(Reading time: 19 - 38 minutes)

அதற்கு அவள் பதில் கூறாமல் இருக்க அதற்குள் அவன் அண்ணி ராஜி அவனைத் தேடி வந்திருந்தாள்..இருவரையும் சந்தேகமாய் அவள் பார்க்க தமிழ் முந்திக் கொண்டான்..

“அண்ணி இவ நிர்பயா தெரிஞ்ச பொண்ணு..ஷாலினியோட ப்ரெண்ட்..”

“நா ஒண்ணுமே கேக்கலயே தம்பி..ஆடு தானா வந்து சிக்குறத பாத்தா???”

“அண்ணி மீ பாவம்..என்ன விட்டுருங்க..”என காதில் மெதுவாய் கூற சிரித்தவாறே அவளோடு பேசஆரம்பித்தாள்..அதற்குள் அனைவரும் வந்துவிட அறிமுகபடலத்தை முடித்தான்..அனைவருக்குமே ஆச்சரியம் தாளவில்லை..இத்தனை வருடத்தில் தமிழ் அறிமுகம் செய்யும் முதல் பெண் சிநேகிதம்..அப்பா இருப்பதால் யாரும்  எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க தப்பித்தோம் என தமிழும் நழுவிக் கொண்டான்…

வீட்டிற்கு திரும்பும் வழியில் அவன் தந்தை தன் சிநேகிதரை பார்ப்பதற்காக இறங்கி கொள்ள வீட்டினுள் நுழைந்தவுடன் மூவரும் அவனை பிடித்துக் கொண்டனர்..

“டேய் உண்மைய சொல்லு யாருஅந்தபொண்ணு??அதெப்படி கரெக்ட்டா நாம போறப்போ அவளும் கோவிலுக்கு வருவா??”

என்னை பெற்ற தெய்வமே ஏன்ம்மா..சத்தியமா தெரிஞ்ச பொண்ணு அவ்ளோதான்..வேற ஒண்ணுமில்ல ரெண்டு மூணு தடவை ஹெல்ப் பண்ணிருக்கேன்..அதுமட்டும் இல்லாம லாஸ்ட் கேஸ்ல என்னால அவளுக்கு ஒரு ஆபத்து வந்துடுச்சு அதனால சின்னதா ஒரு சாப்ட் கார்னர் வேற ஒண்ணுமில்ல அண்ணி..

“நம்புற மாதிரிதான் இருக்குடா தம்பி ஆனாலும் ஏதோ ஒண்ணு அதுமட்டுமில்லனு சொல்லுதே??”

“உடன்பிறப்பே நீயுமா??ஒரு ஏசிபிய எல்லாருமாசேர்ந்துகார்னர் பண்றீங்களா??இதெல்லாம் நல்லாயில்ல..சொல்லிட்டேன்..”

மகனின் காதை செல்லமாய் திருகியவர் போலீஸ்லா இந்த வாசப்படிக்கு அந்தபக்கம்..உள்ள வந்தாச்சுனா மொதல்ல இந்த வீட்டு புள்ளடா..சரி சொல்லு உனக்குஅந்த பொண்ணை பிடிச்சுருக்கா??நானும் எத்தனை மாசமா கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்கேன்..உனக்கு அவளை தான் பிடிச்சுருக்குனாலும் சொல்லு அவங்க வீட்ல நாங்க பேசுறோம்..

அய்யோ அம்மா என்ன நீ விட்டா நாளைக்கே கல்யாணத்தை முடிச்சுருவ போலயிருக்கு..அதெல்லாம் ஒண்ணுமில்ல அப்படி எதுவும்னா நானே உன்கிட்ட சொல்றேன் போதுமா ஆளவிடுங்க..

