(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்

உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்

டுத்த ஒரு வாரமும் அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை..அவளுக்கு தனிமையில் யோசிக்க நேரம் கொடுத்தான்..அதே நேரம் அவளை ரகசியமாய் நோட்டமிட்டு கொண்டு தான் இருந்தான்..வழக்கம்போல் அவள் ஆபீஸ் செல்வதும் வருவதுமாய் இருப்பதை தெரிந்து மனசு லேசானது..வேறு எந்த முடிவும் எடுக்க மாட்டாள் என்ற உறுதியே அப்போதைக்கு அவனுக்கு போதுமானதாய் இருந்தது..நிர்பயாவோ இதைப்பற்றி யாரிடம் பேசவென்று தெரியாமல் தனக்குள்ளேயே குழம்பித் தவித்தாள்…அதற்கு விடையும் அவளைத் தேடியே வந்தது..

அன்று விடுமுறையாய் இருக்க வழக்கம்போல் தன் மனக்கவலையை இறக்கி வைக்க அந்த இறைவனைத் தேடி கோவிலுக்குச் சென்றாள்..தரிசனத்தை முடித்து பிரகாரத்தில் அவள் அமர,நிபயா..நிபயா என குழந்தையின் குரல் கேட்டு திரும்ப அங்கு தமிழின் அண்ணன் மகள் காவியா அவள் தாயோடும் பாட்டியோடும் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..

சிநேகமாய் அவர்களைப் பார்த்து சிரித்தவள் குழந்தையை கையில் தூக்கி முத்தமிட ராஜி அவளிடம்,”சரியான வாலு நாங்ககூட உன்னை கவனிக்கல இவதான் பாத்து கூட்டிட்டு வந்தா “,என்றவாறு அங்கே அமர்ந்நதனர்..

“எப்படியிருக்கீங்க ஆன்ட்டி??நீங்க எப்படியிருக்கீங்க அக்கா??”

“எங்களுக்கென்னம்மா நல்லாயிருக்கோம்..நீ எப்படியிருக்க அதுக்கப்பறம் வீட்டுக்கு வரவேயில்ல.”.

“அன்னைக்கு வந்தப்போ நீங்க இல்லயே..”,என்றவள் அப்படியே வாயை மூடிக் கொள்ள ராஜி மாமியாரை அர்த்தமுள்ள பார்வை பார்த்து சிரித்தாள்..

“போன வாரத்துல சொல்றியா நாங்க எல்லாரும் திருப்பதி போய்ருந்தோம்மா..இரண்டு நாள்ல வந்துட்டோம்..அங்கிளும் என் பெரிய பையனும் ஊருக்கு கிளம்பிட்டாங்க..நாங்க தான் பாப்பாக்கு லீவ்னு கொஞ்சநாள் இருக்கலாம்னு இருக்கோம் அடுத்தவாரம் கிளம்பிடுவோம்..”

“ஓ..அப்படியா ஆன்ட்டி”, என்றவளின் மனதில் வேகமாய் ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்த முடிவு செய்தாள்..செல்வாவின் வாழ்க்கைக்கு இதுதான் நல்லது என எண்ணியவள்அவரிடம்,

”ஆன்ட்டி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..”

“என்னம்மா சொல்லு..”

“அது வந்து..உங்க பையன் கல்யாணத்தை பத்தி..தப்பா எடுத்துகாதீங்க..”

“அட கல்யாண பொண்ணே அதபத்தி பேசும்போது தப்பா நினைக்க என்ன இருக்கு??என்ன அத்தை சரி தான??”,என ராஜி சிரிக்க..

“அக்கா..”

“ஏன்ம்மா பயப்படுற தமிழ் எங்ககிட்ட ஏற்கனவே சொன்னான் நீதான் இன்னும் சம்மதம் சொல்லலனு சொன்னான்..போலீஸ்காரனாச்சேனு பயப்படுறியா??”

“அய்யோ ஆன்ட்டி அதெல்லாம் இல்ல..அவரை மாதிரி ஒரு போலீஸை பாக்குறது ரொம்ப கஷ்டம்..அதில்ல ப்ரச்சனை..ஆனா நா உங்க பையனுக்கு ஏத்தவ இல்ல அதை சொல்லதான்..”

“ஏன்ம்மா அப்படி சொல்ற உனக்கு என்ன கொறச்சல் அழகில்லயா அறிவில்லயா..ஏன் இப்படி சொல்ற..”

“அதுமட்டும் இருந்தா போதுமா ஆன்ட்டி...ஒரு பொண்ணுக்கு எது முக்கியமோ அதையே இழந்தப்பறம் இது ரெண்டைவச்சு என்ன ஆன்ட்டி பண்றது”, என அழத்தொடங்க..ராஜியும் சரோஜாவும் அதிர்ச்சியாய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள..ராஜி தான் தன்னை தேற்றியவாறு அவளிடம் “நிர்பயா நீ என்ன சொல்ற???”

“ஆமாக்கா நா காட்டுல இருக்குற கள்ளிச்செடி என்னை போய் துளசிச் செடியா மாத்த நினைக்குறாரு உங்க தம்பி..அது நடக்க முடியாத ஒரு விஷயம்னு அவருக்கு புரிய மாடேங்குது..நீங்களாவது அவருக்கு புரிய வைங்க ப்ளீஸ்..”

“இந்த விஷயம் தமிழுக்கு????”

“தெரியும் ஆன்ட்டி சொல்லிட்டேன் ஆனாலும் அவரு முடிவ மாத்திக்க மாட்றாரு..நீங்க எடுத்து சொல்லுங்க ஆன்ட்டி நா வரேன்”, என்றவாறு விறு விறுவென வெளியே சென்றுவிட்டாள்..

பெண்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை..இபப்படி ஒரு கொடுமையை அவர்கள் அச்சிறிய பெண்ணின் வாழ்வில் எதிர்பார்த்திருக்கவில்லை..வீட்டிற்குச் சென்றவர்கள் தமிழுக்காய் காந்திருந்து அவனிடம் விஷயத்தை கேட்க முதலில் மழுப்பியவன் நிர்பயாவே கூறியது தெரிந்தபின் வேறு வழியின்றி மேலோட்டமாயாய் விஷயத்தை கூறினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.