(Reading time: 10 - 20 minutes)

இதன் பயிற்சியை தற்செயலாக பார்த்த செழியன், மலரின் உச்சரிப்பிலும் ,  வசனங்களின் ஏற்ற இறக்கங்கள் அவள் வெளிபடுத்திய விதமும் கண்டவன், அவளை மெயின் ப்ரோக்ராம் அன்று மாஸ்டர் ஒப் செர்மணி செய்ய சொன்னான்.. முதலில் தயங்கிய மலர் பிறகு ஒப்புக் கொண்டாள்.

ந்த வேலைகளால் தினமும் தாமதமாக வந்த மலரை கண்டு அவள் ஆச்சி

“எந்தாயி.. நிதமும் இத்தனை நேரங்கழிச்சு வாறியே.. .உன்ன நீ சோலிக்கு போவும்போதே இப்படி ஆக கூடாதுன்னு கேட்டுகிட்டேனே? “

களைப்பாக இருந்தாலும் பொறுமையாகவே “ஆச்சி.. இது இந்த ஒரு மாசம் தான்.. காலேஜ்லே ஆண்டு விழா வருது.. அதுவும் இது நூறாவது வருஷம் ... அதான் கொஞ்சம் வேலை இருக்கு ... இந்த விழா முடிஞ்சுதுன்னா... வழக்கம் போலே வந்துருவேன்..”

“அதுக்கில்லத்தா.. பொம்பள புள்ள.. நீ வந்து சேரும் வரைக்கும் மனசு கிடந்து அடிச்சுக்குது ... “

“நான் மட்டும் இல்லை ஆச்சி.. எல்லோருமே இவ்ளோ நேரம் இருந்துட்டு தான் வரோம்..”

“இருந்தாலும் நீ தனியாதனே வாறே.. காலம் கேட்டு கிடக்குது கண்ணு..”

“ஒன்னும் பயமில்லை ஆச்சி.. அப்படி ரொம்ப இருட்டுச்சுன்னா.. யாரவது கூட வந்து விட்டுட்டு போவாங்க.. “

“அப்படி நீ இருந்துதான் ஆகணும்னா.. இந்த வேலையே வேண்டாம் கண்ணு... விட்டுடு” என

“என்னது..” என்று மலர் கோபமாக பேச ஆரம்பிப்பதற்குள் அவள் அம்மா

“அத்த... புள்ள தான் இம்புட்டு சொல்லுதா இல்லை.. நீங்க கவலை படாம இருங்க.. அவ இந்த ஒரு மாசம்தானே சொல்லுதா.. பார்க்கலாம்.. அப்படி உங்களுக்கு ரொம்ப கவலையா இருந்துச்சா.. உங்க மகன விட்டு இனி கூட்டி வர சொல்லுவோம்.. “ என்று அவரை ஆறுதல் படுத்தினாள்.

மலரும் தன் கோபம் சற்று தணிந்தவளாக..

“ஆச்சி.. உன்ன அந்த விழா அன்னிக்கு கூட்டி போறேன்.. நீயே பாரு.. எவ்ளோ பெரிய காலேஜ்.. நம்ம தாத்தா வயசுலே உள்ளவங்க எல்லாம் இந்த காலேஜ்லே படிச்சவங்கன்னு விழாவிற்கு வாராங்க... நீ அதை எல்லாம் பார்த்தினா தான் உன் பேத்தி வேலை பார்க்குற காலேஜ் எப்படி , என்னனு விவரம் புரியும்..” என்று சமாதனாபடுத்தினாள்.

ங்கே செழியன் வீட்டில் அவனின் நேர கணக்கு அற்ற வருகையில் அவன் அப்பா கோபமாக இருக்க, அவரை கூல் பண்ணும் வழி தெரியாமல் விழித்தான்.

அவரின் எண்ணம் எல்லாம் பங்குனி மாசம் ஊருக்கு போவதற்குள் அவனை சரிகட்டி அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை.

அவனோ அதற்கு வழி கொடுக்காமல் நழுவி கொண்டு இருந்தான். சரி இந்த விழா முடியும் வரை அவனை விட்டு பிடிப்போம் என்று அவர் சற்று பொறுமையாய் இருந்தார்.

செழியனும் தன் பெற்றோரை முக்கியமான விழா நாளன்று காலேஜ் வருமாறு கூறினான்.

அவன் மனதில் அந்த விழாவில் மலரை ஏற்கனவே பார்த்து இருப்பதால், அவள் குடும்பத்தையும் அறிமுகபடுத்தி விடலாம் என்று எண்ணி இருந்தான்..

அவனின் எண்ணம் நிறைவேறியதா?

தொடரும்!

Episode # 27

Episode # 29

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.