(Reading time: 23 - 46 minutes)

“டயலாக்ஸ்லா ரொம்ப நல்லாயிருக்கு பட் அக்டிடிங் தான் ரொம்ப சொதப்பல்..நெக்ஸ்ட் டைம் பெட்டரா ட்ரை பண்ணு ஓ.கே..எனி டைம் எதுவாயிருந்தாலும் கால் பண்ணு..அஸ் அ ப்ரெண்ட் நா உனக்காக எப்பவுமே இருக்கேன் டேக் கேர்..ஒரு வேளை மனசு மாறினா சீக்கிரமா சொல்லிடு புரியுதா..பை..”என எழுந்து இரண்டடி நடந்தவன் திரும்பி,

“சொல்ல மறந்துட்டேன் செல்வா நல்லாயிருக்கு யாரும் இதுவர என்ன அப்படி கூப்டதில்ல..பை” என கண்ணடித்து சென்றான்..

அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்..தன் இயலாமையை எண்ணி அவளுக்கே அவள்மேல் கோபம் வந்தது…இதன்பின் எக்காரணம் கொண்டும் அவனை தொடர்பு கொள்ளகூடடாது என முடிவெடுத்தாள்..அவன் சம்மந்தப்பட்ட அனைவரையும் தவிர்க்க முடிவெடுத்தாள்..அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை..இப்படியாய் இருபது நாட்கள் கடந்திருக்க அத்தனை நாட்களில் இரண்டு முறை தமிழ் அவளை அழைத்திருந்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை..மெசேஜிற்கும் பதில் அனுப்பாமல் தவிர்த்தாள்..

விஷயமறிந்த ஷாலினி அவனும் வந்திருந்த நேரம் பார்த்து நிர்பயாவை அழைத்தாள்..அழைப்பு நிற்கும் நேரம் அதை அட்டெண்ட் செய்தவள் இறுக்கமாய் ஷாலினி கேட்கும் அனைத்திற்கும் ஒருவரி பதிலில் கத்தரித்தவாறு பேசிக் கொண்டிருந்தாள்..அவளுக்கு தெரியும் ஷாலினியை அவமதித்தால் அது தமிழின் காதுக்குச் சென்றால் அதற்குப்பின் தமிழ் அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று..ஆனால் அவள் பேசுவதை அவனே நேரிய் கேட்டுக் கொண்டிருப்பதை பாவம் அவள் அறியவில்லை..ஓர் எல்லைக்கு மேல் தன்னை கட்டுபடுத்த முடியாமல் கத்த ஆரம்பித்திருந்தாள்..

“ஏன் அக்கா எல்லாருமா சேர்ந்து என்னை இப்படி சித்திரவதை செய்றீங்க..உங்களுக்கும் உங்க அண்ணாவுக்கும் நா என்ன பாவம் பண்ணேன்..கேக்க ஆளில்லனு தான என்னை இப்படி கஷ்டப்படுத்தி பாக்குறீங்க??நா தான் எனக்கு ஒத்துவராதுநு அன்னைக்கே சொல்லிட்டனே விட்ற வேண்டியதுதான..திரும்ப திரும்ப இப்டி பேசி என்னையும் என்ன பெத்தவங்க போன இடத்துக்கே போக வச்சுறாதீங்க உங்கள கெஞ்சி கேக்குறேன் என்ன விட்டுருங்க இதுக்கு மேல என்ன கான்டாக்ட் பண்ணணும்னு நினைச்சீங்க நா என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது..”என இணைப்பை துண்டித்துவிட்டாள்..

இங்கு அனைத்தையும் கேட்டது மட்டுமில்லாது ஷாலினியின் முகமும் வாடியிருப்பதை கண்டவன் கோபத்தின் உச்சியிலிருந்தான்…வெறிப் பிடித்தவனாய் அவளைத் தேடிச் சென்றான்..கோபத்தை அடக்க வழிதெரியாமல் அதை வண்டியின் வேகத்தில் காட்டினான்..அவள் வீட்டிற்கு சென்றவன்  காலிங் பெல் அடிக்க. அவளது ரூம் மேட் ஒருத்தி வந்து கதவை திறந்தாள்..

