(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

வானில் தேடி நின்றேன் ஆயின் நீயடைந்தாய்     

ஆழி நான் விழுந்தால் வானில் எழுந்தாய்     

என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்     

நான் என்ற எண்ணம் கலையவிட்டாள்     

நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை     

நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை     

     

ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே    

மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே    

நானுன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்      (நல்லை)

     

மும்பை மூழ்கும் முன் என்ற நிலைகளிலே     

முகந்தொட காத்திருந்தே……ன்     

மலர்கின்ற நிலைவிட்டுப் பூத்திருந்தால்     

மனம் கொள்ள காத்திருந்தே……ன்     

மகரந்தம் தேடி நகரும்முன்னே     

வெய்யில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்

னோ அவளின் அந்த புன்னகை அவனுக்கு நிம்மதி அளிப்பதாய் இருந்தது..எப்போதும் இருக்கும் சோகம் எனும் மேகம் மறைந்து முழு நிலவாய் அவள் பிரகாசிப்பதாய் தோன்றியது..முதன் முதலாய் அவளை உற்று நோக்கினான்..மாநிறம் ஒல்லியான உடல்வாகு வட்டமான உருண்டை கண்கள்..நிறம் கம்மியென்றாலும் லட்சணமான முகம் இப்படியாய் அவளருகில் வந்தவன் சிந்தனை கலைந்து கண்ணாடியை கழற்றியவாறே அவளெதிரில் அமர்ந்தான்..

”எதுக்கு வர சொன்ன??”

“என்ன சாப்டுறீங்க? காபி சொல்லட்டுமா??”

என அவள் தயக்கமாய் கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்தான்..சர்வர் அங்கிருந்து நகர்ந்தவுடன் அவளே ஆரம்பித்தாள்..

“என் பேரு நிர்பயா..பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை தான்..அம்மாவுக்கு நேட்டிவ் மும்பை அப்பா இங்க தஞ்சாவூர் பக்கம் தான் அதனால தமிழ் தெரியும்..நா இத்தனை வருஷத்துல மும்பை தவர எங்கேயும் போனதில்ல..இதுதான் பர்ஸ்ட் டைம் அதனாலேயே ஒருமாதிரியான இன்செக்யூரிட்டி பீலீங்..அப்பா அம்மா சிக்ஸ் மந்த்ஸ் முன்னாடி தான்...” எனும்போதே அவள் குரல் கம்ம..

“சரி அழாத..கன்ட்ரோல் யுவர் செல்ப் இனிதான் நீ தைரியமா இருக்கனும் தெரியாத ஊர்ல வந்துட்டு இப்படி பயத்தை அப்பட்டமா முகத்துல காமிச்சுட்டு இருந்தா தப்பு பண்றவங்களுக்கு அதுவே வசதியா போய்டும்..ஆமா இப்போ இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்ற அன்னைக்கு உன்ன திட்டினதுக்காகவா??”

அதற்குள் காபி வர அதை அவனருகில் நகர்த்தியவாறே,

“இல்ல சார் அதனால லா இல்ல..அன்னைக்கு உங்க ப்ரெண்ட்டோட வைப் ஷாலினி அவங்ககிட்ட நா நடந்துகிட்டது ரொம்ப தப்புதான் ரொம்ப கில்ட்டியா பீல் பண்ணேன் அதுவும் ஒரு ப்ரெக்ணெண்ட் லேடிகிட்ட கண்டிப்பா அப்படிகஷ்டபடுத்துறமிதிரி நடந்துருக்க கூடாது அதான் உங்ககிட்டேயும் சாரி கேட்டுட்டு அவங்ககிட்டேயும் பேச முடியுமாநு கேக்கலாம்நு..”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..அவ தப்பா எடுத்துக்க மாட்டா..என்றவாறு காபியை பருகியவன் ஆமா ஹாஸ்ட்டல் மாத்திட்டியா??”

“ஆமா சார் ரெண்டு நாள் ஆகுது அது வீடு தான் நாலுபேரா ஷரிங்ல தங்கிருக்கோம்..”

“ம்ம் சரி கிளம்புறேன் எதுவும் ஹெல்ப் வேணும்னா என் நம்பர் இருக்குல கால் பண்ணு..சரியா??”

ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அவனோடு வெளியே வர “நீ எப்படி போகப் போற??”

“ஆட்டோ இல்ல பஸ்ல தான் சார்..”

“சரி ரீச் ஆய்ட்டு டெக்ஸ்ட் பண்ணு..பை”, என்றவன் புயலாய் வண்டியை கிளப்ப கண்ணிமைக்கும் நொடியில் பார்வையிலிருந்து மறைந்தான்..

அவளுடனான அன்றைய சந்திப்பு மனதுக்கு இனிதாய் தோன்றியது தமிழ்ச் செல்வனுக்கு.. அவன் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரமாகியும்  அவளிடமிருந்து அழைப்பு வராமலிருக்க அவனே அவளை அழைத்தான்..முழு அழைப்பு சென்று மறுபுறம் அமைதியாக மறுபடியும் அழைத்தான்..

“என்ன போலீஸ் ஆளோட பேசாம ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாதா இப்போதான வீட்டுக்கு போன?”

“ஏய் யார் நீ இந்த போன் உன்கிட்ட எப்படி வந்தது??”

“போனா போனோட ஓனரே என்கிட்ட தான் இருக்கா..பேசுறியா??”

“சார்..இவங்க யாருனே தெரில என்னென்னவோ சொல்றாங்க..”என்பதற்குள் அவன் குரல் மறுபடியும் கேட்டது “என்ன ஏசிபி..முகமெல்லாம் சிவக்குது போல..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.