“அம்மு பெரியவங்க முன்னாடி இப்படி தான் பட்டுன்னு பேசி வைக்கிறதா” வருண் அதட்டிக் கொண்டிருந்தான்.
“சின்ன பொண்ணு தானே மாப்பிள்ளை. உனக்கு எப்படி இஷ்டமோ அப்படியே கூப்பிடு மா” ஜெயகுமார் வந்து சொல்லவும் பவானியும் சிரித்த முகத்தோடு அமோதிக்கவும் லக்ஷ்மியும் ராமச்சந்திரனும் நிம்மதி அடைந்தனர்.
“சரி சரி நானே போய் அண்ணியை கூட்டிட்டு வரேன்” எழுந்து சென்று காயத்ரியை அழைத்து வந்தாள் வர்ஷினி.
முறைப்படி பெண் பார்க்கும் சம்பிரதாயம் என்பதால் காயத்ரி சற்றே நாணம் கொண்டு அமைதியாக இருந்தாள்.
வருணும் காயத்ரி வந்தமர்ந்ததும் லேசாக தலையைக் குனித்து கொண்டான்.
“ஷ்ஷ்ப்பா...” இருவரையும் மாறி மாறி பார்த்த வர்ஷினி மீண்டும் சீண்டலை ஆரம்பிக்க அங்கே கலகலப்பும் சந்தோஷமும் நிறைந்திருந்தது.
ஒரு நல்ல நாள் குறித்து, அன்று நிச்சயதார்த்த விழாவை நடத்தி விடலாம் என்று முடிவு செய்தனர்.
“எங்களுக்கு காயத்ரி ஒரே பொண்ணு. கல்யாணம் உங்க பக்கம் செய்யும் முறை என்பதால் நிச்சயதார்த்த பங்க்ஷன் நாங்க கிராண்டா செய்ய ஆசைப்படுறோம்” தங்கள் விருப்பத்தை பவானியும் ஜெயகுமாரும் தெரிவித்தனர்.
“அதுக்கென்ன உங்க விருப்பம் போலவே செஞ்சுட்டா போச்சு” லக்ஷ்மி சம்மதம் சொன்னார்.
“என்கேஜ்மன்ட் உங்க சைட்னாலும் நான் தான் எல்லாத்தையும் முடிவு செய்வேன். ஸ்டேஜ், ஈவண்ட்ஸ் எல்லாம். இது என்னோட வருண் அண்ணா காயூ அண்ணி என்கேஜ்மன்ட்” வர்ஷினி சொல்லவும் காயத்ரி தனது பெற்றோரைப் பார்த்து சரி என்று சொல்லும் படி சைகை செய்ய அவர்களும் சம்மதித்தனர்.
முழுமூச்சாய் நிச்சயதார்த்த விழாவின் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள் வர்ஷினி.
“அண்ணி இந்த ஸ்டேஜ் டெகரேஷன்ல எது நல்லா இருக்கு சொல்லுங்க” தனது லேப்டாப் சகிதம் காயத்ரியின் வீட்டுக்கு வந்து அவளது விருப்பத்தைக் கேட்டாள் வர்ஷினி.
“அண்ணி மெனு செலெக்ட் செய்யலாம் வாங்க”
“அண்ணி இன்விடேஷன் எப்படி கொடுக்கலாம்...டிசைன் சூஸ் செய்ங்க....அண்ணி அண்ணி” என்று எல்லாவற்றுக்கும் காயத்ரியின் விருப்பத்தையே கேட்டு அதன் படியே செய்து கொண்டிருந்தாள் வர்ஷினி.
“அம்முவை நீ ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்க காயு” வர்ஷினி சென்ற பின் மகளிடம் கூறினார் பவானி.
“அன்னிக்கு அம்மு எல்லாமே அவ தான் முடிவு செய்வேன்னு சொல்லவும் நீங்க கொஞ்சம் வருத்தமா இருந்ததை நான் கவனிச்சேன். நம்ம பக்கம் என்கேஜ்மன்ட் செய்வதால் நம்ம விருப்பபடி, என் விருப்பப்படி செய்யணும்ன்னு ஆசைப்பட்டீங்க. ஆனா பாருங்க கல்யாணம் அவங்க பக்கம் செய்தாலும் எல்லாத்துக்கும் என்னை தான் வந்து டிசைட் செய்ய சொல்வா அம்மு”
“அது தான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. அன்னிக்கு அப்படி சொன்னதும் நாங்களே என்னடா இதுன்னு நினைத்தோம் தான். ஆனா அப்படி சொல்லிட்டு எல்லாத்துக்கும் உன்னை வந்து கேட்டுட்டு இருக்கா” பவானி கேட்டார்.
“அம்மா வருணும் நானும் நல்ல பிரண்ட்ஸ்ன்னு உங்களுக்கு தெரியும். நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பமா இருந்தும் சொல்லாம இருந்தோம். இதை அம்மு தான் கண்டுபிடிச்சு வருண் கிட்ட கேட்டிருக்கா. வருண் அவரோட விருப்பத்தை சொல்லவும் அம்மு நேரா என்கிட்ட வந்து என்ன சொன்னா தெரியுமா”
வர்ஷினி அப்படி என்ன கூறினாள் என்று பவானி ஆர்வமானார்.
“என் அண்ணா இது வரை எதுக்குமே ஆசைப் பட்டு நான் பார்த்தது இல்லை. எங்க வீட்ல எல்லாமே என் விருப்பம் தான். நான் வச்சது தான் சட்டம். என் அண்ணா என்ன கலர் ஷர்ட் போடணும் என்ன கலர் கார் வாங்கணும் எல்லாமே என்னோட விருப்பபடி தான். என் அண்ணா முதன்முறையா உங்க மேல தான் ஆசை வச்சிருக்கான். இப்போவும் நான் வற்புறுத்தி கேக்கலைனா சொல்லிருக்கவே மாட்டான். உங்ககிட்ட எப்போவும் அவன் மனசை அவன் விருப்பத்தை தெரிவிக்கவும் மாட்டான். என் அண்ணா எனக்காக எதுவும் செய்வான். அவனுக்கு நான் தான் முக்கியம். என் அண்ணா மனசில் இருக்கும் உங்களுக்கு நான் எது வேணும்னாலும் செய்வேன். எனக்கு நீங்க முக்கியம். உங்களுக்கும் என் அண்ணாவை பிடிக்கும்னு எனக்கு தெரியும். எனக்கு அண்ணியா நீங்க இருப்பீங்களா”
“என்கிட்டே ப்ரொபோஸ் செய்தது அம்மு தான். அன்றிலிருந்து இன்று வரை அண்ணி அண்ணின்னு என்னை தான் எல்லாத்துக்கும் சுத்தி சுத்தி வருவா. என்னை பொறுத்த வரை எனக்கும் வருணுக்கும் அம்மு தான் முதல் குழந்தைம்மா”
தனது அன்னையிடம் காயத்ரி கூற பவானி பேச்சிழந்து போனார்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
sema.... anga yaru vanthadu? ram h?>.!!!! illa vera yaravadha??!!!
waiting next epi mam.....
Varshiniyin velipadaiyana little bit innocence kalantha nadavadikaigal cute. Gayathri-yum athai purinthu kolvathu sweet.
Vanthavar Ganesh thana?
Epadi kandupidichar? Varshini ena sola poranga?
Waiting to know ji.