இருந்தும் இந்த விஷயத்தை யாரும் எளிதில் விடுவதாய் இல்லை..அடுத்தகட்ட வீசாரணை ஹரிஷிடமும் ஷாலினியிடம் நடக்க.ஹரிஷ் நண்பனை விட்டுக் கொடுக்காமல் அவனுக்கு சாதகமாய் பேசினான்..ஷாலினியோ மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு நிர்பயாவின் மீதான அவன் பார்வை ஒன்றே சொல்லும்இதுநட்பு இல்லனு என கோர்த்துவிட தமிழின் அண்ணியும் அவளுமாய் திட்டம் தீட்டினர்..அடுத்தவார இறுதியில் டின்னருக்கு ஏற்பாடு செய்து ஹரிஷ் குடும்பத்தையும் நிர்பயாவையும் அழைக்க ஏற்பாடு செய்தனர்..ஆனால் நிர்பயாவின் வருகை அவனுக்கு தெரிய கூடாது என முடிவு செய்தனர்..

ந்த நாளும் வந்தது..தமிழ் காலையிலேயே வேவலையிருப்பதாய் கிளம்பிவிட்டான் இரவு ஏழு மணிக்கு வருரவதாய் கூறிச் சென்றான்..அங்கு ஷாலினி படாதபாடுபட்டு நிர்பயாவை வர வைத்தாள்..எவ்வளவோ கூறியும் அவள் மறுத்துவிட கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வைத்தாள்..தன் வீட்டிற்கு வர வைத்து அங்கிருந்து ஹரிஷ்ஷையும் அவன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு தமிழ் வீட்டிற்கு செல்வதாய் ஏற்பாடு..

அதன்படி நிர்பயா நான்கு மணியளவில் ஷாலினி வீட்டிற்கு வர அவள் வைந்த கோலத்தை பார்த்து ஷாலினி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்..ஏன் நிர்பயா இதவிட அழுது வடிஞ்சு உன்னால வர முடியாதா??உன்ன நா கெட் டூ கெதர்க்கு கூப்டனா இல்ல வேற எதுக்காவது கூப்டனா..இந்தா இந்த புடவையை கட்டிக்கோ..என் ப்ளவுஸ் உனக்கு கரெக்ட்டா இருக்கும் பிடி..

“அக்கா ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம் எனக்கு புடவைலா கட்ட தெரியாது..இதேயே போட்டுக்குறேன் ப்ளீஸ்..”

இங்க பாரு நீ என்ன பேருக்கு அக்காநு கூப்பிடுறியோ மனசாற கூப்டுறியோ எனக்கு தெரியாது..ஆனா நா உன்ன என் சொந்த தங்கையா தான் பாக்குறேன்..ஏன் தெரியுமா நானும் உன்ன மாதிரி அம்மா அப்பா இல்லாதவதான்..உன் நிலைமை எவ்வளவு கொடுமைநு என்னால புரிஞ்சுக்க முடியும்..போனவங்களையே நினைச்சுட்டு இருந்தா ஒரு ப்ரோஜனமும் இல்ல டா..அவங்க நீ இப்படி வருத்தப்பட்டுட்டே இருக்குறத விரும்புவாங்களா சொல்லு..உனக்கா நாங்க எல்லாரும் இருக்கோம்..தெரியாத ஊர்ல உனக்காக இத்தனை பேரை கடவுள் குடுத்துருக்காறேனுசந்தோஷப்படு..ம்ம் என அவள் தோள்பற்ற அவள்மேல் சாய்ந்து அழுது தீர்த்து விட்டாள்..

“தேங்க்ஸ் பார் யுவர் கேர் அக்கா..இனி நா நார்மலா இருக்க ட்ரை பண்றேன்..”

குட் கேள்..இனி வீக் கெண்ட் ஆனா நீ இங்க வந்துர புரியுதா??எனக்கும் பேச்சு துணைக்கு நீ இருந்தா நல்லாயிருக்கும்..பாப்பா வெளில வர்ற வரை எனக்கு கம்பெனி குடு என்ன ஓ.கே வா??இப்போ போய் இத கட்டிட்டு வா என கன்னம் கிள்ளி உள்ளே அனுப்பி வைத்தாள்..

“அக்கா.”

“இன்னும் என்ன??”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.