(Reading time: 13 - 25 minutes)

நான்காவது தளத்திலிருந்த அந்த புடவை கடைக்குச் செல்வதற்காக லிப்ட்ற்கு காத்திருக்க லிப்ட் கதவு திறந்து உள்ளே சென்றான்..25 வயது மதிக்கதக்க ஒரு பெண் உள்ளேயிருக்க கண்டும் காணாமல் உள்ளே வந்தவனுக்கு ஏனோ அந்த பெண்ணின் நடவடிக்கையில் வித்யாசம் தோன்ற அவள்புறம் நோக்கினான்..அவள் இவனை பார்ப்பதை தவிர்த்து மறுபுறம் திரும்பிவாறே பதட்டத்தோடு நின்றாள்..எதுவும் ப்ரச்சனையாய் இருக்குமோ என தோன்ற,

ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ ஆர் யூ ஓகே?என கேட்க அவளோ இன்னுமுமாய் தன்னை சுவரோடு அப்பிக் கொண்டாள்..அதற்குள் அவன் இறங்க வேண்டிய தளம் வர தோளைக் குலுக்கியவாறு அவன் வெளியே வர ஓடாதகுறையாய் அவனை கடந்து அவளும் விறுவிறுவென சென்றுவிட்டாள்..அதன்பின் அதைப்பற்றி மறந்தும் போனான்..ஷாலினிக்காக அழகிய பட்டுப்புடவை ஒன்றை பரிசாய் வாங்கி முடித்து ஷரவனோடு சேர்ந்து கிளம்பினான்..

ன்று காலையிலேயே ஹரிஷ் வீட்டிற்கு வந்திருந்தவன் ஷாலினியோடு சேர்ந்து அவனை மிரட்டிக் கொண்டிருந்தான்..

என்னடா IPS என் தங்கைய ஒழுங்கா பாத்துக்குறமாதிரி தெரிலயே??இளைச்சு போனமாதிரி இருக்காளே என்ன விஷயம்??பயம் விட்டுப் போச்சா??

ம்ம் ஆமாடா எல்லாம் என் நேரம் உங்க ரெண்டு பேரையும் தனியாவே சமாளிக்குறது கஷ்டம் இதுல சேர்த்து வேறயா??ம்ம் இன்னும் மூணே மாசம் சிங்க குட்டி மாதிரி என் குழந்தை வந்து எனக்காக சப்போர்ட் பண்ணும் அப்போ இருக்குஉங்க ரெண்டு பேருக்கும்..

ம்ம் வரட்டும் அப்பறம் அவனோ அவளோதான் எங்க கூட்டணியோட ஹெட்டா இருப்பா பாரு..

அண்ணா விடுங்கண்ணா அவரு என்னவோ சொல்லிட்டு போறாரு நாதான் இப்போவே ட்ரெய்ணிங் குடுக்குறேனே டோண்ட் வொரி..சரி நீங்க எப்போ கல்யாணசாப்பாடு போடபோறீங்க??

அட எங்கம்மா என் நண்பனுக்கு அமைஞ்சாமாதிரி எனக்கும் ஒரு நல்ல பொண்ணு அமையும்நு பாக்குறேன் ம்ம் எங்க??

டேய் டேய் போதும் இவ்ளோ ஐஸ் வைக்கலனாலும் உனக்கு பிரியாணி போடுவா அதுக்காக ஒரேடியா ஐஸ்மலையை தூக்கி அவ தலைல வைக்காத என் குட்டிபாப்பாக்கு ஜல்ப்பு பிடிச்சுர போகுது..இப்படியாய் அன்றைய சீமந்தம் நல்லமுறையில் முடிய தமிழ் அங்கிருந்து கிளம்பும் போது மணி இரவு பத்தை தாண்டியிருந்தது..

அங்கிருந்து மெயின் ரோட்டிற்கு வந்திருந்தவனின் கண்களில் மறுபடியும் அவள் தென்பட்டாள்..சாலையோர பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இருபுறமும் திரும்பி பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்..ஆள்நடமாட்டம் வேறு கம்மியாய் இருக்க ஒரு போலீஸ் அதிகாரியாய் அவளருகில் சென்று விசாரித்தான்..

ஹலோ பஸ்க்காகவா வெயிட் பண்றீங்க??வீடு எங்க??யாரும் வருவாங்களா??

இத்தனை கேள்விக்கும் வாயைத் திறக்காமல் விறுவிறுவென எழுந்து நடக்க ஆரம்பித்தவளை பார்த்தவனுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்தது இருப்பினும் புதியவனிடம் அவள் விவரங்களை கூற விரும்பாமல் செல்கிறாள் என்பது உறைக்க தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு பைக்கில் மெதுவாய் அவளருகிலேயே சென்றான்..அவளோ கண்களில் நீர்கோர்க்க ப்ளீஸ் ஏன் என் பின்னாடி வரீங்க..தயவு செஞ்சு போய்டுங்க என கைக் கூப்பிநின்றாள்..

