“மஞ்சுளாக்கா…….”
தீபனின் சத்தம் கேட்டு ஹாலுக்கு ஓடிவந்தார் மஞ்சுளா…
“வாங்க தம்பி… எங்க சாருவைக் காணோம்?....”
“பின்னாடி தான் வர்றா….”
“என்ன தம்பி… பாப்பா எப்படி அத்தனை பையையும் தனியா தூக்கிட்டு வரும்?... நீங்க கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா?...”
அவர் கவலையுடன் கேட்டதும், “எது… அவ ஷாப்பிங்க் செஞ்ச பையை தான சொல்லுறீங்க… அத தூக்க நான் ஒருத்தன் இல்ல… இந்த ஊரே வந்தாலும் பத்தாதுக்கா பத்தாது…” என்றான் அவன் அசதியுடன்…
“என்ன தம்பி நீங்க?...” என பேசிக்கொண்டிருந்தவர், “மஞ்சுளாக்கா….” என்ற சாருவின் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடினார் விரைந்து…
“சாரு பாப்பா…. என்னம்மா இது?... இத்தனையையும் ஒரே ஆளா தூக்கிகிட்டு… எங்கிட்ட கொடு…” என அவர் கைநீட்ட, அப்போது தான் அவரினை கவனித்தாள் சாருவும்…
“என்னக்கா இது?....” என அவரின் கைகாட்டி கூறியவள், “இதுக்கு தீபனே பரவாயில்லை போலயேக்கா… அவனாவது கையால தான் அடிப்பான்… ஆனா நீங்க…” என சொல்லி சிரிக்க,
அப்போது தான் தன் கையிலிருக்கும் கரண்டியை பார்த்தவர், “அய்யோ பாப்பா… சமையல் செஞ்சிட்டு இருந்தேன்… தம்பி சத்தம் கேட்டதும் அப்படியே ஓடிவந்துட்டேன்…” என்றார் அவரும் சிரிப்புடன்…
பின்னர் இரண்டு பேருமாக சேர்ந்து பையை தூக்க முடியாது உள்ளே வர, சோபாவில் படுத்து அதற்குள் உறங்கிவிட்டிருந்த தீபனின் மீது தன் கையிலிருந்த அனைத்து பைகளையும் வைத்தாள் சாரு….
திடீரென்று ஏதோ சுமை தன் மீது அழுத்துவது போல் இருக்க, வலி தாங்காமல் சட்டென கண் விழித்தவன் மிரண்டு போனான்…
“அடிப்பாவி கிராதகி… ஒரு பெரிய மலையையே என் மேல தூக்கி வச்சிட்டு ஹாயா நிக்குற?...”
அவன் கடும் கோபத்துடன் கேட்டிட,
“ஹாயால நிக்கல தீபா… நான் நம்ம வீட்டு ஹால்ல நிக்குறேன்…” என்றாள் அவள் இலகுவாக மஞ்சுளாவின் கையிலிருந்த பைகளையும் வாங்கி அவன் மீது வைத்தபடி…
“ஜோக்கு…. முதல்ல வச்ச வெயிட்டை எடுடி… இதுல இன்னும் வேற வெயிட் வைக்குறா… வலி தாங்கலை எடுடி பையை….”
