(Reading time: 23 - 46 minutes)

ஒரு வேலைக்காக போயிருந்தேன்..அந்த ஆளுக்கு ஒரு 50 வயசு இருக்கும் என்னைப்பத்தி எல்லா டீடெய்லையும் கேட்டுட்டு தனியா இருக்கேன்னு தெரிஞ்சவுடனே எதுக்கும்மா வேலைக்கு போய் கஷ்டபடுற என்கூட வந்துரியானு கேட்டான்..பொண்ணுங்கனாலே வெறும் சதையா மட்டும் தான் பாதி பேருக்கு தெரியுது..முக்கால் வாசி ஆம்பளைங்க தங்களுக்கு ஏத்த சுச்சுவேஷன்காக தான் காத்திருக்காங்க..இந்தமாதிரி யாராவாது சிக்கினா அதோட அவங்க லைப் முடிஞ்சுது..நா எல்லாரையும் தப்பா சொல்லல..ஆனா தப்பு பண்றாவங்க எல்லாருமே சூழ்நிலைக்காக காத்திருந்துதான் தப்பு பண்றாங்க..

அங்க நடந்ததை நினைச்சு நொந்துபோய் உக்காந்திருந்தப்போ தான் நீங்க வந்து பேசினீங்க அவ்ளோ நேரம் அடக்கின அழுகை வெளியே வந்தது..நீங்களும் தப்பானவர்தானோனு பயந்து விலகிப் போனேன்..ஆனா போலீஸ்னு தெரிஞ்சப்போ கொஞ்சம் நிம்மதி ஆச்சு..அதுவும் அலட்டிக்காம ஆட்டோ வரசொல்லி பத்திரமா விட சொன்னப்போ முதல்தடவையா நல்லவரை தப்பா நினைச்சுட்டோமேநு பீல் பண்ணேன்..

அதுக்கப்பறம் நெட்ல உங்களைப்பத்தி சர்ச் பண்ணி உங்க நம்பர் எடுத்து உங்களை கான்டாக்ட் பண்ண முடிவு பண்ணேன்..வேலையில்லாம என்னால ரொம்ப நாள் இருக்க முடியாது..அதே நேரம் எல்லார்கிட்டேயும் போய் என்னைப்பத்தி விளக்கவும் பிடிக்கல..சோ உங்களமாதிரி ஒருத்தர் மூலமா கிடைக்குற வேலைல பாதுகாப்பும் இருக்கும்னு நம்பிதான் உங்கள நேர்ல பாக்க வந்தேன்..அதுக்கப்பறம் நாம மீட் பண்ணது எல்லாமே ஒரு கோ இன்ஸிடன்ஸ்தான்..என பெருமூச்சுவிட்டவள்,

இப்போ சொல்லுங்க நா எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியும் அதுவும் இந்தமாதிரியான கூட்டு குடும்பத்துல நா..எனக்கு அந்த தகுதி கிடையாது..இப்போகூட நா சாகுறவர எனக்குள்ளேயே போட்டு புதைக்க நினைச்ச விஷயத்தையெல்லாம்  உங்ககிட்ட ஏன் சொல்றேன்னு எனக்கு தெரில..ஆனா எனக்காக எவ்வளவோ பண்ணிட்டீங்க..இதுக்கு மேலேயும் காரணத்தை சொல்லாம உங்கள அலையவிட எனக்கு விருப்பமில்ல..ப்ளீஸ் செல்வா இந்த நொடியோட இப்படி ஒருத்தி உங்க லைப்ல வந்ததையே மறந்திருங்க..இவ்ளோ நல்ல மனுஷனான உங்களுக்கு தகுதியானவ நா கிடையாது..சாரி..நா வரேன்..ஷாலினி அக்காகிட்ட நா சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க என்றவாறு வெளியே செல்பவளை தடுக்கக் கூட தோன்றாமல் சிலையென அமர்ந்திருந்தான் தமிழ்ச்செல்வன்..

