(Reading time: 15 - 30 minutes)

“நான் சிவகுமார் சார் கிட்டேயும் சொல்றேன். அவங்க ரிலேஷன்ஸ் தானே” வருண் மேற்கொண்டு அந்தப் பேச்சினை வளர்க்க  மூச்சு முட்டுவதைப் போல உணர்ந்த வர்ஷினி எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“என்னவோ இருக்கு வருண். கணேஷ் பேரை எடுத்தாலே அம்மு பதட்டம் ஆகுறா. எனக்கு தெரிஞ்சு மேரேஜ் ப்ரோபோசல்ஸ் எல்லாமே கணேஷ் ரிஜக்ட் செய்றாராம். கனி சொன்னா. என் ரூம்மேட்டா இருந்தாலே. அவ அக்காக்கு கேட்டாங்களாம். இப்போ ஐடியா இல்லைன்னு அவங்க வீட்ல சொன்னாங்களாம்” காயத்ரி மெதுவான குரலில் வருணிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் அங்கு ராமசந்திரன் வரவே மாமாவின் குரல் கேட்ட வர்ஷினி மெல்ல வெளியேறி தோட்டத்திற்குள் புகுந்து கொண்டாள்.

நிச்சயதார்த்த விழாவின் முதல் நாள் பவானியிடம் ஓர் பென் டிரைவ் கொடுத்தாள் வர்ஷினி.

“ரிங் செரிமனி முடிஞ்சதும் சுரேஷ் கிட்ட குடுங்க பவானி அத்தை. அவங்க விடியோ ப்ளே பண்ணிடுவாங்க. நீங்க பத்திரமா வைத்திருங்க” என்றாள்

“ஏன்மா உன்கிட்டேயே இருக்கட்டும். என்கிட்டே ஏன் கொடுக்கிற” பவானி கேட்கவும்

“என் அண்ணா என்கேஜ்மன்ட்ல நான் ரொம்ப பிசியாக்கும். கெஸ்ட்ஸ் இன்வைட் செய்யணும். அண்ணியை ரெடி செய்யணும். டின்னர் மெனு சரி பார்க்கணும். எவ்ளோ இருக்கு. இது நமக்கு மட்டும் தெரிஞ்ச சீக்ரெட் ஆச்சே அதான் உங்ககிட்ட கொடுக்குறேன். எப்படியும் நீங்க அப்போ மேடையில் இருப்பீங்க தானே”

வர்ஷினி காரணம் சொல்ல பவானியும் வாங்கி வைத்துக் கொண்டார்.

றுநாள் மாலை ராமசந்திரன் லக்ஷ்மி இருவரும் தயாராகி வந்து குரல் கொடுத்தனர்.

“அம்மு ரெடியா கிளம்பலாமா”

“மாமா அத்தை நீங்க முன்னாடி கிளம்புங்க. நான் இன்னும் ரெடி ஆக கொஞ்சம் நேரம் ஆகும்” வர்ஷினி குரல் கொடுக்கவும் பெரியவர்கள் கிளம்பினர்.

“வருண் நீ வரல”

“நான் அம்முவோட வரேன்ப்பா. நீங்க முன்னாடி போங்க”

பெற்றோரை அனுப்பி வைத்தவன் மாடி ஏறினான்.

“அம்மு இன்னும் என்ன பண்ற” அவன் அவள் அறைக்குள் எட்டி பார்க்க லேப்டாப்பில் மும்மரமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

“அண்ணா ப்ளீஸ் நீ முன்னாடி போ. நான் இதோ இதை முடிச்சிட்டு கிளம்பி வரேன். என் கார் தான் இருக்கே. ஐ வில் டிரைவ்” தலையை உயர்த்தாமலேயே சொன்னாள்.

“அம்மு” வருண் கோபக் குரலில் அதட்ட திடுக்கிட்டாள்.

முதன்முறை இப்படி அவள் மீது கோபம் கொள்கிறான். அப்போதும் தலையை நிமிர்த்தவில்லை அவள்.

“அம்மு என்னை நிமிர்ந்து பாரு”

“அண்ணா ப்ளீஸ்” அவள் மெல்ல தலையை உயர்த்த அவள் விழிகளில் கண்ணீர் அருவியாய் வழிந்தோடியது.

“அம்மு என்னடா” வருண் அவள் அருகே வர

“அண்ணா ப்ளீஸ் என்னை கம்பல் செய்யாதே. நீ கிளம்பி போ. ப்ளீஸ்” கெஞ்சினாள் அவள்.

அப்போது வருணின் போன் அடிக்க டிஸ்ப்ளே பார்த்தவன், “அம்மு ஒழுங்கா கிளம்பு நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

என்ன செய்வது என்று தெரியாமல் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் வர்ஷினி.

அலமாரியில் இருந்த அவளது அன்னையின் புகைப்படத்தை தேடி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு அரற்ற ஆரம்பித்தாள்.

“அம்மா நான் என்ன செய்வேன்மா. அங்க ராம் வருவாரே. அவருக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு போய்டுமே. அது மட்டும் நடக்கவே கூடாது”

எவ்வளவு நேரம் ஆனதோ. அவள் அறியாள்.. மெத்தை மீது குப்புற படுத்தபடி தலையணை மீது கௌரியின் புகைப்படத்தை வைத்து அதைப் பார்த்தபடியே அழுது கொண்டே இருந்தாள்.

அப்போது கதவு லேசாக தட்டப்பட்டு பின் குமிழ் திருகும் சப்தம் அவள் செவிகளில் விழுந்தது. மெல்ல கதவு திறக்கப் படுவதை திரும்பிப் பார்க்காமலேயே உணர்ந்த வர்ஷினி, வருண் தான் அவளை அழைத்துப் போக வந்திருக்கிறான் என்று நினைத்தாள்.

“அண்ணா ப்ளீஸ் அண்ணா. நீ அன்னிக்கு ப்ராமிஸ் செய்த தானே. ராம் கிட்ட என்னோட முழு பேர் சொல்ல மாட்டேன்னு. நான் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்க கூடாதுன்னு சத்தியம் வாங்கினேனே. இப்போவும் என்னை எதுவும் கேக்காத. இத்தனை நாள் யாருக்கு என்னை பத்தி தெரிய கூடாதுன்னு பாடுபட்டேனோ அவருக்கு தெரிஞ்சு போய்டும். நான் அண்ணிகிட்ட அப்புறம் பேசுறேன். நீ கிளம்பி போண்ணா”

ஒரே மூச்சில் வர்ஷினி அழுகையுடன் கொட்டி விட பதில் ஏதும் வரவில்லை. அங்கே நிசப்தம் நிலவியது.

‘கதவு திறக்கும் சத்தம் கேட்டதே. அண்ணா வரலையா’ மனதில் நினைத்தவள் படுத்திருந்த நிலையிலேயே மெல்ல தலையை உயர்த்தி திரும்பிப் பார்த்தாள்.

அங்கே  சுவற்றின் மீது சாய்ந்து கைகளை குறுக்கே கட்டியபடி தீர்க்கமான விழிகளுடன் நேர்ப்பார்வை பார்த்தபடி நின்றிருந்த நபரைக் கண்டதும் கண்கள் அகல விரிய நோக்கியவள் அப்படியே சிலையாகிப் போனாள்.

“.........” அவள் உதடுகள் அசைந்த போதிலும் தொண்டைக் குழியில் இருந்து வெறும் காற்று தான் வெளிவந்தது.

இதயம் துடிக்கும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.