(Reading time: 23 - 46 minutes)

“அதுதான் என் வாழ்க்கையோட கடைசி நாள்..இப்போ இருக்குறவ வெறும் நடைபிணம் தான்..அவனுங்க பண்ண ஒரே நல்லது ஆத்திரத்தை தீத்துட்டோம்னு அப்படியே எங்கேயோ போட்டு போகமா என் வீட்டு வாசலயே என்ன தூக்கி போட்டு போனதுதான்..அவன் ஏன் அப்படி பண்ணிணான்னு இப்போ வரவும் எனக்கு தெரியாது..ஒருவேளை கடவுளுக்கு என்மேல கொஞ்சமா அப்போதான் இரக்கம் வந்துதோ என்னவோ..அரைமயக்கத்துல உடம்பெல்லாம் ரணப்பட்டு கிழிஞ்ச பூவா கிடந்த என்னைபாத்து என் அப்பா அம்மா கதறினது இன்னமும் என் காதுக்குள்ள ஒலிச்சுட்டேதான் இருக்கு..

என்ன என்னனு கேட்க எதையும் சொல்ற நிலைமைல நா இல்ல..இருந்தாலும் இதை பத்தி பெத்தவங்ககிட்ட சொல்லிருக்க முடியுமா என்ன..அப்பா ஓடிபோய் பக்கத்து தெருவுல இருந்த டாக்டர் ஆன்ட்டிய கூட்டிட்டு வந்தாரு..விஷயம் தெரிஞ்சு ரெண்டு பேரும் பட்டபாடு உலகத்துல மிருகத்துக்கு கூட இந்த வேதனை வரக்கூடாது..

20 வருஷம் பாசமா வளர்த்து அவ எதிர்காலத்தை பத்தி ஆயிரம் கனவு கண்டு அவளுக்காகவவே தங்களோட லைவ்வ வாழ்ற பெத்தவங்களுக்கு எதுக்கு இந்த தண்டனை செல்வா??பெண்ணோட அழுகைக்கு பேயும் இறங்கும்னு சொல்லுவாங்களே ஆனா என் கதறல் ஏன் அந்த பேய்ங்க காதுல விழல..அப்படி என்ன வெறி அப்படி என்ன குடி மயக்கம்..ஒருத்தன் ஒரு பொண்ணு மேல எப்போ வலுகட்டாயமா கை வைக்குறானோ அப்போவே அவன் ஆம்பளைங்கிற தகுதிய இழந்துட்டான்..ம்ம் நா இத சொல்லி மட்டும் எதுவும் மாற போகுதா என்ன..

அதுக்கப்பறம் ட்ரீட்மெண்ட் குடுத்து அந்த டாக்டர் ஆன்ட்டி அவங்க க்ளினிக்ல வச்சு பாத்துகிட்டாங்க..தெரிஞ்சவங்கங்கிறதால விஷயம் வெளியே தெரியாம பாத்துகிட்டாங்க..அப்பா பார்ட்னர்ட்ட போய் சண்டை போட அவரோ தன் புள்ளைய காப்பாத்துரதுக்குதான் குறியா இருந்தாரு..பையன கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்குறேன்..காதும் காதும் வச்சமாதிரி கல்யாணத்தை முடிச்சுரலாம்நு சொன்னாராம்..

அப்பாவால அடுத்தடுத்த கவலைய தாங்கிக்கவே முடில..பேசாம போலீஸ்ல சொல்லி அவனுக்கு தண்டனை கிடைக்க வைப்போம்னு தெரிஞ்ச போலீஸ் ஒருத்தர் மூலமா மேலிடத்துல பேச அவங்க யாரு என்ன பண்ணாங்க..பொண்ணு இப்போ எங்கயிருக்காநு பத்திரிக்கைக்கு நியூஸ் குடுக்கதான் அலைஞ்சாங்க..மனசு வெறுத்துப் போய் அப்பா என்னையும் அம்மாவையும் கூட்டிட்டு ஒரு கிராமத்துக்கு வந்துட்டாரு..எட்டு மாசம் வாழும்போதே நரகம்..திடீர் திடீர்நு அலறுவேன் கதறுவேன் பாத்து பாத்து செத்து பொழைப்பாங்க ரெண்டு பேரும்..

