(Reading time: 10 - 20 minutes)

“இளா.. போதும் தூங்குங்க.. காலையில் .. பார்க்கலாம்.. காலேஜ் அனுவல் டே ஏற்பாடுகள் வேற இருக்கு.. “ என

“ஆமாம்டா..இனிமேல் காலேஜ் ரொம்ப பிஸியா இருக்கும்.. பசங்க எல்லாம் கிளாஸ் வராம, ப்ராக்டிஸ் போறதா சொல்லுவாங்க.. அவங்கள கோஆர்டினேட் பண்ணனும்.. சோ தினமும் நான் நைட்லே கால் பண்றேன். சரியா “ என

“சரிப்பா.. குட் நைட்.. “

“குட் நைட் .. ஸ்வீட் ட்ரீம்ஸ்.. அந்த ட்ரீம்ஸ்லே இப்போ கேட்ட பாட்டு எல்லாம் என்னோட சேர்ந்து நீயும் பாடனும்.. பாய்..”

அந்த பாடல்களை எண்ணியவள் “ஹையோ..” என்று வெட்கத்துடன் தலையானையில் முகம் புதைத்தாள்.

டுத்த நாளில்ருந்து காலேஜ் முழுதும் ஆண்டு விழா பற்றிய பேச்சே இருக்கே, எல்லோரும் அதன் பயிற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட முழு கல்லூரியும் கலந்து கொண்டு இருந்தது.

அந்த வாரம் முழுதும் போட்டிகள் என்ன என்ன என்று அறிவிப்பு கொடுத்து விட்டு , அதற்கான பயிற்சிகளுக்கும் கால அவகாசம் கொடுக்க பட்டது.

இதனிடையே செந்திலும் லீவ் முடிந்து கல்லூரிக்கு வந்து இருக்க, செழியனிடம் தனியாக பேச எண்ணினான்.. ஆனால் இந்த வேலைகள் இருவரையும் பேசவே விடவில்லை.

லீவ் முடிந்து வந்த பிறகிலிருந்து மலர், செழியன் இருவரையும் கண்காணித்து கொண்டுதான் இருந்தான்.. ஆனால் முதலில் போல் இருவரும் அவனிடம் மாட்டவில்லை.. இருவரின் பார்வைகள் மட்டுமே பேசிக் கொண்டன.. காலேஜ் தவிர்த்து எந்த விஷயமும் இருவரும் பேசுவதில்லை.. 90 % சதவீதம் உறுதியாக செந்திலுக்கு தெரிந்து இருந்தாலும், அதை உறுதிபடுத்த முடியவில்லை.

பிப்ரவரி கடைசி வாரம் முழுதும் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் என்று முடிவு செய்து இருந்தனர் கல்லூரி நிர்வாகிகள்.. . ஏறத்தாழ இருபது நாட்களுக்குள் மட்டுமே அவகாசம் இருந்ததால் ஒவ்வொரு பிரிவில் இருந்தவர்களும்  அவர்களுடைய வேலையை ஆரம்பித்து இருந்தனர்.

முதலில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.. டிபார்ட்மென்ட் வாரியாக நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் வருபவர்களை வைத்து அடுத்த ரவுண்டு நடத்தப்பட்டது.

பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற தனி விளையாட்டுக்கள் இருக்க, குழு விளையாட்டுகளான கிரிக்கெட், வாலி பால், எல்லாவற்றிலும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பிரிவிற்கு தனியாக போட்டிகள் நடைபெற்றன.

அதே போல் சயின்ஸ் டலேன்ட் ஷோ தனியாக நடத்தப்பட்டது... அதற்கு ஊரில் உள்ள எல்லா கல்லூரி, பள்ளிகளுக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தது..

கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட்ஸ் முகநூல் , ட்விட்டர், இன்ச்டாக்ரம் எல்லாவற்றிலும் நடக்கும் போட்டிகள் பற்றிய விவரங்கள் பதிவேற்றப்பட்டது. அதோடு தனியாக பழைய மாணவர்களை ஒருங்கிணைக்கும் விழாவிற்கு அழைப்பும் எல்லா முக்கியமான வெப்சைட்களிலும் ஸ்க்ரோல்லிங் ஓட விட்டு இருந்தனர்.

அந்த அறிவிப்பை கிளிக் செய்யும்போது கல்லூரி தொடங்கி நூறாவது ஆண்டு என்ற அறிவிப்பும் அதற்கான விழா கொண்டாட்டங்கள் பற்றிய அறிவிப்பும் வந்தது. அதில் கலந்து கொள்ள பழைய மாணவர்களுக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்த நிறைய பேர் தங்கள் விருப்பத்தை அதிலேயே தெரிவித்து இருக்க, அவர்கள் கொடுத்து இருந்த ஈமெயில் ஐடிக்கு தனியாக அழைப்பிதழும் அனுப்பப்பட்டது.

இவர்கள் எதிர்பார்க்காத வகையில் சில சாதாரண வேலையில் இருந்து ரிடையர் ஆனவர்கள் முதல் மிக பெரிய அதிகாரிகள் வரை பழைய மாணவர்கள் லிஸ்ட் கிடைத்தது.

ஐம்பது வருடங்கள் வரை உள்ள விவரங்கள் எல்லாம் ஓரளவு இவர்களுக்கு கல்லூரியிலேயே கிடைத்து இருக்க அதற்கு முன்னாலும் உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் வந்து சேர தொடங்கின..

பத்து பேர் வரை எழுபது ஆண்டு முன் இதே கல்லூரியில் படித்தவர்கள் விவரம் கிடைத்து அவர்களுக்கு அழைப்பும் அனுப்பப்பட்டது.. கிட்டத்தட்ட அனைவருமே எண்பத்து ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள்..  இதை அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

அந்த பத்து பேருக்கு மட்டும் தனியாக போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இது முழுதும் கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் மாணவர்களின் முயற்சியே.. அவர்களின் இந்த பணிக்கு கல்லூரி மாணவர்கள் முழுதும் போட்டி பொறமை இன்றி வாழ்த்து தெரிவித்ததோடு , அதற்காக ஒருநாள் காலேஜ் அசெம்ப்ளியின் போது பாராட்டுக்களும் நடைபெற்றது.

டான்ஸ் & ஆர்கெஸ்ட்ரா இரண்டும் வேண்டும் என மாணவர்கள் வலியுறத்த, அதனை ஒரு நாள் முன்னாடி வைத்து இருந்தனர். அதற்கு ஒரு புறம் ப்ராக்டிஸ் நடந்தது..

நாடகம் பொறுப்பேற்று இருந்த மலர், ரெண்டு தமிழ், ரெண்டு ஆங்கில நாடகம் செலக்ட் செய்து வைத்து இருந்தாள். ஒன்று வரலாறு சம்பந்தப்பட்டதாகவும், ஒன்று சமூக பிரச்சினை பற்றியும் ரெடி செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.