(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 28 - தேவி

vizhikalile kadhal vizha

வீட்டிற்கு செல்ல பெண் என்றாலும் பாட்டியின் சில கட்டுபாடுகளுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் செவி சாய்ப்பாள். அதில் முக்கியமான சில விஷயங்கள் இருட்ட ஆரம்பித்த பின் யார் வீடும் செல்லக் கூடாது. அதே போல் அனாவசியாமாக வெளியில் பிரெண்ட்ஸ்சோடு சுற்றக் கூடாது.

முடிந்தவரை இந்த விஷயங்களை கடைபிடிப்பாள். அப்படியே செல்ல நேர்ந்தாலும் கூப்பிடுவதற்கு அப்பாவை வர சொல்லி விடுவாள். அதனால் அவளுக்கு பிரெண்ட்ஸ் அதிகம் பேர் கிடையாது. யாரிடமும் முகம் திருப்பவும் மாட்டாள்.

அப்படிப்பட்டவள் இன்று தான் முதல் முதலாக செழியனோடு வெளியே சென்று இருந்தாள். இந்த  அனுபவம் மலருக்கு புதிதாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

இந்த சந்தோஷத்தோடு இவள் வீட்டிற்கு வரும்போதே மலரின் அப்பாவும் வந்து இருந்தார். சாதாரணமாக சிரித்தபடி வந்தவளிடம்.

“என்னம்மா.. இன்னிக்கு லேட்?” என கேட்க, மலர் திடுக்கிட்டாள். தான் காபி ஷாப் சென்றது தெரிந்து விட்டதோ என்று எண்ணி பயந்தவள், அவள் அப்பாவின் முகத்தை பார்க்க, சாதரணமாக இருக்கவும், தன்னை அறியாமல் பெருமூச்சு விட்டாள்.

பின் “காலேஜ் பங்க்ஷன் பற்றி சொல்லிருந்தேன் இல்லியா? அதற்கு ஒரு மீட்டிங் செழியன் சாரோடு இருந்தது அப்பா.. “ என்று சொன்னாள்.

“சரிம்மா.. போய் பிரெஷ் ஆகி வா “ என்று விட, தன் அறைக்கு சென்று விட்டாள்.  உண்மையும் இல்லாத பொய்யும் இல்லாத ஒன்றை கூறி தப்பித்து விட்டாள். அவளுக்கு புரிந்தது அவள் அப்பா செழியனோடு காலேஜ்ஜில் வேலை என்று நினைப்பது. இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும். இன்னும் சில நாட்கள் கழித்து தன் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம்...என்று நினைதாள் மலர்.

பிரெஷ் ஆகி வெளியே வந்தவள், வழக்கம் போல் தன் கலட்டக்களை செய்தபடி இருந்தாள்.

இரவு படுக்க சென்ற பின்  அன்றைய நிகழ்வுகளை மனத்தில் ஒட்டி பார்த்தவள், செழியனோடு தன் நெருக்கம் எண்ணி வியந்தாள். செழியன் அவளின் கை தொட்டதும், தன்னை அறியாமல் தான் டா.. போட்டதும், என இருவருக்குமான அந்த நேரங்கள் அவள் மனதில் ஒரு ரகசிய புன்னகையை உண்டாகியது,

இப்போது செழியன் அவளிற்கு மெசேஜ் அனுப்ப, அவளும் பதில் அனுப்ப ஆரம்பித்தாள்.

“ஹாய்.. டியர் “

“ஹாய்.. சாப்டாச்சா? வீட்டிலே அம்மா இல்லியே? எங்கே சாப்டீங்க..? வீட்டுக்கு எப்போ வந்தீங்க..?”  என்று மலர் வரிசையாக மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்க,

“ஸ்டாப்.. ஸ்டாப்.. ஒன்னு ஒண்ணா கேளு.. சப்பா.. மெசேஜ்லேயே இந்த போடு போடறியே? நேர்லே பேச ஆரம்பிச்ச நான் ஸ்டாப் நச்சரிப்பு தான் போலே?”

“ஹலோ.. இது என்ன புது புது பேர் எல்லாம் வருது.. “ என்று கோப ஸ்மைலி அனுப்ப,

“ஹேய்.. சும்மா “ என்று சாரி ஸ்மைலி அனுப்பினான்.

பிறகு “ நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் ஹோடேலில் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் ஆச்சு. ஓகேவா .”

“அப்போ ஏன் இவ்ளோ நேரம் மெசேஜ் பண்ணல?”

“கொஞ்சம் ரூம் எல்லாம் கிளீன் பண்ணினேன்.. அதான்..”

-“சரி.. இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ? ஏதோ பாட்டு சத்தம் கேட்குது..?”

செழியன் “வீட்டில் யாரும் இல்லாததால் ஹாலில் மெத்தையை விரித்து, டிவியில் பாடலும் போட்டு சுகமாக உனக்கு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கேன்..”

“என்ன பாட்டு ..?”

“ஹ்ம்ம்.. காதல் பாடல்கள்.. .. என்னஎன்ன பாட்டு தெரியுமா .. தூங்காத விழிகள் ரெண்டு, வளையோசை கல கல, அப்புறம் தென்றல் வந்து  என்னை தொடும் ..இது எல்லாம் கேட்டுட்டு இருக்கேன்..”

“சூப்பர் சாங்க்ஸ்லே.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. ஆனால் இப்போ கேட்க முடியாது.. தீடிர்னு அம்மா வந்தாங்கன்னா மாட்டிக்குவேன்.. ஹ்ம்ம்..”

“நோ ப்ரோப்லேம் டியர்.. உனக்கும் பாட்டு தானே கேட்கணும்.. ஹெட் போன் எடுத்து மாட்டிக்கோ.. இப்போ போனை கட் பண்ணாம பெட்லே தனியா வச்சுக்கோ.. “ என்றவன்

“அடுத்த பாட்டு இப்போ கேளு..

       “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்”

என்ற வரிகளை செழியன் பாட, அடுத்த வரியான

        “என் வீட்டில் இரவு.. அங்கே இரவா.. இன்னும் பகலா ..எனக்கும் மயக்கம்..”

என்ற பெண் வாய்ஸ்ல் வரும் வரிகளையும் அவனே பாடினான்.. அதிலும் அந்த பீமேல் வாய்ஸ்சில் அப்படியே பாடினான்.. பாடல் முடியும் வரை எதுவும் பேசாமல் இருந்தவள் , பின்

“எக்ஸ்செல்லன்ட் .. இளா.. ரொம்ப நல்லா இருந்தது.. தேங்க்ஸ் .. & லவ் யு..” என,

செழியனோ இனிதாக அதிர்ந்தான்..

“லவ் யு டூ.. விழிம்மா.. ரொம்ப ஹாப்பியா இருக்கு.. “ என்று தன் மனதினை தெரிவித்தான் செழியன்..

இருவரும் மேலும் சற்று நேரம் பேசி இருக்க, மலர் மெதுவாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.