(Reading time: 23 - 46 minutes)

படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து நிச்சயம் என்ன மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு எதாவது பண்ணணும்னு சொன்னா..அதே வெறியோட படிச்சா..இப்போ ஐ ஏ எஸ் பாஸ் பண்ணி போஸ்டிங்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா..அவகிட்ட நீ அந்த பேச்சு பேசுற..கஷ்டம் வாழ்க்கைல எல்லாருக்கும்தான் வரும் அதுக்காக அதை மட்டுமே தான் கட்டி அழுவேன்னா யாருமே வாழமுடியாது அத புரிஞ்சுக்கோ…இத பாரு இப்போ சொல்றேன் கல்யாணம்னு பண்ணா அது உன்னை மட்டும்தான் எத்தனை வருஷம் ஆனாலும் சரி..நீ உன்னை தப்பானவளா காட்டினா உன்னை விட்டுருவேனுதான இப்படி பண்ண இனி நீயே நினைச்சாலும் நா உன்னை விட்டு போறதாயில்ல..ஆனத பாத்துக்கோ என கத்திவிட்டு சோபாவில் விழுந்தமர்ந்தவன் கண்மூடி இருக்க,

கண்களில் வழிந்த நீரை துடைத்தவாறே அவள் பேச ஆரம்பித்தாள்..

“அவங்க எல்லாத்தையும் எதிர்த்து வந்ததுக்கு காரணம் நீங்களும் உங்க ப்ரெண்டும்தான்..சரியான நேரத்துல அவங்களுக்கு போய் உதவி பண்ணீங்க..ஆனா எனக்கு அப்படி யாரையுமே கடவுள் அனுப்பலையே..ஏன் செல்வா..”

நிதானதமாய் கண் திறந்தவன்” என்ன சொல்ற??”என ஊடுருலாய் ஒரு பார்வையை அவள்மேல் செலுத்த,விரக்தி புன்னகையோடு சென்று அவனுக்கு எதிர்புரமாய் சுவரில் சாய்ந்தவாறு காலைகளை சுருட்டி அமர்ந்தாள்..

ஷாலினி அக்கா மாதிரி நா கஷ்டப்பட்ட பேக்கவுண்ட்ல இருந்துலா வரல..அப்பா சின்னதா ப்ஸினஸ் பண்ணிட்டு இருந்தாரு..அப்பாவும் அம்மாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க அதனால ஒருத்தருக் கொருத்தர் ரொம்பவே சப்போர்ட்டிவ்வாவும் அன்பாவும் இருப்பாங்க..பான் வித் சில்வர் ஸ்பூன் இல்லனாலும் என்ன அவங்க ராணி மாதிரி தான் பாத்துகிட்டாங்க..கஷ்டம்னா என்னனு தெரியாமதான் வளர்த்தாங்க..வாழ்க்கை ரொம்பவே அழகா போய்ட்டுருந்த நேரம்..

12வது முடிச்சு காலேஜ் சேரணும்னு சொன்னப்போ மும்பைலயே ஒன் ஆவ் த பெஸ்ட் காலேஜ்ல என்ன சேர்த்தாரு எங்கப்பா..பை நேச்சரே நா கொஞ்சம் சைலண்ட் தான் அதனாலேயே எனக்கு ப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி..காலேஜ் புது இடம் அட்மாஸ்பியர் ரொம்பவே பயமாதான் இருந்தது..இருந்தும் எதையும் வெளிக்காட்டிக்காம நல்லா படிச்சேன்..முதல் ரெண்டு வருஷமும் நாதான் யூனிவர்சிட்டி பர்ஸ்ட்..யாரும் அவங்களா வந்து பேசினா பேசுவேன் அதுகூட பொண்ணுங்ககிட்ட தான்..இந்தளவு இருந்த நா பேசுற ஒரே ஆண் அப்பாவோட ப்ஸினஸ் பார்ட்னர் அங்கிளோட பையன்..

அவன் என்ன விட ஒரு வயசு பெரியவன்..என்னோட 16 வயசுல இருந்து அவங்க பேமிலிய எங்களுக்கு தெரியும்..அப்படியிருந்தும் அவன்கிட்ட ரொம்ப க்ளோஸா பேசினதெல்லாம் இல்ல..அவன் பேசினா திரும்ப பதில் பேசுவேன் அவ்ளோ தான் அப்படியிருக்கும் போது நா காலேஜ் முடிச்ச டைம்ல அவனோட அப்பா அவனுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ற விஷயமா அப்பாகிட்ட பேசினாரு..அப்பா முடியவே முடியாது ரொம்ப சின்ன வயசு இப்போவே கல்யாணம் பண்ண வேண்டாம் அவ படிக்கட்டும்நு எவ்வளவோ சொன்னாரு..கடைசில என்னென்னவோ பேசி அப்பாவ அரைமனசா சம்மதிக்க வச்சாங்க என்கிட்ட இதபத்தி கேட்டப்போ நா ஒத்துக்கவேயில்ல..பயங்கமா அழுதேன்..அதை தாங்க மாட்டாம இதுக்கு மேல இதபத்தி பேசாதீங்கநு அப்பா அவங்ககிட்ட சொல்லிட்டாரு…

அதுக்குமேல அங்கிளும் அந்த பேச்சை விட்டாரு..ப்ரச்சனை முடிஞ்சுதுநு நினைச்சா உண்மையிலே ப்ரச்சனை அப்போதான் ஆரம்பிச்சது..காலேஜ் முடிச்சு எம்பிஏ சேர்ந்தேன்..அப்படி நா க்ளாஸ்க்கு  வர அப்போ போறப்போலா என்ன பாத்து அவன் பேச ஆரம்பிச்சான்..நா ஒத்துக்கலனவுடனே மிரட்டுனான்..நா இதை எதையும் வீட்ல சொல்லல அப்பா கஷ்டபட கூடாதேநு விட்டுடேன் அதான் நா பண்ண பெரிய தப்பு…

அப்படி ஒருநாள் சாய்ந்திரம் வீட்டுக்கு வர்ற வழில திடீர்நு ஒரு கார் என்ன வழிமறிச்சு உள்ளே இழுத்து போட்டு கிளம்பிடுச்சு..உள்ள அங்கிள் பையனும் இன்னும் இரண்டு பேரும் முழு போதைல இருந்தாங்க..அழுதேன் கெஞ்சினேன் எதுவுமே காதுல ஏர்ற நிலைமைல அவங்க இல்ல..ஆனா அவன் சொன்ன விஷயம்..

“கல்யாணம் பண்ணி மொத்த பிஸினஸும் எனக்கு வரும்நு பாத்தேன்..நீ அதுக்கு ஒத்துவரல இப்போ உன் லைவ்வே போக போகுது இதுக்குமேல கல்யாணம்ங்கிற பேச்சுக்கே இடமில்லனு..”எனும் போதே வெடித்து அழுதாள்..

கண்களின் கண்ணீர் கன்னத்தை நினைக்க ஓடிச்சென்று அவன் தலைப்பற்றியிருந்தான் தமிழ்..குறுக்கிய கால்களுக்கிடையில் தலைப் புதைத்து கதறியவளை தேற்ற வழியின்றி தவித்தான்..தன் நினைவு தெரிந்து அவன் அழுதது இதுவே முதன்முறை..பேச வார்த்தை வராமல் தன் கையழுத்ததிலேயே தன் அரவணைப்பை உணர்த்தினான்..

கொஞ்சம் கட்டுக்குள் வந்தவள் அவனை விட்டு எழுந்து ஜன்னலருகே சென்று எங்கோ வெறித்தபடி மீண்டும் தொடர்ந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.