(Reading time: 19 - 38 minutes)

அடுத்த பத்து நிமிடத்தில் அவளோடு அவன் கிளம்ப ஷாலினி அவளின் மொபைல் எண்ணை வாங்கி கொண்டாள்..லீவ் இருக்குறப்போலா இங்க வந்துருங்க நிர்பயா..ரூம்ல தனியா இருக்காதீங்க இந்தாங்க நைட்க்கு டிபன் இதுல வச்சுருக்கேன்..

“அய்யோ எதுக்கு இதெல்லாம்..பரவால்ல..”

ஒண்ணும் ப்ரச்சனையில்ல எடுத்துட்டு போங்க..நெக்ஸ்ட் டைம் வரச்சே பாக்ஸ்லா எடுத்துட்டு வாங்க..இதுக்காகவாவது வரணும்ல..என்றவாறு வழியனுப்பி வைத்தாள்..

அவள் கூறிய வீட்டின் முன் இறக்கியவன்,” ஆமா உன்கிட்ட ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன்..காலைல அப்படி ஒரு இடத்துல அவனுங்களோட உன்னை பாத்தப்போ உன் முகத்துல ஏதோ பதட்டம்தான் இருந்துதே தவர கொஞ்சமும் பயமில்லையே எப்படி??”

வெற்றுப் புன்னகையை சிந்தியவள் ,”எப்படியும் நீங்க வந்துருவீங்கநு தெரியும்..அதனால தான் பயமில்லாம இருந்துருக்கும்நு நினைக்குறேன்..சரி நா வரேன்” என அவள் உள்ளே செல்ல அதுவரை காத்திருந்துபின்னர் அங்கிருந்து பைக்கை கிளப்பினான்..

அன்றைய நிகழ்வை வைத்தே ஷாலினி தமிழை கலாய்த்துக் கொண்டிருந்தாள்..

“அண்ணா எனக்கென்னவோ அந்த நிர்பயா தான் உங்களுக்காக பொறந்தவனு தோணுது..நீங்க என்ன நினைக்குறீங்க??”

“நீ வேற அவளுக்கு என்ன பாத்தாலே கை காலெல்லாம் உதறுது இதுல நீ சொல்றது ஒண்ணு தான் குறைச்சல்..”

“ஓஓ அப்போ உங்களுக்கு ஓ.கே அவங்களுக்காக தான் யோசிக்குறீங்களா??”

“ஷாலு..வர வர நீ ரொம்ப யோசிக்குற..”

“டேய் அவ சொல்றது கரெக்ட் தான்..உனக்கு அவ மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்குநு அப்பட்டமாவே தெரியுது..இல்லனா நேத்து அவ கூப்டதுக்காக ஓடி போய் நின்றுப்பியா??”

“டேய் அதெல்லாம் ஒண்ணுமில்ல..முதன்முதலா அவளை பாத்தப்போவே ஒருமாதிரி பயந்துபோய் பாக்க பாவமா இருந்தா அது மைண்ட்ல பதிஞ்சுடுச்சு..மே பி அதனால அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்நு நினைச்சேன்..அவ நல்ல பொண்ணு தான் பட் அவளுக்கேத்த நல்ல பையன் நா கிடையாதுடா..இதுக்கு மேல அவள பாக்கவே கூடாதுநு எப்போவோ முடிவு பண்ணிட்டேன்..”

அவன் நினைத்தது மறுநாளே பொய் ஆகப் போவைது அவன் அறிந்திறாதது..அடுத்த நாள் காலை வழக்கைம்போல் அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தவனை கான்ஸ்டபிளின் குரல் கலைத்தது..

“சார் உங்கள தேடி ஒருத்தங்க வந்துருகாங்க..சரி வர சொல்லுங்க..”

சிஸ்டத்திலிருந்து விழியகற்றாமலேயே காலடி சத்தத்தை உணர்ந்தவன்,”உனக்குநு எதாவது ப்ராப்ளம் தேடி வருதா என்ன??இப்போ என்ன ஹெல்ப் வேணும்???”

“சார்..”

குரலின் மாற்றத்தை உணர்ந்து திரும்பியவன் வேறொரு பெண் நிற்பதை கண்டுமனதிற்குள் தன்னை தானே நொந்து கொண்டான்..

”சாரி சொல்லுங்க என்ன வேணும்??”

அந்த பெண் வந்த விவரத்தை கேட்டு அவளுக்கு வேண்டியதை கூறிவிட்டு  அமர்ந்தவனுக்கு இதழோர சிரிப்பு எழுந்தது..ஷாலினி கூறியது மனதினூள் தோன்ற அதுதான் உண்மையோ என்று தோன்றியது…மொபைலை கையில் எடுத்தவன் அவள் எண்ணை எடுத்து அதையே பார்த்திருந்தான்..அழைக்கவா வேண்டாமா என எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவன் அம்மாவின் அழைப்பு வர அட்டெண்ட் செய்து பேசினான்..இரண்டு நாளில் அனைவரும் சென்னை வருவதாய் கூறினார்..அதன்பின் வந்த வேலைகளில் நிர்பயாவிற்கு அழைத்து பேசும் எண்ணத்தை மறந்தே போனான்..அடுத்து வந்த தினங்களிலும் அவள்புறம் சென்ற எண்ணங்களை வலுகட்டாயமாக அடக்கினான்..

பெற்றோரின் வருகைக்குப் பின் அவர்களோடே பொழுது சரியாய் இருந்தது..அண்ணன் மகளோடு விளையாடுவதும் அப்பா அண்ணணோடு கதை பேசுவதும் அம்மா அண்ணியோடு வம்பிழுப்பதுமாய் பொழுது கழிந்தது..அடுத்து வந்த ஞாயிற்றுகிழமையில் அனைவருமாய் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்றனர்..அனைவருமாய் உள்ளே நுழைய தமிழுக்கு கைப்பேசி அழைக்க பேசிவிட்டு வருவதாய் செய்கை காட்டி மறுபுறம் திரும்பி பேச ஆரம்பித்தான்..பேசி முடித்து உள்ளே நுழைந்தவன்  கண்களில் பட்டவளை நோக்கி கால்கள் தானாக செல்ல அருகில் சென்று பார்த்தபோது கண்கலங்கி கண்ணீர் கன்னம் உரச கண்மூடி அமர்ந்திருந்தாள்..

“என்ன இன்னைக்கு முருகருக்கு அபிஷேகத்துக்கு தண்ணி இல்லனு சொன்னாங்களா??கண்ல இவ்ளோ ஸ்டாக் வச்சுருக்க??”

என்றவாறு கைக்கட்டிஅவள் முன் நிற்க,குரல்கேட்டு சட்டென கண் திறந்தவள் வேகமாய் கண்களை துடைத்துவிட்டு எழுந்து நின்றாள்..”சார் எப்படியிருக்கீங்க??”

“ம்ம் நல்லாயிருக்கேன்..உன்னை பாத்தா நல்லாயிருக்குறமாதிரி தெரிலேயே என்னாச்சு??”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..சும்மா.சும்மா தான்..”

“முதல்ல சார்நு கூப்டுறத நிறுத்து..கால் மீ தமிழ் ஆர் செல்வன் வாட் எவர்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.