(Reading time: 12 - 23 minutes)

"ஓ...இருங்கம்மா!காபியாவது குடித்துவிட்டு போங்க!"-என்று பரபரப்பாக சமையலறையுள் சென்றார் அவர்.அசோக்கை தேடியப்படி படி ஏறினாள் சிவன்யா.

எங்கிருப்பான் அவன்??சுற்றும் முற்றும் தேடிவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தாள் அவள்.அவனோ அங்கு மேசை மீது தலை சாய்த்து அமர்ந்த வண்ணமே உறங்கிக் கொண்டிருந்தான்.அதுவரை ஒலித்த அவள் சப்தம் சட்டென நின்றது.மெல்ல அவனருகே வந்தாள் சிவன்யா.சிறு குழந்தையை போல் உறங்கி கொண்டிருந்தவனின் கலைந்த கேசத்தை கோதினாள்.ஏதோ ஒரு சிலிர்ப்பு அவளுக்குள் தொற்றிக்கொள்ள,சட்டென தன் கரத்தை எடுத்துக் கொண்டாள்.

"என்னங்க!ஏங்க..."-அவளது அழைப்பில் சட்டென எழுந்தவன்,திருதிருவென விழித்தான்.

"என்னங்க?இப்படி தூங்குறீங்க?தூக்கம் வந்தா போய் படுத்து தூங்க வேண்டியது தானே!"-அவளை மனம் உணர்ந்ததும் இதழ் புன்னகைப் பூத்தது. 

"கொஞ்சம் டயர்டா இருந்ததும்மா!அதான்.."

"என்னாச்சு?உடம்பு சரியில்லையா?"-அவனது நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை!நான் நல்லா தான் இருக்கேன்!"

"நம்ப முடியலையே!"

"இதில்,பொய் சொல்லி என்னப் பண்ண போறேன்?நம்பும்மா!"

"ம்...நம்புறேன்!நம்புறேன்!"-என்றப்படி திருநீற்றை எடுத்து அவன் நெற்றியில் தீட்டினாள்.அவன் முகத்தில் உடனடியாக ஓர் மந்தகாசப் புன்னகை தவழ்ந்தது!!

"சரி நான் கிளம்புறேன்!"

"இப்போ தானே வந்த?"

"ம்...அப்பாத் தேடுவாங்க!"-அவள் கூறவும் அவள் கைப்பேசி ஒலித்தது.

"பாருங்க பண்ணிட்டார்!"-என்று அதை உயிர்ப்பித்தாள் அவள்.

"சொல்லுங்கப்பா!"

"................"

"நான்...இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்!"-அவள் பேசியப்படி இருக்க, அந்த ஆராதனைத் தட்டில் பதிந்தது அசோக்கின் கவனம்!!!

"சரிங்க நான் கிளம்புறேன்!"என்றாள் இணைப்பை துண்டித்தப்படி!

"சிவா!மோதிரத்தை போட்டிருக்கப் பார்!"-என்று அதிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டினான்.

"இது என்னுடையதில்லையே!"

"என்னம்மா?நீ கொண்டு வந்த தட்டில் தான் இருந்தது!"-சில நொடிகள் புருவம் சுருக்கி சிந்தித்தாள் அவள்.

"ப்ச்...கோவில்ல இன்னொருத்தரும் அர்ச்சனை பண்ணாருங்க!தட்டு மாறிடுச்சு போல!இப்போ என்னப் பண்றது?"

"அவர் யாருன்னு தெரியுமா?"

"தெரியாதுங்க!ஆனா,அந்த குருக்கள் அவரை நவீன்னு சொல்லி கூப்பிட்டார்!"

"சரிம்மா!நான் யாருன்னு விசாரித்து கொடுத்துடுறேன்!நீ டென்ஷன் ஆகாதே!"

"ம்...சீக்கிரம் கொடுத்துடுங்க!அது சென்ட்டிமண்ட்டான மோதிரமா கூட இருக்கலாம்!"

"ம்...சரிம்மா!நீ ஜாக்கிரதையா போ!"

"ம்...."அவனிடம் விடைப்பெற்றாள் சிவன்யா.

"ம்...இதை எங்கே வைக்கிறது?"-என்று சிந்தித்தவன் தன் தாயின் புகைப்படத்தின் அருகே சென்றான்.

அதைப் பொறுப்புடன் சிறு பெட்டியில் அடக்கி,தன் தாயின் பாதத்தில் சமர்ப்பித்தான்.

றுநாள் காலை....

"அந்த மோதிரம் எங்கே?உடனடியா தேடுங்க!எனக்கு அந்த மோதிரம் வேணும்!"-தொலைபேசியில் கோபமாக உரையாடினார்.

"ச்சே...எங்கே போச்சு?எங்கே விட்டேன்?"-எரிச்சலில் தலைப்பிடிப்பு ஏற்பட்டது அவருக்கு!!

"ஐயா!பெரியய்யா உங்களை பார்க்கணுமாம்!"-பணியாள் ஒருவர் வந்து கூற,பதைத்தது அவர் மனம்.

எந்த முகம் கொண்டு தமையனை சந்திப்பார்?அவரது ஆஸ்தான கணையாழியை தொலைத்து நிற்கின்றேனே!!என்றுமில்லாமல் அதனை ஆராதனை செய்து வா என்றாரே!!என்ன செய்வேன்!!பதைபதைப்புடன் தமையனின் அறைக்கு சென்றார் நவீன் குமார்.

ஆண்டுகள் பல ஓடி மறைந்தன....இன்னும் அவர் துயர் மாளவில்லை.பல ஆண்டுகளுக்கு முன் தலை நிமிர்ந்த சிம்மமாய் வலம் வந்தவர் இன்றோ!!!படுத்தப்படுக்கையாய்!!!

"அண்ணா?"-குரல் கேட்டதும் விழி உருட்டி பார்த்தவர்,தனது மோதிர விரலைச் சுட்டினார்.

"அண்ணா!அது வந்து...."

"ஐயா!உங்களை பார்க்க கலெக்டர் வந்திருக்காரு!"

"கலெக்டரா?என்ன பார்க்கவா?"

"ஆமாங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.