(Reading time: 19 - 38 minutes)

“நிஜமாவே எனக்கு புடவை கட்ட தெரியாதுக்கா..”என பாவமாய் நின்றவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கமாட்டாமல் அவளோடு உள்ளே சென்று நல்ல சுடிதாரை எடுத்துக் கொடுத்தாள்...

அனைவருமாய் 5 மணியளவில் தமிழ் வீட்டுக்கு கிளம்ப நிர்பயா வரும் விஷயத்தை அவனிடம் கூறுவதற்காக ஹரிஷ் போனை எடுக்க ஷாலினி அதை பிடுங்கி வைத்துக் கொண்டாள்..சரோஜாவும் ராஜியும் அனைவரையும் வரவேற்க வ.வாசலுக்கு வர லெமன் எல்லோ நிற சுடிதாரில் ஒயிலாய் நின்றவளை பார்த்து ததமிழுக்கு இவள்தான் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்..

“வாம்மா எப்படியிருக்க??”

“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி..நீங்க எப்படியிருக்கீங்க??”

நல்லாயிருக்கோம் வா வா உள்ளே வாங்க எல்லாரும் என அனைவருமாய் உள்ளே செல்ல சில நிமிட அரட்டை முடிய ராஜியும் சரோஜாவும் கிச்சனுக்கு சமையலை கவனிக்க செல்ல ஹரிஷ்ஷின் தாயும் உடன் சென்றார்..ஆண்கள் அனைவருமாய் உள் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க நிர்பயா ஷாலினியோடு ஹாலில் அமர்ந்திருந்தாள்..உதவி செய்யும் எண்ணம் இருந்தாலும் என்ன நினைப்பார்களோ என ஷாலினியோடே அமர்ந்து கொண்டாள்..இரைவு மணி 7:30 ஐ தொட்டிருக்க வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்க வெளியே வந்த ராஜியிடம் கண்ஜாடை காட்டிவிட்டு ஷாலினி நிர்பயாவை கதவை திறக்க சொன்னாள்..

அவள் சென்று கதவை திறக்க தன் முன் நின்றவளை கண்டு கண்ணிமைக்காமல் நின்றான் தமிழ்ச்செல்வன்..அவனை கண்டு அவளும் செய்வதறியாமல் நிற்க,ஏன் இங்கலா வந்துருக்கநு கேட்டுருவாரோ..என்ன பண்றது என மூளை வேகமாய் யோசிக்க அதற்குள் அவன் கேட்டேவிட்டான்..

“ஏ அழுமூஞ்சி நீ இங்க என்ன பண்ற??”என்றவாறு வெளியிலிருந்த சேரில் அமர்ந்து ஷூவை கழட்டினான்..

“வந்து சார்..நா.ஷாலினி அக்கா தான்..”

“ஷப்பா போதும் எதுக்கு இப்படி நடுங்குற என்ன பாத்தா அவ்ளோ கொடுரமாவா இருக்கு??உன்னை இங்க எதிர்பாக்கலங்கிற விதத்துல கேட்டேன் நீ ஏன் வந்தநு மீண் பண்ணல..சரி கொஞ்சம் வழிவிட்டனா நானும் வீட்டுகுள்ள வருவேன் வரலாமா??இல்ல..”

ஐயோ சாரி சா..என நகர்ந்து உள்ளே ஓடிவிட்டாள்..மென்னகையோடு அவளை பின் தொடர்ந்தவன் உள்ளே ராஜியும் ஷாலினியும் சிரிப்பதை பார்த்து நடப்பதை புரிந்து கொண்டான்..இருப்பினும் அவள்முன் ஒன்றும் கேட்கத் தோன்றாமல் தனதறைக்குச் சென்று உடைமாற்றி வந்தான்..பேச்சும் சிரிப்புமாய் உணவு மேஜை களைகட்ட அவள் மட்டும் வழக்கம்போல அமைதியாய் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..ஏனோ அனைவரும் சந்தோஷமாய் இருக்கும் நேரத்தில் அவள் அப்படியிருப்பது தமிழுக்கு வருத்தமாய் இருந்தது..

சாப்பாட்டை முடித்து பெரியவர்கள் பேச ஆரம்பிக்க இளையவர்கள் அனைவரும் மொட்டை மாடிக்குச் சென்று அமர்ந்தனர்..

