(Reading time: 19 - 38 minutes)

“ஏய் யார் நீ கைல சிக்குன என்ன ஆவனு தெரியாது யார்ரா நீ??தைரியமான ஆம்பளைனா என் முன்னாடி வந்துநில்லு அதவிட்டு பொண்ணு மேல கை வைக்குற??”

“அட அட போலீஸ்க்கு என்னா லவ்வு..ம்ம்”

“டேய் அவ என் ஆளுநு எவன்டா சொன்னது..முதல்ல நீ எங்கயிருக்கநு சொல்லு அப்பறம் பேசுறேன்..”

“வா வா அதுக்குதான நானும் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்..இடத்தை சொல்றேன் ஒழுங்கு மரியாதையா தனியா வந்து சேரு..இல்லனா என்ன நடக்கும்நு தான் உனக்கே தெரியுமே நீதான் புத்திசாலியாச்சே..”

தன் பிஸ்டலை எடுத்தவன் ஹரிஷிற்கு  சுருக்கமாய் விஷயத்தை மெசேஜ் அனுப்பிவிட்டு கிளம்பினான்..அவள் நலன் குறித்த கவலை லேசாய் எட்டிப்பார்க்க அதை தள்ளி வைத்துவிட்டு அந்த இடத்திற்கு விரைந்தான்..பூந்தமல்லி தாண்டிய ஹைவே பகுதியிலிருந்த பழைய குடோன் அது..உள்ளே செல்ல ஐந்து தடியன்களுக்கு நடுவே கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் அவள் அமர்ந்திருந்தாள்..

“யார் ஆள்டா நீங்களாம்??லூசுதனமா எனக்கு சம்மந்தமேயில்லாதவள தூக்கிட்டு வந்து என்னை வெறுப்பேத்துறீங்க??”

“ஏ போலீஸு நல்லா நடிக்குறய்யா..சம்மந்தமில்லாமயா இப்படி வந்து நிக்குற” என சிரிக்க..

பதிலுக்கு சிரித்தவன்,”டேய் கூறுகெட்ட குக்கரு போலீஸுக்கே போன் பண்ணி பொண்ணை கடத்திருக்கனு சொன்னா வராம வீட்ல போய் இழுத்துமூடி தூங்கவா செய்வான்..அதுலயும் நா ஹீரோயிசம் காட்ட சான்ஸ் கிடைக்கும்போது வராம இருக்க முடியுமா சொல்லு..”

“ஏய் என்ன நக்கலா??”

“இல்ல விக்கல் அட ச்சை மொக்க ஜோக்லா போட வைச்சுகிட்டு மொதல்ல எந்த கேங் நீங்கலெலாம் அத சொல்லு..”

“ம்ம் பப்ளிக்கா துடிக்க துடிக்க போட்டீங்களே குணா அந்த கேங் தான்..”

“அடப்பாவி செத்தவனுக்காகவா என் உசுரஎடுக்குறீங்க ச்ச நா கூட புது கேங் லீடர்நு சந்தோஷப்பட்டேனே..சரி சொல்லு உங்க அண்ணணுக்கு மேல தனியா இருக்க முடிலயாமா அதான் உங்களையும் கூப்டுறானா??”

எனும்போதே ஒருவன் பெரிய கத்தியை அவன்புறம் நீட்ட வளைத்து பிடித்து அவனை வயிற்றில் அடிக்க சுருண்டு விழுந்தான்..அடுத்த பத்து பதினைந்து நிமிடமும் களேபரமாய் இருக்க ஹரிஷ் அந்த ஏரியா போலீஸோடு உள்ளே நுழைந்தான்..அனைவரையும் போலீஸிடம் ஒப்படைத்து வந்தவன் அவளை கைப்பற்றி தூக்கி கட்டை அவிழ்த்து விட அத்தனை நேரம் வாய் அடைக்கப் பட்டிருந்ததில் தொண்டை வருண்டு இருமியவள் தேங்…க்..ஸ் சா..ர்…

“உன் ராசிப்படி என்கிட்ட நீ தேங்க்ஸ் மட்டும் தான் சொல்லனும்போல “என நகர சின்னதாய் புன்னகைத்தவள் ஹரிஷிடம்,”சாரி சார் அன்னைக்கு உங்க மிஸஸ் மனச கஷ்டப்படுத்திட்டேன்..”

