(Reading time: 23 - 46 minutes)

அக்சுவலா இரண்டு நாளா ஒரு டைட் வொர்க்ல மாட்டிகிட்டேன்.. நீ அன்னைக்கு கிளம்புறவர எனக்கு உன்னை சமாதானப்படுத்தகூட தெரியாம தான் நா இருந்தேன்..ஒரு போலீஸா எத்தனையோ பேர் லைவ்ல நடந்தத பாத்திருந்தாலும் நம்மளோட இருக்குற ஒருத்தர்னு யோசிச்சு பாத்தா..அதை ஏத்துக்க அந்த டைம் தேவைப்பட்டது உண்மைதான்..ஆனாஅடுத்த ஒன் அவர்ல அந்த தாட்ஸ்ல இருந்து நா வெளில வந்துட்டேன்..

இரக்கப்பட்டோ தியாகம் பண்றதா நினைச்சோ நா இத பண்றதாயிருந்தா இப்போ நம்ம நாடு இருக்குற நிலைமைக்கு ஆயிரம் பொண்ணுங்ககிட்ட என்ன கல்யாணம் பண்ணிகுறீங்களாநு கேக்கனும்..இது உன்மேல மட்டுமே இருக்குற ஒரு உணர்வு அதை வேற யார்கிட்டேயும் காட்ட முடியாது..ஒரு வேளை ஒரு நாலு அஞ்சு வருஷம் நாம லவ் பண்ணிட்டு இருந்து அப்போ உனக்கு இப்படி ஒண்ணு நடந்திருந்தா..உன்னை விட்டுட்டு போய்ர முடியுமா..நீ எனக்கானவனு முடிவு பண்ணப்பறம் உனக்கு என்னவானாலும் ஆதரவா இருக்க வேண்டியது நான்தான்..அததான் இப்பவும் பண்றேன்..எனக்கு தெரிய வேண்டியது கல்யாணவேலைய ஆரம்பிக்குறதுக்கு உன்னோட சம்மதம் அவ்ளோதான்..”என கேள்வியாய் அவளை பார்க்க

நெருப்பில் நிற்பவளாய் மனதளவில் துடித்துக் கொண்டிருந்தாள்..”எல்லாம் சரி உங்களுக்கு என்னை பிடிச்சமாதிரி எனக்கும் உங்கள பிடிக்கனும் தான..அதைப்பத்தி யோசிக்கவே இல்லையே நீங்க..”என குரல் நடுங்க கேட்டவளைப் பார்த்து சிரித்தவாறே,

தன் சேரின் நுனியில் அமர்ந்து டேபிளில் கை வைத்தவன்..”டோண்ட் பீ சைல்டிஷ்..என்னை பிடிக்காமயா இப்படி என்னோட வந்து உக்காந்து பேசிட்டு இருக்க??சரி சொல்லு உனக்கு உண்மையாவே வேற யாராவது ஹெல்ப் பாண்ணிருந்தா இப்படி அவங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு அவங்க கூட போவியா சொல்லு..அந்த கம்ப்பர்டபிள் சோன் எல்லாருக்கும் எல்லார்கிட்டேயும் வராது நிரு..புரிஞ்சுக்கோ..இப்போ உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்றேன் உன் கழுத்துல தாலி கட்ற அடுத்த செகண்ட் உன்னோட கடந்தகாலம்ங்கிற ஒண்ண அடியோடு தூக்கி போட்டுருவேன்..

இதனால பின்னாடி ப்ரச்சனை வரும்னோ உன்னை நா ஏமாத்திடுவேன்னோ 1% கூட உனக்கு பயம் வேண்டாம்..இனி நீ ஒரு அழகான குடும்பத்தோட குட்டி இளவரசி அவ்ளோதான்..நம்ம வீட்ல  எல்லாரும்  குட்டி காவியாவ எப்படி பாக்குறாங்களோ அப்படிதான் உன்னையும் பாப்பாங்க..வாழணும்ங்கிற ஏக்கம் எப்பவுமே உன் கண்ல இருக்கு அதை மறைக்க நினைச்சாலும் என்கிட்ட உன்னால மறைக்க முடியாது..தைரியமா என் கைபிடிச்சு உனக்கு நீயே போட்டுருக்க சுவரை உடைச்சு வெளிய வா உனக்கான லைவ் இது இல்ல..நீ பார்க்க வேண்டிய அழகான விஷயங்கள் வாழ்க்கைல நிறைய இருக்கு..”என அவள் கையை எடுத்து தனக்குள் வைத்து அழுத்த..அத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை வெள்ளமாய் வெடித்து வெளியேறியது..

அதை எதிர்பார்த்திருந்தவன் அவள் கையை விடாது எழுந்து சென்று அவளருகில் இருந்த சேரில் அமர்ந்து தன் தோள் சாய்த்துக் கொண்டான்..”ரிலாக்ஸ் நிரு..அம் ஆல்வேஸ் தேர் பார் யு..எவ்ளோ அழனுமோ அழுதுடு பாறத்தை குறைக்க கண்ணீர் மட்டும்தான் வழி..”என மென்மையாய் தலையை வருட..சில நிமிடங்களில் சூழ்நிலை உணர்ந்தவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்..

“இதெல்லாம் ஒத்து வராது செல்வா வீணா ஆசையை வளர்த்து என்னையும் குழப்பாதீங்க..ப்ளீஸ் நா எங்கேயாவது போய்ட்றேன்..விட்டுருங்க..”

“உன்னை பாத்த இந்த ரெண்டு மாசத்துல ப்ரெண்ட்னு சொன்னப்பவே உனக்காக என்னால முடிஞ்ச அத்தனையும் பண்ணணும்னு நினைச்ச எனக்கு இப்போ பொண்டாட்டியா ஏத்துக்க போறப்போ எவ்ளோ செய்வேன்..அப்படியெல்லாம் உன்னை எங்கேயும் விட முடியாது..இந்த ஜென்மத்துல உன்தலையெழுத்து என்னோடதான் இருக்கு இனி அதை எழுதினவனே நினைச்சாலும் மாத்தமுடியாது புரியுதா எப்போ நா வீட்ல பேசலாம்னு யோசிச்சு சொல்லு..லூசுதனமா வேற எதாவது பண்ணலாம்னு நினைக்காத என்னைமீறி எதுவும் நடக்காது..வா போலாம்” என முன்னே செல்பவனை ஒன்றும் கூறாமுடியாமல் தவித்து நின்றாள்..

ஹாய் ப்ரெண்ட்ஸ்..ரொம்பவே மனசு பாறத்தோட எழுதின எபி இது..அந்த சூழ்நிலைல இருந்த பெண்களுக்கு எவ்ளோ கொடுமையா இருந்துருக்கும்நு நினைக்கவே மனசு பதறுது..இருந்தும் இதன் பிறகான நிர்பாயாவின் வாழ்க்கை ரொம்பவே அழகாதான் இருக்கபோகுது.. smilesmile வழக்கம்போல் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.. smile

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.