அப்பா வீட்டோடேயே முடங்கி போனாரு..நடந்த அசிங்கத்தை மறக்கலாம்நு நினைக்ககூட முடிலை..ஆம்பளைங்க மேல இருந்தே மரியாதையே போச்சு யாரை பாத்தாலும் பயம்..நடுங்கி ஓடுவேன்..ஒரு கட்டத்துல அப்பா பக்கத்துல போகவே பயந்தேன்..பெத்த பொண்ணு தன்னேயே அந்நியமா பாக்குறாளேநு நொந்து போனார்..அதுக்கு மேல அவரால வாழ முடியல..ஏன்னா நம்ம நாட்டுல பணபலமாமோ அதிகார பலமோ இருந்தா மட்டும்தான் எல்லாத்தையும் தூக்கி போடுற தைரியம் வரும்..சாதாரண மிடில் க்ளாஸ் அப்பாகிட்ட அதெல்லாம் எதிர்பாக்கலாமா..விஷத்தை வாங்கிட்டு வந்தார்..

ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்..இதோட அந்த அசிங்கத்தை மறந்துரலாம் நிம்மதியா போய்டலாம்நு நிம்மதியானேன்..மூணு பேருமா சாப்பாட்டுல விஷம் கலந்து சாப்ட்டோம்..நாங்கயிருந்தது சிட்டியா இருந்திருந்தா நாங்க செத்து நாத்தம் வந்தப்பறம் தான் என்னனே வந்து பாத்துருப்பாங்க..கிராமமாச்சே அக்கம்பக்கத்துல இருக்குறவங்க கதவுதிறக்காம இருக்குறத பாத்து கதவ உடைச்சு உள்ளே வர மூணு பேரும் கிடந்த நிலைமையை பாத்து ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ண செக் பண்ணி அப்பாவும் அம்மாவும் இறந்துட்டதா கன்பார்ம் பண்ண நேரம்

மூச்சிழுத்து உயிருக்கு போராட ஆரம்பிச்சேன் நான்..ம்ம் சாகுறதுக்கு கூட அதிர்ஷடம் வேணும்னு அப்போதான் தெரிஞ்சுகிட்டேன்..காப்பாத்தி அனாதையா என்ன தவிக்கவிட்டு தற்கொலைக்கு காரணம் என்ன ஏதுநு ஆராய்ச்சி பண்ணி ஒருவழி ஆகி வீடு வந்து சேர்ந்தேன்..தனிமை அதவிட கொடுமையான விஷயம் எதுவும் இருக்குமானு தெரில..பொண்ணுக்கு உயிரைவிட பெருசான கற்பு போனதை நினைச்சு அழறாதா அப்பா அம்மா ரெண்டு பேரையும் தொலைச்சுட்டு நிக்குறத நினைச்சு அழறதா தெரில..ரொம்ப யோசிச்சேன்..அப்பா தன் ஊரைப்பத்தி சொல்லி நிறைய கேட்டுருக்கேன்..

தமிழ்நாட்டுக்கு வரலாம்னு முடிவுபண்ணேன்..எனக்காக அப்பா போட்டுருந்த சேவிங்க்ஸ்ல என் ட்ரீட்மெண்ட் போக பணம் கொஞ்சமிருந்தது..அதை எடுத்துகிட்டு யார் உதவியும் இல்லாம யாருக்கும் தெரியாம இங்க வந்துட்டேன்..என்ன பண்ண எங்க போகனு தெரியாம ரயில்வே ப்ளாட்பார்ம்ல உக்காந்திருந்தேன்..என்ன பாத்த ஒரு சர்ச் சிஸ்டர் தான் அவங்களுக்கு என்ன தோணிச்சோ தெரில வந்து என்கிட்ட பேசினாங்க..எதாவது உதவி வேணுமானு கேட்டாங்க அப்போதைக்கு தங்குறதுக்கு பாதுகாப்பா ஒரு இடம் கிடைச்சா போதும்னு நினைச்சேன்..

என்ன அந்த ஹாஸ்ட்டல சேர்த்து விட்டாங்க..அழுதழுது ஓஞ்சு போனேன்..எங்க வார்டனுக்கு தெரிஞ்சவங்க மால்ல கடை வச்சுருக்குறதா சொல்லி அங்கபோய் பாக்க சொன்னாங்க அப்போதான் நீங்க என்ன முதல்தடவை பாத்தது.எனக்கு அங்க வேலை அந்தளவு பிடிக்கல..லிப்ட்ல உங்கள பாத்தப்போ கொஞ்சம் பயந்துட்டேன்..அதுவும் நீங்களா வேற பேசினப்போ எப்போடா வெளில வருவோம்நு ஆய்டுச்சு..அடுத்து அன்னைக்கு நைட் அந்த பஸ் ஸ்டாப்ல பாத்ததும் அப்படிதான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.