“இட்ஸ் ஓ.கே நிர்பயா..முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் வாங்க”என்றவன்,”  தமிழ் நீ இவங்கள கூட்டிட்டு வீட்டுக்கு வந்துரு நா இங்க ஸ்டேஷன்ல பேசிட்டு வந்துரேன்” என்று நகர்ந்தான்..தமிழ் பைக்கில் அமர்ந்து அவளை பார்க்க தயக்கமாய் அவனை ஏறிட்டவளிடம்,

“வந்து உக்காரு இங்கயிருந்து ஆட்டோ பிடிக்கனும்னா அரைமணி நேரம் ஆகும்..”என அக்சிலரேட்டரை உயர்த்த அமைதியாய் ஏறி ஓரமாய் அமர்ந்து கொண்டாள்..

நேராய் ஹரிஷ் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் உள்ள வா என்றவாறு முன்னே சென்றான்..

சோபாவில் சென்று இரு கைகளையும் விரித்தவாறு அவன் கண்மூடிஅமர அவளுக்கு என்ன செய்யவதென தெரியாமல் கையை பிசைந்து நிற்க,” வாங்க வாங்க நிர்பயா..உக்காருங்க”,என்றவாறு ஷாலினி ஹாலிற்கு வந்தாள்..

”என்ன அண்ணா வந்தவங்கள உக்கார சொல்லாம நீங்க ஹாய்யா உக்காந்துருக்கீங்க??”

“ஹே அவளுக்காக பைட்லா பண்ணிருக்கேன் ஷாலு என்ன இப்படி சொல்லிட்ட..”

“ம்ம் அது சரி நீங்க வாங்க இப்படி உக்காருங்க “என கைப்பிடித்து அமர்த்தியவளின் கையை பிடித்துக் கொண்டாள்..”அன்னைக்கு நடந்தத நினைச்சு ரொம்ப கஷ்டமாய்டுச்சு ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துக்காதீங்க..”

“ச்ச அதெல்லாம் எப்போவோ மறந்துட்டேன் ஆமா அந்த ரௌடிஸ்ட்ட எப்படி மாட்னீங்க??”

“அதுவா நாங்க பேசிட்டு இருந்தத பாத்துருப்பானுங்க போல என்னை இவரோட….இவருக்கு தெரிஞ்ச பொண்ணுனு நினைச்சு காபி ஷாப் வாசல்ல வச்சு கார்ல இழுத்துட்டு போய்ட்டாங்க..”

ஷாலினி குறும்பாய் தமிழைப் பார்க்க,”அம்மா தாயே நீ வேற இப்போ உன்கிட்ட சொன்ன அதே கதையை என்கிட்டயும் சொல்றதுக்கு வர சொன்னா வேற ஒண்ணுமில்ல..அமைதியா போய் சாப்ட எதாவது எடுத்துட்டு வா..”

ம்ம் நம்பிட்டோம் நம்பிட்டோம் என்றவாறு ஜுஸ் எடுத்துவரச் சென்றாள்..

“சார் நா கிளம்புறேன் ஆல்ரெடி ரொம்ப லேட் ஆய்டுச்சு ரூம் மேட்ஸ் தேடுவாங்க..”

“பைவ் மினிட்ஸ்ல நானே கொண்டு போய் விடுறேன் டோண்ட் வொரி போ அந்த ரூம்ல போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வா கிளம்பலாம் “என்றவனை நன்றி கலந்த பார்வை பார்த்து உள்ளே சென்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.