(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

முதன் முதலில் பார்த்தேன்

காதல் வந்ததே

எனை மறந்து எந்தன்

நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை

காதல் போல ஏதும் இல்லை

என்னில் இன்று நானே இல்லை

காதல் போல ஏதும் இல்லை

எங்கே எந்தன் இதயம் அன்பே

வந்து சேர்ந்ததா

 

நந்தவனம் இதோ இங்கேதான்

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்

நல்லவளே அன்பே உன்னால்தான்

நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்

அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்

அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

வள் வெளியே சென்ற அடுத்த நொடி ஹரிஷ் ஆவலாய் உள்ளே நுழைந்தான்..

“மச்சான் சொல்லவேயில்ல..யார்ரா அது??”

“ஏன்டா நீ வேற??ஒரு தடவை ரோட்ல பாத்து ஹெல்ப் பண்ணேன் போலீஸ்நு தெரிஞ்சவுடனே ஹெல்ப் கேட்டு வந்துருக்கா வேலை வேணுமாம்..வேற ஒண்ணுமில்ல நீயா கதைகட்ட ஆரம்பிச்சுடாத..போய் பொழப்ப பாரு..”

என்றவன் அவள் கொடுத்த பைலை தன் டேபிளின் ஓரத்தில் வைத்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்..அடுத்த ஒரு வாரமும் அதைப்பற்றி மறந்தே போனான்..தற்செயலாய் ஒரு நாள் வேறு பைலை இழுத்தவனின் கண்களில் அவள் கொடுத்தது பட அதை எடுத்துப் பிரித்து பார்த்தான்..நிர்பயா வயது 24 சொந்த ஊர் மும்பை..படிப்பு பி.எஸ்.சி கணிணிஅறிவியல்..சிறிது நிமிடம் அதையே பார்த்திருந்தவன் ஏதோ தோன்ற தன் மொபைலை எடுத்து யார் நம்பரையோ தேடினான்..நம்பர் கிடைத்துவிட அதற்கு அழைத்து மறுமுனையில் பேசியவரிடம் விவரத்தை கூற அவர்  அவளை நேர்காணலுக்கு வரசொல்லுமாறு கூறினார்..

அவள் பயோடேட்டாவிலிருந்த நம்பருக்கு அழைத்து விஷயத்தை கூற எண்ணி காத்திருக்க முழு அழைப்பு முடிந்து நின்றுவிட்டது..இன்னும் ஒருமுறை முயற்சி செய்ய எண்ணி மீண்டும் அழைக்க ஹலோ என மெதுவாய் அவள் குரல் கேட்டது..

“ஹலோ நா தமிழ்ச்செல்வன் பேசுறேன்..ஏசிபி..”

“ஹாலோ சார் சொல்லுங்க புது நம்பரா இருந்ததால எடுக்கல சாரி சொல்லுங்க” என பயந்து பயந்து பேசினாள்..

“பரவால்ல உங்க ஜாப் விஷயமா பேசதான் கால் பண்ணேன்..எனக்கு தெரிஞ்ச ஒரு கம்பனில சொல்லிருக்கேன் நாளைக்கு இன்டர்வியூக்கு வர சொல்லிருக்காங்க..பட் ரெக்கமண்டேஷன்லா கிடையாது..உங்க பெர்பாமன்ஸ் பொறுத்து ஜாப் கிடைக்கும்..இந்த நம்பருக்கு டீடெய்ல்ஸ் டெக்ஸ்ட் பண்றேன்..நாளைக்கு போய் பாருங்க..வச்சுட்றேன்” என பதிலுக்கு காத்திராமல் வைத்துவிட்டான்..

ஏனோ அவள் குரல் தனக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதாய் தோன்றியது அவனுக்கு..எப்போதுமே ஒரு சோகமும் வருத்தமும் அந்த குரலில் இருப்பதை உணர்ந்தான்..அது அவனுள் தாக்கத்தை ஏற்படுத்தவதாகவும் இருந்தது..கேட்ட உதவியை செய்தாயிற்று இனி அவளோடு பேச வேண்டிய அவசியமிறாது என தலையை சிலுப்பியவாறு தன் வேலையை கவனிக்க .ஆரம்பித்தான்..

இருப்பினும் ஏனோ மறுநாள் அந்த நேரத்தில் அவள் அங்கு சென்றிருப்பாளோ வேலை கிடைத்திருக்கோமோ கிடைத்திருக்காதோவென ஆயிரம் எண்ணங்கள் அவனுக்குள் சுழன்று கொண்டேயிருந்தன..அவனை அதிக நேரம் சோதிக்காமல் அவளே அவனை அழைத்திருந்தாள்..

“ஹலோ சார் நா நிர்பயா பேசுறேன்..”

“ஆங் சொல்லுங்க இன்டர்வியூ என்னாச்சு??”

“வேலை கிடைச்சுருச்சு சார் நெக்ஸ்ட் மன்த் ஜாய்ன் பண்ண சொல்லிருக்காங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்..”

“ஓ..குட்..ஆல் த பெஸ்ட்..எதுவும் ஹெல்ப் வேணும்னா தயங்காம கால் பண்ணுங்க..பை..”

ஹரிஷ் மெதுவாய் உள்ளே வந்து கைகட்டி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..

“என்ன மிஸ்டர் தமிழ்செல்வன் எம்ப்ளாய்ண்மெண்ட் எக்ஸ்சேஞ்ச்லா எப்போ ஆரம்பிச்சீங்க??”

“உனக்குலா வேற வேலையே இல்லையாடா??”

“ம்ம் என்ன பண்றது மச்சான் உன்னைமாதிரி ரெண்டு மூணு வேலை தெரிஞ்சா பரவால்ல எங்க..ம்ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.