(Reading time: 12 - 23 minutes)

"என்ன சொல்றீங்க நீங்க?"

"இல்லைம்மா! நானா சொல்றேன்! ஒருவேளை அப்படியும் இருக்கலாமே!அதில்,தவறு என்ன இருக்கு?நாம கை காட்டுறவனை தான் அவ கல்யாணம் பண்ணிக்கணும்னு இல்லையே!அவ வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவளுக்கு சகல உரிமையும் உண்டு இல்லையா!"

"என்ன உரிமை?அந்த உரிமை எல்லாம் அவ கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுப்படி தாண்டும் போது,அவ எடுக்கட்டும்!என்ன காதல் வேண்டி இருக்கு!காதலாம் காதல்!அப்படி எதுவும் நடக்காது...நடக்கவும் கூடாது!"

"ஏன் மீனா?காதல் உனக்கு சாதாரணமா போச்சா?இத்தனை வருஷத்துல உன் மேலே எனக்கு காதல் இல்லைன்னா,என்ன ஆகியிருக்கும்னு யோசித்தாயா?"

"உங்க தத்துவம் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது!ஆனா,சிவன்யா விஷயத்துல இதான் என் முடிவு!!"-உறுதியாக கூறி எழுந்து சென்றார்

மீனாட்சி.

என்னவென்று தெரியவில்லை...ஆனால் எங்கோ ஓர் தவறு நடக்க இருக்கிறது என்பதை மட்டும் உதயக்குமாரின் மனம் ஊகிக்காமல் இல்லை.

றைவனின் ஆலயம் மிக ஆழமான அமைதியை அவள் மனதிற்கு அளிக்கவே செய்தது.காத்திருந்த தேடல் கரம் சேர்ந்த சமயத்தில்,அவ்வானந்தத்தை இறைவனை தவிர அவளால் எவரிடமும் பகிர இயலவில்லை.ஆனால் மனம் கவர்ந்தவனை குறித்து அவளால் தன்னை ஈன்றோரிடத்தில் விளக்க இயலுமா???

"யாருக்குமா அர்ச்சனை?"-அர்ச்சகரின் குரலில் கலைந்தாள் அவள்.

"அசோக் குமார்!"-என்று வேண்டிய விவரத்தை கூறினாள்.

"சுவாமி!"-எதிரிலிருந்து ஒலித்தது ஓர் கம்பீர ஆண் குரல்!!

"வாங்க நவீன் சார்!எப்படி இருக்கீங்க?"-பணிவுடன் விசாரித்தார் அவர்.

"நல்லா இருக்கேன்!"-பார்க்க முரடான தோற்றமாயினும்,விழிகளில் இரக்கம் சுரந்திருந்தது அவருக்கு!

"அண்ணா பேருக்கு!"-என்று அர்ச்சனை தட்டினை நீட்டனார் அவர்.அதையும் வாங்கி இறைவனிடத்தில் கொண்டு சென்றார் அவர்.

முழுதாக பத்து நிமிடங்கள் பொறுமையாக ஆராதனை செய்தவர்,சந்நதி நீங்கி வெளி வந்தார்.

"இந்தாங்க சார்!"-என்று ஒரு தட்டினை அம்மனிதரிடமும்,மற்றொன்றை சிவன்யாவிடமும் அளித்தார்.கணநேரத்தில் இறைவனின் சித்தத்தால் அவை இரண்டும் மாறிய செய்தியை அவர் அறிந்திருக்கவில்லை.எஞ்சிய இருவரும் கூட அதனை அறிந்திருக்கவில்லை!தத்தம் ஆலயம் நீங்கி சென்றனர் இருவரும்!!விதிப்போடும் கணக்கு அங்கு இறைவனால் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது!!

வானம் நன்றாக இருட்ட இன்னும் சில நாழிகைகள் மீதமிருந்த பொழுது அது!!தனது கைப்பேசியை எடுத்து,அசோக்கை அழைத்தாள் சிவன்யா.

"ஹலோ!"

"சொல்லும்மா!"

"எங்கே இருக்கீங்க?"

"வீட்டுல தான் இருக்கேன்!"

"எப்படி இது சாத்தியம்? ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டீங்க?"

"வேலை ஓவர் அதான்!என்ன விஷயம்மா?"

"இல்லை...கோவிலுக்கு போயிருந்தேன்.உங்க பெயரில் அர்ச்சனை பண்ணேன்!பிரசாதம் கொடுக்கணும்..."-குழந்தைத்தனமாய் ஒலித்தது அவள் குரல்.

"ரொம்ப வருடம் கழித்து என் பெயரில் அர்ச்சனை நடந்திருக்கு!"-அவன் குரலில் ஒரு வலி தெரிந்தது.

"அதுக்கு ஏன் கேட்டுட்டு இருக்க?இது உன் வீடும்மா!நீ எப்போ வேணும்னாலும் வரலாம்!நான் கார் அனுப்பட்டா?"

"அதெல்லாம் வேணாம்!எனக்கு வர தெரியும்!நான் ஒண்ணும் குழந்தை இல்லை..அட்ரஸ் மறக்க!"

"ஐயோ!சரிங்க மேடம்!வாங்க!"-என்றான் புன்னகைப் பூத்தப்படி!!

சரியாக அரை மணி நேர தனது இருச்சக்கர வாகன பயணத்தை முடித்தவள்,அந்த வீட்டை அடைந்தாள்.அவளை கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றான் காவலாளி!!

"வாங்க மேடம்!"

"அவர் இருக்காரா?"

"இருக்கார் மேடம்!நீங்க போங்க!"-புன்னகை ஒன்றை பரிசளித்துவிட்டு வீட்டின் உள் சென்றாள் அவள்.

"என்னங்க!"-குரல் கொடுத்தாள் அவள்.

"தம்பி மேலே இருக்கார்மா!"-என்றார் அவன் இல்லத்தில் பணி புரிபவர்.

"ஓ...சரிங்க!"

"என்ன சாப்பிடுறீங்க?"

"எதுவும் வேணாம்!நான் உடனே போகணும்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.