அவன் கத்த ஆரம்பிக்க, “போடா… எனக்கு அசதியா இருக்கு… வேணும்னா நீயே எடுத்து வை… எனக்கு கையெல்லாம் வலிக்குது…” என சோம்பல் முறித்து தீபனுக்கு பக்கத்தில் இருந்த சோபாவில் தொப்பென்று அமர,
“அய்யோ… பாப்பா… தீபன் பாவம்… பையை எடு… வலிதாங்க முடியாம புள்ள கத்துறான் பாரு…”
“விடுங்கக்கா… வலிச்சா வலிக்கட்டும்… கேட்டா, பெரிய சிக்ஸ் பேக் பயில்வான்னு சீன் போடுவான்ல… அதெல்லாம் வச்சு முடிஞ்சா இதிலிருந்து வெளியே வரட்டும்… இல்ல இதுலயே கிடக்கட்டும்…”
சாரு இலகுவாக கூற, “உன்னை என்னை பண்ணுறேன்னு பாருடி…” என தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, தன் மீதிருந்த பையை ஒரு நொடியில் தள்ளி விட்டவன், அடுத்த நொடியே தமக்கையின் மீது பாய்ந்தான்…
“ஆ…………..” என அவள் அலறிக்கொண்டே நகர, அவளை ஓடவிடாது மறித்தான் அவன்…
“ஏண்டி… நானும் போனா போட்டும்னு பார்த்தா… நீ என்னடான்னா தம்பின்னு கூட பார்க்காம கொலை பண்ண பார்க்குறீயே கொலைகாரி… கொலைகாரி…”
அவன் அவளை வசைபாட, “நானும் போனா போகட்டும் தம்பின்னு பார்த்தா… நீ நிமிஷத்துக்கு நிமிஷம் டீ போட்டா பேசுற?... கொன்னுடுவேன் பார்த்துக்கோ…” என அவனிடம் அவள் மல்லுக்கு நிற்க,
“என்னடி செய்வ?... என் அக்காவை நான் அப்படித்தான் சொல்வேன்… நீ என்ன என்னை குறை சொல்லுறது?...” என்றான் அவனும் பதிலுக்கு…
“ஓஹோ… அப்படியா?... உன் அக்காவை நீ சொல்லுற மாதிரி… நானும் என் ஒரே தம்பி… என் செல்லத்தம்பியை என்னனாலும் செய்வேன்… உன்னால என்னடா செய்ய முடியும்?... என் மேல கை வச்சிடுவ?... என் தம்பி யாரு தெரியும்ல… சிக்ஸ் பேக் தீபன்… பெரிய குத்துச்சண்டை வீரன்…”
சாரு தன் தம்பியை புகழ்ந்து கூற, பட்டென சிரித்துவிட்டான் அவன்…
“சரி சரி… இரண்டு பேரும் விளையாடினது போதும்… வாங்க வந்து இந்த காபியை குடிங்க…” என இலகுவாக மஞ்சுளா அவர்களை அழைத்திட, தீபனும், சாருவும் சிரித்துக்கொண்டனர்…
“விளையாட்டா?... என்னைக் கொல்ல பார்த்துட்டு சிலையாட்டம் நிக்குறா?... நீங்க பார்த்துட்டு பேசாம நிக்குறீங்க?...”
தீபன் மஞ்சுளாவிடம் நியாயம் கேட்டிட,
“அய்யோ சாரு பாப்பா பேக்ரவுண்ட் என்னன்னு தெரியாம பேசுறீங்க தம்பி நீங்க…” என்றாள் அவளும் காபியை இருவருக்கும் கொடுத்துக்கொண்டே…
“அப்படி என்ன பேக்ரவுண்ட்… பெரிய புடலங்காய் பேக்ரவுண்ட்?...”
“பாப்பாக்கு ஒன்னுன்னா அவர் தம்பி சண்டைக்கு வந்துடுவார்… அது யாருக்காவது தெரியாம இருக்குமா?...”
மஞ்சுளா இலகுவாக கூற, இம்முறையும் தீபன் சிரித்தான்…
அவன் சிரிப்பதை நின்று நிதானமாக பார்த்தவள், “உங்க இரண்டு பேரையும் சின்ன வயசில இருந்து பார்க்குறேன்… எனக்கு தெரியாதா?... ஆயிரம் சண்டை போட ஆரம்பிச்சாலும், ஆரம்பிச்ச அடுத்த நொடியே, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்காம பாசமா, விளையாட்டான சண்டை போட்டுப்பீங்க… அது எனக்கு தெரியாதா என்ன?... ஒரு வாரம் இரண்டு பேரும் இல்லாம இந்த வீடு வீடாவே இல்லை… இன்னைக்குத்தான் நிறைஞ்சிருக்கு…” என்றவர் இரண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போட்டு விட, இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் லேசாக கண்கள் கலங்க, மஞ்சுளா செல்லும் திசையினை பார்த்துக்கொண்டே…
தொடரும்
{kunena_discuss:1162}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.