை முடித்துவிட்டு வந்த அஸ்வின் பார்த்தது வானத்தையே வெறித்து பார்த்து அமர்ந்திருந்த கவியை தான்...

தூக்க கலக்கத்தில் அவள் அவ்வாறு  அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்தவன் அவள் அருகில் சென்று  "எதுக்கு கவி இன்னும் தூங்காம உக்காந்திருக்க....,நான் தான் லேட்டாகும்னு சொன்னேன்ல....,சரி வா தூங்கலாம்...."என்று அவள் தோள் தொட்டு எழுப்பி படுக்கைக்கு அழைத்து சென்றான்.

அவளது முகத்தை பார்த்தவன் அவள் ஊருக்கு சென்று வந்த களைப்பில் தான் ஒரு மாதிரி இருக்கிறாள் என்று நினைத்தான்.

அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அறைக் கதவை மூடிவிட்டு லைட்டை அணைத்து விட்டு வந்து அவளது அருகில் படுத்தவன் எப்பொழுதும் போல அவளை தனது கையணைப்பில் கொண்டு வந்தான். தனது வாடிக்கையான உச்சி முத்தத்தை அவன் தர அவளது யோசனை எல்லாம் நின்று ஒரு வித அமைதியை தர கண் மூடி உறங்கினாள் கவி...

aeom

விடிகின்ற பொழுது தனது வாழ்க்கையின் ஒட்டத்தையே  மாற்றப் போகிறது என்று தெரியாமல் தன்னவனின் அணைப்பில் துயில் கொண்டிருந்தாள் கவி..

சூரியனது கதிர்கள் முகத்தில் சுள்ளென விழ திரும்பி திரும்பி படுத்தாள் கவி....

ஆனால் ஆதவனின் கதிர்வீச்சை தாங்க முடியாமல் கண்ணை திறக்க முடியாமல் திறந்தவளது கண்களில் பட்டது வெளிச்சம் பரவிய அறையே....

விழுந்து அடித்து கொண்டு அவள் எழ மணி 8.00யை கடந்திருந்தது.

அவசரமாக குளிக்க சென்றவளது கண்ணில் பட்டது நாட்காட்டியில் இன்றைய தேதி...

இன்று அவளது அம்மாவின் நினைவு நாள்...

நேற்று அவள் அவளது அன்னையின் டைரியை படிப்பதற்கும் அதுவே காரணமாக அமைந்தது.

நேற்று அதை படித்தபின் அவள் அவளாகவே இல்லை...

கோவிலுக்கு சென்று வந்த அலைச்சல் நேற்றைய அந்த அதிர்ச்சி எல்லாம் அவளது மூளையை மழுங்கடித்துவிட்டது.

இன்றைய நாள் அவளது நாராயணன் தாத்தா  தான் எல்லாவற்றையும் அவளை அருகில் வைத்துக் கொண்டு செய்யவார்..இப்பொழுது அஸ்வின் கூறியதால் அவரிடமும் பேச முடியாது.ஜனர்த்தனன் தாத்தாவின் உதவியை தான் வாங்க வேண்டும் என்று நினைத்தவள் அவசர அவசரமாக குளிக்க சென்று விட்டு தயாராக ஆரம்பித்தாள்.அவளது கண்களில் வீட்டில் இருந்த யாரும் தென்படவில்லை.அஸ்வினை கூட  காணவில்லை.அவள் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களது அறைக்கு நித்தி வந்தாள்.

"கவி ஒரு வழியா எழுந்துட்டியா...,பாட்டி உன்னை எழுப்ப சொல்லியும் அஸ்வின் உன்னை எழுப்ப வேண்டாம்னு சொன்னதால யாரும் உன்னை எழுப்பல..,நீ எழுந்திருந்தனா உன்னை கீழே வர சொல்லி அஸ்வின் சொல்ல சொன்னான்..,அதனால கீழே சீக்கிரம் வா..." என்று கூறி விட்டு கவி கேள்வி எதுவும் கேட்கும் முன்னே நித்தி அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்திருந்தாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் கிளம்பியவள் கீழ் சென்றாள்.கீழ சென்றவளது கண்களில் முதலில் பட்டது மாடிபடிகளையே பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின் தான்..

அவளது வருகையை கண்டவனுக்கு உதடுகளில் ஒரு சின்ன சிரிப்பும்,பெருமூச்சும் வந்தது.

அவனை பார்த்து சிரித்தவளது கண்களில் பட்டது அஸ்வினது

மாமா மலரும் ,அவரது அருகில் அமர்ந்து இருந்த ஐயரும் தான்.

அவர்களது அருகில்  மற்றவர்கள் இருக்க அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தவளின் கண்களில் பட்டது நடுவில் மாலையுடன் இருந்த போட்டோ அதை பார்த்தவளின் மூளை வேலை நிறுத்தம் செய்ய அவளது முகத்தில் பல வித எண்ணங்கள் வந்து போனது.அது எல்லாம் ஒரு சில நொடிகள் தான் அடுத்த நிமிடம் அவள் செய்த செயல் அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சி கொள்ள வைத்தது.நேராக அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றவள் அனைவரையும் தாண்டி சென்று அங்கு நடுவில் இருந்த அந்த போட்டோவை எடுத்தவள் அங்கு அமர்ந்திருந்த அஸ்வினது மாமா மலரை முறைக்க பார்த்தவள்..

“இவங்களுக்காக இதையெல்லாம் செய்ய உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது...”என்று அவள் கேட்க அதை அவளிடம்  எதிர்பார்த்திருந்தான்  அஸ்வின்.ஏனென்றால் அவளது வீட்டில் அவனது மாமாவை பற்றி   என்ன சொன்னார்கள் என்று  தெரியாமல் தான் அவன் தவித்திருந்தான் அவன் நேற்று அவனது மாமா அவனது அத்தை க்கு நாளை திதி என்று சொன்ன உடனேயே அவனுக்கு ஞாபகம் வந்த முதல் முகம்  கவியினது முகம் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.