சரியாய் போலீஸ் ஜீப் ஒன்று அந்த நேரத்திற்கு வர அவர்களை கண்டு நின்றது யாரும்மா நீ என்ன பண்ற என்றவாறே அருகில் வந்த இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்ததும் சல்யூட் அடித்து என்னாச்சு சார் என கேட்க அவள் முகம் சற்றாய் தெளிவுற்றது..

தெரில நாராயணன் பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க தனியா சேவ் இல்லேயேநு கேட்டுட்டு இருந்தேன்..நீங்க அந்த ஆட்டோவ மடக்குங்கஎன கைகாட்ட அதன் டிரைவரிடம் இவங்க எங்க இறங்கனும்னு கேட்டு விடுருங்க விட்டுட்டு இதோ இது என் நம்பர் கால் ண்ணி சொல்லனும் புரியுதா??உன் நம்பர் சொல்லு என அதையும் வாங்கிக் கொண்டு அவளைப் பார்க்க விறுவிறுவென சென்று ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்..

அதன்பின் அவன் வீட்டிற்கு வந்து உடைமாற்றி அமர டிரைவர் போன் செய்து இறக்கிவிட்ட இடத்தைக் கூற அது ஒரு பெண்கள் விடுதி என தெரிந்து கொண்டான்..

டுத்து வந்த இரண்டு வாரங்களும் தமிழுக்கு அவன் கேஸ் வேலையோடு சரியாய் இருக்க ஊன் உணவு மறந்து அலைந்து கொண்டிருந்தான்..அனைத்து ஏற்பாட்டையும் முடித்திருந்தவன் குணாவை குறி வைக்கும் நாளுக்காக காத்திருந்தான்..அப்படியாய் ஒரு தினத்தில் அவனை பார்ப்பதற்காக யாரோ வந்திருப்பதாய் கான்ஸ்டபிள் கூற உள்ளே அனுப்புமாறு பணித்தான்..ஹரிஷும் அவனோடு உள்ளேயிருக்க கதவு திறக்கும் ஓசையில் இருவருமே யாரென பார்க்க வந்திருந்தவளை பார்த்து தமிழின் பார்வை விரிந்தது..அவன் நிச்சயமாய் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அந்த பார்வை உணர்த்தியது..மெதுவாய் உள்ளே வந்தவள் ஹரிஷை பார்த்து தயங்கி நிற்க,ஹரி நீ வெளில வெயிட் பண்ணு நா கூப்ட்றேன் என்றவனை ஒரு மார்க்கமாய் பார்த்து நகர்ந்தான் அவன் நண்பன்..

“வாங்க உக்காருங்க என்ன விஷயம்?”என இருக்கையில் பின்சாய்ந்து அமர்ந்தான்.

“சார் அது தேங்க்ஸ் சொல்லிட்டு போலாம்நு வந்தேன்..”

ஒரு தேங்க்ஸ்க்காக இவ்ளோ தூரம் வந்தீங்களா?ஆச்சரியமான விஷயம்தான்..நேர்ல கேட்டாலே வாயை திறக்க மாட்டீங்க..எனிவே தேங்க்ஸ் சொல்லியாச்சுல கிளம்புங்க..

“சார்..ஒரு சின்ன உதவி வேணும்..”

“என்ன சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்..”

வந்து எனக்கு ஒரு வேலை வாங்கித் தர முடியுமா??எனக்கு இங்க யாரையும் தெரியாது..யாரையும் நம்பி உதவி கேட்கவும் முடில..உங்களால முடியுமோநு தோணிச்சு அதான்..

ம்ம் சரி என்ன படிச்சுருக்கீங்க??உங்க டீடெய்ல்ஸ் எதாவது சொல்லுங்க?ஒண்ணுமே தெரியாம நா எந்தமாதிரியான வேலையை தேட்றது??

என அவன் முடிப்பதற்குள் தன் கையிலிருந்த பைலை அவனிடம் நீட்டினாள்..அதை வாங்கிப் பிரித்தவனின் கண்கள் அவள் பெயரின் மேல் கவனத்தை செலுத்தியது..நிர்பயா..

ஹலோ ப்ரெண்ட்ஸ்..ஹீரோ ஹீரோயினை ஓரளவு எப்படிநு கெஸ் பண்ணிருப்பீங்கனு நினைக்குறேன்..கருத்துகளுக்கு காத்திருக்கிறேன்..:)

தொடரும்

Episode 02

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.