(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

வான் வருவான் வருவான் வருவான்     

வான் வருவான் வருவான் வருவா…………ன்     

வான் வருவான் வான் வருவா……ன்     

     

வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்     

வரும்முன் அறிவான்     

என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்     

தொலைவிலே பனிவான்     

கர்வம் கொண்டால் கல்லாய்     

உறைவான் கல்லாய் உரைவான் உரைவா……ன்     

காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்     

காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்     

என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்..”

வீட்டிற்கு வந்தவனை ஆளாளுக்கு பிடித்து உலுக்க அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் வாய் திறந்தான்..

“ஹே எல்லாரும் கொஞ்சம் வாய மூடுங்க..அடுத்தவன மாட்டி விடுறதுல அப்படி ஒரு சந்தோஷம்..ம்ம்ம் இப்போ என்ன கல்யாணம் தான பண்ணிக்குறேன்..சம்மந்தப்பட்டவள்ட்ட கேட்டுருக்கேன்..ஓ.கே சொன்னா பாக்கலாம்” என்று கூற அனைவரும் மொத்தமாய் வாயடைத்து நின்றனர்..

“அடப்பாவி ஏன்டா விரைப்பாவே திரிஞ்சுட்டு இருக்கியேநு பாத்தா இவ்ளோ வேலை பண்ணிருக்க??அநியாயமா உனக்கு போய் சப்போர்ட் பண்ணி பேசினேனேடா..”என ஹரிஷ் தலையில் அடித்து கொண்டான்..

“தம்பி பாக்குறப்போலா மிரட்டிட்டே இருக்கீங்கநு பாத்தா இது எப்போ நடந்தது??எங்ககிட்ட சொல்லிருக்கலாம்ல??”

“அண்ணி இப்போதான் அவகிட்டயே சொல்லிட்டு வரேன்..ரொம்ப நாளா நினைச்ச விஷயம்லா இல்ல அண்ணி..பட் கல்யாணபேச்சு எடுத்தாலே ஏனோ அவ மட்டும் தான் எனக்கு செட் ஆவானு தோணுச்சு..மத்தபடி இன்னைக்கு அவள பாத்த அப்பறம்தான் முடிவு பண்ணேன்..நாம எல்லாரும் ஜாலியா பேசி சிரிச்சு இருக்கும்போது அவ மட்டும் தன் இழப்பை நினைச்சு வருத்தபட்டு இருக்குறத பாத்தப்போ ரொம்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு..கிட்டதட்ட ஷாலினி நிலைமைல தான் அவளும் இருக்கா..அதுக்காக பாவப்பட்டு இரக்கப்பட்டுலா கல்யாணம் பண்ணல..அவ இழந்த சந்தோஷத்தை திரும்ப குடுக்கனும்னு தோணுது..அதான் கல்யாணம் பண்ணிக்குறியாநு கேட்டுருக்கேன்..பட் அவ முடியாதுநு சொன்னாலும் நோ ப்ராப்ளம்..எப்பவுமே ஒரு ப்ரெண்ட்டா அவ கூட இருப்பேன்..பாக்கலாம் என்ன சொல்றாநு” என மென்னகைக்க..

அனைவருக்குமே அவன் பேச்சு நிறைவாய் இருந்தது..நிச்சயம்  இவர்கள் திருமணபந்தத்தில் இணைந்தால் ஒருவருக்கொருவர் துணையாய் வாழ்க்கை அழகாய் அமையும் என்று தோன்றியது..

றுநாள் காலையில் விழிக்கும் போதே மொபைலில் மேசெஜ் டோன் கேட்க யாராய் இருக்கும் என எண்ணியவாறே தமிழ் மொபைலை பார்க்க நிர்பயா தான் அனுப்பியிருந்தாள்..

“சார் நீங்க நேத்து என்கிட்ட பேசின விஷயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் உங்களுக்கு எப்போ ப்ரீ டைமோ எனக்கு மெசேஜ் பண்ணுங்க நா வரேன்..”என்றிருந்தது..

அவளின் பதில் நிச்சயம் அவனுக்கு சாதகமானதாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது..சரி போய் பார்ப்போம் என்றெண்ணி இடத்தையும் நேரத்தையும் மெசேஜ் அனுப்பிவிட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றான்..

மதிய உணவு இடைவெளியில் இருவருக்கும் வர ஏதுவானதாய் ஒரு பார்க்கில் அவளுக்காக காத்திருந்தான்..அடுத்த சில நொடிகளில் உள்ளே நுழைந்தவளின் முகம் தூக்கமின்மையாலும் அழுகையாலும் வீங்கியிருப்பது தெரிந்தது..வந்தவள் அதே பெஞ்சின் மறு ஓரத்தில் அமர்ந்தாள்..

“ம்ம் இரண்டு மூணு லிட்டர் எக்ஸ்ட்ராவா அழுதுருப்ப போல??அவ்ளோ மோசமா நா எதுவும் பேசலனு நம்புறேன்..சரி சொல்லு என்ன பேசனும்னு ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்துருக்க??”

அவளோ தான் பயந்ததை போலவே கேள்வி கேட்கிறானே எப்படி சமாளிப்பது என வேகமாய் சிந்தித்து கொண்டிருந்தாள்..

“இங்க  பாருங்க சார்..சாரி..செல்வா நீங்க பேசினது உங்களுக்கு வேணா சாதாரண விஷயமா இருக்கலாம் பட் உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு  விஷயத்தை எதிர்பாக்கல..நீங்க ஒரு ஏசிபி அண்ட் நல்லவராவும் இருந்தீங்க அதனாலதான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன்..அண்ட் ஷாலினி அக்கா ப்ரெண்ட்லியா பேசினாங்க மனசுக்கு ஆறுதலா இருந்தது அதனால தான் அவங்க நேத்து கூப்ட்டு என்னால மறுக்கமுடில..பட் அவங்க இப்படி ஒரு எண்ணத்தோட தான் என்ன கூப்டுருக்காங்கனு தெரிஞ்சுருந்தா சத்தியமா வந்துருக்க மாட்டேன்..நீங்களும் சராசரி ஆம்பள தான் ப்ரூவ் பண்ணிட்டீங்க ஒரு பொண்ணு சகஜமா பேச ஆரம்பிச்சா நீங்க என்ன சொன்னாலும் கேப்பானு நினைச்சுட்டீங்கள.”.என்று அவள்போக்கில் பேச கைநீட்டி அவளை நிறுத்த மூச்சு வாங்க அவனை ஏறிட்டாள்..அவள்புறமாய் நகர்ந்து அமர்ந்தவன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.