(Reading time: 11 - 22 minutes)

“அண்ணா ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க..அவங்க நிலைமை என்னவோ நா தான் கொஞ்சம் ஓவரா க்ளோஸா மூவ் பண்ணிட்டேன் சாரி..”

“ஹே ஷாலு அதெல்லாம் ஒண்ணுமில்ல அவ எப்பவுமே இப்படிதான் பண்றா இதுல உன் தப்பு ஒண்ணும் இல்ல விடு.”

.என பேச்சை வளர்க்காமல் சாப்பிட ஆரம்பித்தான்..அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு பைக்கை எடுத்தவன் அவள் கூறிய ஹாஸ்ட்டல் வாசலில் சென்று நின்றான்..அவனை கண்டதும் வாட்ச்மேன் பதட்டமாய் ஓடிவர நிலைமை உணர்ந்தவன் சமாதானமாய் அவரிடம்,” இங்க நிர்பயாநு..”

“ஆமா சார் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உள்ள போனாங்க.”

“ஆங் அவங்க தான் நா அவங்க ப்ரெண்டு தான் கொஞ்சம் கூப்பிட முடியுமா??”

இதோ சொல்றேன் சார் என அவர் ஓட. எதிரே தெரிந்த சிறிய பூங்காவில் அவளுக்கு தெரியுமாறு சென்று அமர்ந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவளை பார்த்தவனுக்கு ஒரு நொடி கோபம் தணிந்தது..அழுதிருப்பது அவள் முகத்திலேயே தெரிந்தது..கொஞ்சமாய் கோபத்தை அடக்கியவன் அவள் அருகில் வர அந்த கல் பெஞ்சின் மறு ஓரத்தை காட்டி அமருமாறு கூற ஓரமாய் அமர்ந்தாள்..

“என்ன நினைச்சுட்டு இருக்க நீ??ஏதோ எனக்கு தெரிஞ்ச பொண்ணாச்சேநு ஷாலினி உன்ன சாப்ட கூப்டா அதுக்காக நீ இப்படி பாதிலேயே மூஞ்சில அடிச்சா மாதிரி எழுந்து வருவியா??அப்போ உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு மட்டும் என்ன தேடி வருவ..என் மேல நம்பிக்கை இருந்ததால தான என்னை தேடி வந்த அப்போ அந்த நம்பிக்கைக்கு உண்மையா இருக்ககூணும் தான..எப்போ பாத்தாலும் இன்செக்கியூர்டாவே இருந்தா உனக்கு உதவி பண்ண கூட யாரும் வர மாட்டாங்க..”என அவன்போக்கில் வறுத்தெடுக்க..

“சாரி சா..”

“போதும் உன் சாரி வெங்காயம் எல்லாம்..வாய தொறந்தா சாரி இல்ல தேங்க்ஸ் தான் சொல்லுவியா அதுக்கு மேல பேசினா நாங்க உன்னை அப்படியே கடிச்சு முழுங்கிருவோமா??லூக் இனியாவது மத்தவங்களை மதிச்சு  நடக்க கத்துக்கோ.”.என்றவன் விறுவிறுவென வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட பெண்ணவளோ என்னகூறவென தெரியாமல் வாயடைத்து நின்றாள்..

அலுவலகத்திற்கு வந்தவனுக்கோ சில நிமிடங்கள் ஒரு வேலையும் ஓடவில்லை..கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ..ஏற்கனவே அழுதமாதிரி இருந்ததே..நா வேற ச்சச்ச இந்த கோபம் வந்தா கண்ணு மண்ணு தெரியாம கத்திட்றேன்..ஹரிஷ் சொல்றது கரெக்ட் தான் கோபைத்தை கொஞ்சமாவது குறைச்சுக்கனும்..எனும்போதே அலுவல் நிமித்தமான அழைப்பு வர அப்போதைக்கு அதை விட்டுச் சென்றான்.

டுத்து வந்த நான்கு நாட்களுக்கும் தமிழுக்கு வேறு எதைப்பற்றியும் சிந்திக்கும் நிலையிருக்கவில்லை..அன்று அந்த குணாவை குறி வைத்து அவனை சுற்றிப் பிடித்திருந்தினர்..ஹரிஷ் ஆயிரம் முறை எச்சரித்திருந்தான்..அவனை கைது பண்ணுவதுதான் முக்கியம் எக்காரணம் கொண்டும் அவனை கொன்றுவிட கூடாது ஏற்கனவே தமிழுக்கு ஹ்யூமன் ரைட்ஸ் கவுன்சிலில் இருந்து ஆயிரம் ப்ரஷர் இதில் இவனையும் கொன்றுவிட்டால் நிச்சயம் பணிமாற்றம் உறுதி..

தற்போது அந்த இடத்தில் குணா ஒருவனோடு நின்று பேசிக் கொண்டிருக்க நேரெதிரில் 100 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தினுள் தமிழ் மேலும் இருவரோடு நின்றிருந்தான்..ஹரிஷ் அதன் மறுபுறமும் மேலும் இரண்டு பேர் அவனின் அருகிலேயே அவனுக்கு தெரியாத வண்ணம் நின்றிருந்தனர்..ஹரிஷ் அவனை பிடித்துவிட சரியான நேரம் என சைகை காட்ட சட்டென தன் துப்பாக்கியை எடுத்து அழுத்த தோட்டா அந்த குணாவின் நெஞ்சில் துளைத்து வெளியேறியது..ஹரிஷ் அதிர்ச்சியாய் தமிழை பார்க்க கண்ணடித்து தன் கூலர்ஸை மாட்டியவாறு உள்ளே மறைந்தான்..

அத்தனை ஆர்பாட்டமும் முடிந்து ஹரிஷ் யார் கண்ணிலும் படாமல் அந்த பில்டிங்கிற்குள் வர தமிழ் தன் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்..

“டேய் என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல நா தான் அவ்ளோதூரம் சொன்னேன்ல..ஏன்டா ஏன்டா நீ இப்படியிருக்க??”

“ஹரி இது மட்டும் தான் கரெக்ட்நு எனக்கு தோணுது..இதுக்கு மேல எந்த பொண்ணுக்கும் இவனால பிரச்சனையில்லாம இருக்கும்தான..ப்ரீயா விடு மச்சி வா போலாம் செம்மயா பசிக்குது” என்று செல்பவனை திருந்தாது இதெல்லாம் எனும் பார்வை பார்த்துச் சென்றான் ஹரிஷ்..

ன்றைய அசதியில் நல்ல உறக்கத்திலிருந்தவனை போனின் அழைப்பு எழுப்பியது.கண்ணை திறக்காமலே போனை தடவிஎடுத்து காதில் வைத்தவன் எதிர்முனையின் குரல்கேட்டுதூக்கம் தெளிந்தான்..

“ம்ம் சொல்லு..”

“……”

“எதுக்கு??”

“……”

“சரி வரேன்..”

எழுந்து அமர்ந்தவனுக்குள் ஏதோ சிந்தனை ஓட அதை தள்ளிவிட்டு கிளம்ப தயாரானான்..சொன்ன நேரத்திற்கு அந்த காபி ஷாப்பிற்கு வந்தவனை முகத்தில் மலர்ந்த மென்னகையோடு வரவேற்றாள் நிர்பயா..

மக்களே எபி எப்படியிருக்கு..முதல் எபிக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.. smile

தொடரும்

Episode 01

Episode 03

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.