“நிர்பயா இருக்காளா??நா அவ ப்ரெண்ட்..”

“ஓ..ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் வர சொல்றேன்..”

யாராய் இருக்கும் என வெளியே வந்தவள் அவன் முகத்திலிருந்த கோபத்தை கண்டு ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள்..

“உன்கூட பேசனும் வா என்கூட..”

“எங்க??....”

அவன் முறைப்பில் அதோடு பேச்சை நிறுத்திவிட்டு மற்றவர்களின் கவனம் தன் மேல் இருப்பதை உணர்ந்து அமைதியாய் சென்று தன் ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு அவனோடு சென்றாள்..நேராயாய் தன் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி இறங்கி பதட்டமாய் அவனை பார்த்தவளை பொருட்படுத்தாது சென்று கதவை திறந்து அவளை உள்ளே இழுத்துச் சென்றான்..கதவை பூட்டி விட்டு திரும்பியவன்,

“ஏய் என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..பாக்க ஊமைகொட்டான் மாதிரி இருந்துட்டு ஷாலுகிட்ட அந்த பேச்சு பேசுற??என்ன பாத்தா என்ன பொறுக்கி மாதிரி தெரியுதா?சித்ரவதை பண்றேன் அது இதுநு சொல்ற??கல்யாணம் பண்ண போறவங்களுக்கு முக்கியமா இருக்க வேண்டியது நம்பிக்கை தான்..அது உனக்கு என்மேல நிறையவே இருக்குநு எனக்கு தெரியும் அதனாலதான் கல்யாணப் பேச்சையே எடுத்தேன்..நீ என்னனா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க..ஷாலினி பத்தி என்ன தெரியும் உனக்கு..”

“எங்க ஊர் பக்கத்துல சின்ன கிராமம் அவங்களோடது..ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் இவ ஒரே பொண்ணு..படிப்பு செலவுக்காக கந்துவட்டி வாங்கி அவளை படிக்க வச்சாங்க..கந்துவட்டிகாரங்களோட கொடுமைய பத்தி உனக்கு என்ன தெரியும்???பணம் பணம்னு கடைசி சொட்டு இரத்தம் வரை உறிஞ்சி எடுக்குற அட்டை பூச்சிங்க..அதுவும் வயசு பொண்ணு இருக்குற வீட்ல யோசிச்சு பாரு..அப்படி அவனுஙக கொடுமை தாங்காம ஊரைவிட்டு கிளம்ப கடன்காரங்க கண்ல பட்டுட்டாங்க..

அப்படி ஓடி வரும்போது ஒரு லாரில அடிபட்டு அவ கண்ணு முன்னாடியே ரெண்டு பேரும்..அப்பவும் அந்த நாய்ங்க சும்மா இல்ல கண்ல பட்ட இவளை தூக்கிட்டு போய் நாசம் பண்ண பாத்தாங்க நானும் ஹரிஷும் அப்போதான் லீவ்க்காக ஊருக்கு போய்ருந்தப்போ ஏதோ சத்தம் கேக்குதேநு பாக்கப் போனா நிலைமையை உணர்ந்து அவனுங்கள விரட்டி இவள கூப்டு விஷயம் தெரிஞ்சு அவங்க அப்பா அம்மாவுக்கு கடைசி காரியத்தை பண்ணி…அவ துடிச்ச துடிப்பு இன்னமும் எங்களுக்கு நியாபகம் இருக்கு..ஆனா எல்லாமே ஒரே வாரம்தான்..அதுக்கப்பறம் அவளே வந்து அவ விட்ட படிப்ப கன்டிநியூ பண்ண ஹெல்ப் பண்ண முடியுமாநு கேட்டா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.