“அக்கா நா கிளம்புறேனே ரொம்ப லேட் ஆய்டுச்சு ப்ளீஸ்..”

“ஹாவ் அன் அவர்ல கிளம்பிடலாம்டா நானே கொண்டு போய் விடுறேன்..கவலபடாத..”

அக்கா..என மீண்டும் அவள் காதை கடிக்க..அவளுக்கு மேலும் தர்மசங்கடம் வேண்டாம் என எண்ணியவன் விடு ஷாலு லேட் ஆய்டுச்சு தான் இன்னொரு நாள் மீட் பண்ணிக்கோ..வா நிர்பயா நானே ட்ராப் பண்ணிட்றேன் என அதற்குமேல் நிற்காமல் கீழே சாவியை எடுக்க சென்றான்..இளையவர்கள் தங்களுக்குள் சிரித்து கொள்ள நிர்பயா அனைவரிமும் விடைபெற்று சென்றாள்..அங்கு பெரியவர்களோ மயக்கம் போடாத குறை தான் அவனே அவளுக்காக பாத்து பாத்து செய்வது அவர்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது..இருப்பினும் எதையும் வெளிப்படையாய் யாரும் காட்டிக் கொள்ளவில்லை..அடுத்த 20வது நிமிடம் அவள் வீட்டிற்கு அருகில் சற்று தள்ளி வண்டியை நிறுத்த அவள் இறங்கி அவனை ஏறிட்டாள்..வரேன் சா..உங்கள வேற தொந்தரவு பண்ணிட்டேன்..சாரி..என திரும்ப, ஒரு நிமிஷம்..என்றவனை கேள்வியாய் பார்த்தாள்..

வண்டியை விட்டு இறங்கியவன் சில நொடிகள் அமைதிகாக்க பின் அவளிடம்,நா உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசப் பட்றேன்..இத..லவ்னுலா சொல்லிட முடியாது பட் ஒரு பொண்ண பாத்தவுடனே இவதான் நம்ம லைவ்க்கு செட் ஆவானு ஒரு ஸ்பார்க் தோணணும்..அது எனக்கு உன்னை பாத்ததிலேயிருந்து இப்போ வர தோணிட்டுதான் இருக்கு..எங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம் தான்..நா அவங்ககிட்ட எதுவும் சொல்லல அவங்களாவே கெஸ் பண்ணி வச்சுருக்காங்க..உன்னை இன்னைக்கு வர வச்சதுக்குகூட அதுதான் காரணம்..வேற யார் மூலமாகவும் இந்த விஷயம் உனக்கு தெரியுரதுல எனக்கு விருப்பமில்ல அதான் நானே சொல்லிட்டேன்..அண்ட் எந்த காரணத்துக்காகவும் நீ தனியா இருக்க உன் சுச்சூவேஷனை யூஸ் பண்ணிக்குறேன்னு நினைச்சுறாத..வேற என்ன சொல்றதுனு தெரில..யோசிச்சு உன் முடிவை சொல்லு..எதுவாயிருந்தாலும்..பை என பைக்கை எடுத்து மின்னலாய் பறந்துவிட்டான்..

பெண்ணவளோ என்ன செய்வதென புரியாமல் வேகமாய் வீட்டிற்குள் சென்று யாருடனும் பேசாமல் தன் அறையில் சென்று முடங்கிக் கொண்டாள்..அவனை முதன்முதலாய் கண்ட நாளிலிருந்து ஒவ்வொரு சந்திப்பும் அவள் கண்முன் நிழலாடியது..அவளுக்காக அவன் செய்த அத்தனையிலும் அவனுக்கு அவள் மீதான ஈடுபாட்டை ஏதோ ஒருவிதத்தில் உணர்த்திக் கொண்டுதான் இருந்தது..இருந்தும் இவை எதற்குமே தான் தகுதியானவள் இல்லை என்பதை எண்ணியபோது அழுகை முட்டிக் கொண்டு வந்தது…வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் அவனுக்கு கூற வேண்டிய பதிலை உறுதி செய்தவாறு உறங்கச் சென்றாள்..ஆனால் உறக்கம்தான் வர மறுத்தது..

மக்களே..ஹீரோ தன் மனசை சொல்லிட்டாரு..வழக்கம்போல ஹீரோயின் நோ தான் சொல்ல போறாங்க..பட் அதுக்கான காரணங்களை பொறுத்திருந்து பார்ப்போம்..கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன்.. smile

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.