டுத்த இரண்டு நாட்களுக்கு நிர்பயாவிற்கு தமிழிடமிருந்து அழைப்போ மெசேஜோ  எதுவும் வரவில்லை இதுதான் அவள் எதிர்பார்த்தது எனினும் ஏதோ ஓர் ஓரத்தில் மனம் அவனையே நாடியது..அதுவரை அவன் ஒருமுறைகூட அவளிடம் பரிவாய் பேசியதில்லை எனினும் அவனின் அந்த கோபமும் மிரட்டலும்கூட ஒருவித அன்பின் வெளிப்பாடாய் இருப்பதாய் தோன்றும்..ஏதேதோ எண்ணியவாறு ஆபிஸின் கணிணியை வெறித்துக் கொண்டிருந்தவள் தன் போனின் அழைப்பில் நினைவிற்கு வந்தாள்..திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவளுக்கு ஒரு நொடி இதயத்துடிப்பு காதருகில் கேட்பதாய் இருந்தது..அழைப்பை ஏற்காமல் அப்படியே கையில் வைத்திருக்க அடுத்ததாய் மெசேஜ் நோட்டிபிகேஷன் வர எடுத்து படித்தாள்..”

“ஐ அம் வெய்டிங் ஔட் சைட் ..கம் டவுண்..”தமிழ்..

என்ன செய்வதென புரியாமல் பெர்மிஷன் சொல்லி கீழே வந்தவள் பேச வாயெடுக்க அதற்குள் அவனே,

“செம பசில இருக்கேன் இப்போ எதுவும் பேசாத ஏறு சீக்கிரம் “என பைக்கை ஸ்ட்டாட் செய்ய ஒன்றும் கூறமுடியாமல் அவனோடு சென்றாள்..ஒ எம் ஆரில் ரிசார்ட்டோடடு கூடிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவன் வேண்டியவற்றை ஆர்டர் செய்துவிட்டு அவளை பார்க்க கஷ்டப்பட்டு பயத்தை மறைத்து அவனை முறைத்தாள்.

“சத்தியமா செட் ஆகல..சரி சொல்லு ஆர்டர் பண்ணது போதுமா வேற எதுவும் சாப்டுறியா???”

“என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது??நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க??கேக்க ஆள் இல்லனு தான..”

“ஏ போதும் ஒரே டயலாக் எவ்ளோ நாள்தான் சொல்லிட்டு இருப்ப??இனி இந்த டயலாக் உனக்கு தேவையும் படாது ஏன்னா கேக்குறதுக்கு உன் புருஷன் நா இருக்கேன் புரிஞ்சுதா???”

அப்பட்டமான அதிர்ச்சிகண்ணில் நீராய் வெளிவர துடிக்க அதற்குள் ஆர்டர் செய்தவை வந்துவிட அவர்முன் பேச விரும்பாமல் அமைதியானாள்..அவனோ வந்த உணவை தனக்கும் அவளுக்குமாய் தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தான்..

சாப்டு பேசலாம் என்றவாறு அவள் உணார்ச்சியை கட்டுபடுத்த நேரம் கொடுத்தான்..பொறுமையாய் சாப்பிட்டு முடித்தவன் அவளிடம்,

“இப்போ சொல்லு கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்??நீ சொல்றத பொறுத்து நா வீட்ல பேசுறேன்..”

“நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா??என்னைபத்தி தெரிஞ்சும்..முதல்ல இத உங்கவீட்ல சொன்னா எவ்ளோ கேவலமா நினைப்பாங்கனு உங்களுக்கு புரியுதா??”

ஒரு ஆழ்மூச்செடுத்தவன்,” இங்க பாரு என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரிஞ்சா போதும் உன் கடந்த காலத்தைபத்தி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல அது என் அப்பா அம்மாவாவே இருந்தாலும்..அது என் கடமையும் கூட அதைபத்தி நீ யோசிக்காத புரியுதா..அண்ட் நீ என்ன நினைக்குறனு எனக்கு தெரியும் ரெண்டு நாளா நீ சொன்னதபத்தி யோசிச்சு இரக்கப்பட்டு நா இத சொல்றதா நினைக்குற அப்படிதான??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.