“ஹ்ம்ம்.. நானும் அப்படிதான் யோசித்தேன் விழி... ஆனால் நீ கொஞ்சம் கூட கலங்காதே கண்ணம்மா.. அப்பாவிடம் எப்படியாவது முழு சம்மதம் வாங்கி உன்னை கைபிடிப்பேன்.. உனக்கு சத்தியம் செய்து தருகிறேன்”
“ச்சே.. ச்சே.. என்ன இளா இது? உங்களை நம்பாமல் இருப்பேனா?”
“இல்லை.. விழிம்மா. இன்றைக்கு உன் கண்ணில் கலக்கத்தை பார்த்தேன்... இனி ஒருமுறை உன்னை என்னால் அந்த மாதிரி பார்க்க முடியாது.. உனக்கு எந்த நிமிடம் கலக்கம் தோன்றினாலும், நான் அவரை எதிர்த்தாவது உன்னை கை பிடிப்பேன்..”
“அப்படி எல்லாம் பேசாதீர்கள் இளா.. வீட்டிற்கு செல்ல பெண் என்பதால் இதுவரை எனக்கு கேட்டது கிடைத்து இருக்கிறது.. முதல் முறையாக உங்களை நான் இழந்து விடுவேனோ என்ற கலக்கம் அப்போது இருந்ததுதான்.. ஆனால் இப்போ அப்படி இல்லை.. எக்காரணம் கொண்டும் நீங்கள் உங்கள் அப்பாவை எதிர்த்து செய்யகூடாது.. நாம் நாளைய தலைமுறைக்கு வழி காட்டுபவர்கள்.. நம்மால் அவர்கள் குறுக்கு வழியில் சென்றாதாக இருக்க கூடாது. அதற்கு நாம் பொறுமையை காரியங்கள் செய்வோம்..”
“ஹ்ம்ம். சரி ..என் வீட்டில் பிறகு பேசலாம்.. உன் வீட்டில் நீ பேசுகிறாயா? நானும் வரட்டுமா ? ரெண்டு பேரும் எடுத்து செல்லுவோம்..”
“வேண்டாம்பா.. கொஞ்ச நாட்களாக பாட்டி சரியாக இல்லை.. அவர்களுக்குள் ஏதோ எண்ணங்கள் அழுத்துகிறது.. இப்போது நம்மை பற்றி பேசினால் சரியாக இருக்கும் போல் தோன்றவில்லை.. உங்கள் வீட்டிற்கு தெரியவரும்போதே என் வீட்டிலும் சொல்லலாம்.. “
“சரிடா.. எப்படியும் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்கு கவலை இல்லை.. மே மாசத்தில் நம் காலேஜ் செமஸ்டர் முடியவும் , நம் வீட்டில் பேசலாம்.. அதற்குள் தேவைபட்டால் நாம் என்ன செய்வது என்று பார்த்துக் கொள்ளலாம்.. “ என்று முடித்தவன்
“வா.. கிளம்பலாம்.. “ என்றான்.
அவளின் கலக்கத்தை பார்த்து கை பிடித்தவன் இதுவரை விடவே இல்லை.. இப்போது கிளம்ப எழுந்த பிறகும் அவன் கை விடாமல் இருக்கவும், அவனை நேரடியாக பாராமல்
“கொஞ்சம் கையை விடுறீங்களா? என,
“ஏன்? “ என்றவன் , “கையை தானே பிடித்து இருக்கிறேன்... உன் தோளிலா கை போட்டு இருக்கிறேன்.. “
“ஹலோ ஒரு காலேஜ் ப்ரோபாசர் மாதிரி பேசுங்க சார்.. “
“இது காலேஜ் இல்லை.. அதோட நான் பிடித்து இருப்பது என் காதலி கையை.. ஏன் விடனும்?”
“ப்ளீஸ்” என்று கெஞ்சவும்
“அவனவன் காதலி கூட எங்ககோ போறான்.. நான் முதல் முதலில் காப்பே ஷாப் வந்து இருக்கேன் உங்கூட ,.. அதுவும் பிரச்சினைகள் பற்றி பேச.. நீ என்னடா என்றா கை விட சொல்றியே? இது நியாயமா.. இது தர்மமா... இப்படி எங்கியாவது நடக்குமா “ என்று அவளிடம் மொக்கை போட்டன்..
“ஐயே.. காதில் இருந்து ரத்தம் வருது.. “ என்று அவன் தோளில் ஹன்ட்பகால் தட்டினாள்.
அவர்கள் இருந்தது காபின் போன்ற அமைப்பு.. அதிலும் ஓரம் என்பதால் யாருக்கும் அவர்கள் இருப்பது தெரியவில்லை.. இவள் கிளம்ப எழுந்து இருக்கும்போது அவளின் அப்பா வாசல் பக்கம் செல்வது தெரிந்தது.
எழுந்த வேகத்தில் அமர்ந்தவள் “அப்பா” எனவும்,
“என்ன ஆச்சு. விழி டார்லிங்? மாமாவ விட்டு பிரிய மனசில்லையா?”
“மண்ணாங்கட்டி .. எங்க அப்பா அங்கே போறார்
“ஹை...எங்க ?” என்றவன் வாசல் பக்கம் பார்த்து “ஹலோ மிஸ்டர் வேலன் “ என.
“டேய்.. இப்போ எதுக்கு அவர கூப்பிடுற?”
அதற்குள் அவனை கவனித்து அந்த காபின் நோக்கி அவர் வருவதையும், மலரின் தவிப்பையும் பார்த்தவன் தானே முன்னே சென்றான்.
“ஹலோ மிஸ்டர் செழியன்.. “ என்று அவனிடம் நலம் விசாரித்தவரிடம்
“வரீங்கள ஒரு.. கபே சாப்பிடலாம்..”
“இல்லை சார்.. இப்போ தான் ஒரு பிரெண்ட் கூட சாப்பிட்டேன்.. நீங்க சாப்பிடுங்க.. நான் வரேன்..” என்று கிளம்பினர்.
அவர் செல்வதை பார்த்து விட்டு திரும்பிய மலர், அருகில் இருந்த கிளாஸ் டம்ளர் நீரை செழியன் மேல் வீசி,
“உங்களுக்கு என்ன மௌன ராகம் கார்த்தின்னு நினைப்பா?”
“ஹேய்.. நீ மட்டும் மௌனராகம் ரேவதி மாதிரி உங்க அப்பாவ பார்த்து ஜெர்க் ஆன. அத பார்த்து தான் இந்த வேலை செய்தேன்” என்று கூலாக சொன்னான்..
“உங்களை.........” என்று முறைத்தவள் உடனே சிரிக்க தொடங்கி விட்டாள். செழியனும் அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டான்.
இருவருக்கும் இந்த விளையாட்டு பிடித்து இருந்தது.. இத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து இருவரும் சற்று இலகுவான மனநிலையோடு கிளம்பினார்கள்.
“பாய் .. விழிம்மா... பார்த்து ஜாக்கிரதையா போ.. வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு..” என
“பாய் . .இளா.. அப்புறம் கால் பண்ணுங்க” என்றபடி மலரும் கிளம்பினாள்.
இருவரின் எண்ணப்படி நடக்குமா? காலம் என்ன வைத்து காத்து இருக்கிறது.?
தொடரும்!
{kunena_discuss:1126}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.