(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ?

பயமறியாது இவன் தேசமோ.......

இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ?

வலியறியாது இவன் தேகமோ....

ஒரு முகமோ இரு முகமோ? முழுமுகமும் கலவரமோ?

பயமறியாது இவன் தேசமோ......

இவன் விழிகள் குறி தானோ? கண்ணசைவில் கவர்வானோ?

வலியறியாது இவன் தேகமோ....

 

நொடியில் நொடியில் முடிவெடுப்பான்..

இடியின் மடியில் தினம் படுப்பான்..

அடியில் வெடியில் உயிரெடுப்பான்..

நிழல் போல் இருப்பான்....

எதிரும் புதிரும் போல் இருப்பான்..

அதிரும் செயலில் பூப்பறிப்பான்..

உதிரம் உயிரில் கணக்கெடுப்பான்..

நெருப்பாய் நடப்பான்...

உலகம் அதிகாலை.. சோம்பல் முறிக்கும்...

ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்....

ஒரு சமயம் இவன் செயல் நியாயம்...

மறு சமயம் இவன் செயல் மாயம்....”

ந்த க்ரைம் ப்ராஞ்ச் அலுவலகமே பரப்பரப்பாய் இருந்தது..அங்கு பரபரப்பு புதிதில்லை எனினும் இன்றைய பரபரப்பிற்கு காரணம் தமிழ்ச்செல்வன்…தமிழ்ச்செல்வன் IPS..அசிஸ்ட்டண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் க்ரைம் ப்ராஞ்ச்..ஐந்துக்கும் மேற்பட்ட என்கௌண்டர்கள்..நான்கு முறை டிரன்ஸ்வர்..லஞ்சம் வாங்காத நேர்மையானவன்..தப்பிற்கு ஒருபோதும் துணைபோகாதவன்..இப்பொழுதும் கண்ட்ரோல் ரூம் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு ஆறுமாதத்திற்குப் பின் மறுபடியும் க்ரைம் டிபார்ட்மெண்ட்டிற்கு வருகிறான்..

அய்யாசாமி அந்த ரெக்கார்ட்லா ரெடி தான??சார் வந்தப்பறம் கையை பிசைஞ்சுட்டு நிக்க கூடாது எல்லாம் சரியா இருக்குல??-ஹரிஷ்.

“எல்லாம் ரெடி சார் நா போய் இன்னொரு தடாவை செக் பண்ணிட்றேன்..”

என உள்ளே சென்றவர் அங்கிருந்த கான்ஸ்டபளிடம்,என்யா இன்னைக்கு என்ன நம்ம ஐயா இவ்ளோ பரபரப்பா இருக்காரு??வர்றவரு கோபகாரரோ??

சாமி நீ இப்போ தான வந்துருக்க எல்லாம் போக போகப் புரியும்..நம்ம புது ACPயும் ஹரிஷ் சாரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தான் ஆனா ட்யூட்டில அத காட்டிக்க மாட்டாங்க..ரெண்டு பேருமே திருநெல்வேலிகாரங்க..ஒண்ணா படிப்ப முடிச்சு க்ரைம் ப்ரண்ஞ் தான் வேணும்னு வந்தவங்க..ஹரிஷ் சாருக்கு கல்யாணம் ஆன கொஞ்சநாள்ல ஒரு எண்கௌண்டர் போய்ருந்தப்போ கன் ஷூட் ஆகி ரொம்ப சீரியஸான நிலைமைல ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணாங்க அவங்க வைப் ரொம்ப பயந்துட்டாங்க நம்ம ACP தான் கூடவேயிருந்து அவரை பாத்துகிட்டாரு..அதிலிருந்து ஒரு ப்ரெண்டா அவரை எண்கௌண்டர் ப்ளான்ல இன்வால்வ் பண்றதில்ல..ரெண்டு பேரும் சேர்ந்து போனா எதிர்ல இருக்குறவனுக்கு எமன் கண்முன்னாடி இருக்கான்னு அர்த்தம்..

அதனாலேயே அடிக்கடி டிரான்ஸ்வர் ஆக்கிட்டேயிருப்பாங்க..அவரு மறுபடியும் நம்ம ப்ராண்ஞ்ச்கு வர்றதுக்குள்ள ஹரிஷ் சார் யாரைத் தூக்கனும்னு டீடெய்ல் எடுத்துருவாரு..வேணா பாரு இப்போ நீ எடுக்குற பைல்ல இருக்குறவனுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இந்நேரம் கெடு வச்சுருப்பாரு..எனும்போதே வெளியே கார்சத்தம் கேட்க அவசரமாய் அனைவரும் வெளியே சென்றனர்..கார் கதவைத் திறந்து இறங்கியவனுக்கு அனைவரும் சல்யூட் அடிக்க மரியாதையை ஏற்று பதிலுக்கு தலையசைத்துச் சென்றான்..ஆறடி உயரம் போலீஸிற்கே உரிய கட்டுமஸ்தான தேகம் சீறாய் திருத்தப்பட்ட முடி முறுக்கு மீசை என பார்ப்பவர்கள் நிச்சயம் நின்று மரியாதை அளிக்கவேண்டிய ஒரு உருவம்..

டேபிளின் முனையில் ஒற்றைக் காலைத் தூக்கி அமர்ந்தவன் அனைவரிடமும் பொதுவான விசாரிப்புகளை நடத்த.என்ன அய்யா கண்ணு எப்படி இருக்கீங்க??

ஸ்ஸ் சார் நல்லாயிருக்கேன் சார்..

20 வருஷ சர்வீஸ்ல 10 தடவைக்கும் மேல டிரான்ஸ்வர்..ம்ம் எப்படியிருக்கு இந்த புது இடம்.??

நல்லாயிருக்கு சார்..

நா வந்துட்டேன்ல இனி அமோகமா இருக்கும் பாருங்க என்றவாறு எழுந்தவன் ஹரிஷின் தோள்பற்றி இழுத்து தனதறைக்குச் சென்றான்..

என்ன சாமி வாயடைச்சு நிக்குற??

குமாரு நீ சொன்னதவிட 100 மடங்கு துடிப்போட இருக்காரேயா..என்னபத்தியே இவ்ளோ பேசுறாருனா கேஸ்ல மாட்றவன் தொலைஞ்சான்.அங்கு உள்ளே,

எனன்னடா குடும்பஸ்தா எப்படியிருக்க??லைட்டா பேமிலி பாக்லா ஃபார்ம் ஆகுறமாதிரி இருக்கு என வயிற்றில் பஞ்ச் செய்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.