(Reading time: 19 - 38 minutes)

நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ராஜிக்கும் தமிழுக்குமே கண்கலங்கி விட்டது..யாரும் யாருக்கும் ஆறுதல் கூறும்படியான நிலையில் இல்லை..சிறிது நேரத்தில் சரோஜாவே அவளை தேற்றி அமர வைத்து,”இன்னொரு முக்கியமான விஷயம் இந்த விஷயம் நம்ம நாலு பேரை தாண்டி யாருக்கும் தமிழ் அப்பாக்கு கூட தெரியகூடாது..புரியுதா??”

“ஆன்ட்டி..அது..”

“இங்கபாரு இது என்னோட முடிவு..அவர் இத தப்பா எடுத்துப்பாரோனு நா மறைக்க நினைக்கல..அவரையோ வெற்றியையோ பாக்கும்போது உனக்கோ உன்னை பாக்கும்போது அவங்களுக்கோ எந்த தர்மசங்கடமும் வரகூடாது அதுக்காக தான் சொல்றேன்..ராஜி எங்க வீட்டு மூத்த பொண்ணுணா நீ எங்க வீட்டு கடைசி பொண்ணு அவ்ளோதான்..ராஜி நீயும்..”,

“அத்தை இந்த விஷயத்துல பொண்ணுக்கு பொண்ணே எதிரியா இருந்தா வாழறதுக்கே அர்த்தமில்ல அத்தை..நா இதை இந்த நிமிஷத்தோட மறந்துட்றேன்..நீங்க ஆக வேண்டியத பாருங்க..”

“அம்மா எல்லாம் சரி இன்னமும் சம்மதம் சொல்ல வேண்டியவங்க வாயத் தொறக்கலயே “,என தமிழ் அவளை நேர்ப்பார்வை பார்க்க..

அவள் ஒன்றும் கூறாமல் அமர்ந்திருந்தாள்..அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணியவர்களாய் ராஜியும் அவரும் வெளியே சென்றுவிட,அவளருகில் சிறிதுஇடைவெளிவிட்டுஅமர்ந்தான்..சட்டென எழுந்தவள் சென்று ஜன்னல் அருகில் நின்றுகொள்ள அவனும் சென்றான்..

“எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்???”

தவிப்பாய் அவனை பார்த்தவள்,” வேண்டாம் செல்வா இது எனக்கு வேண்டாம் “,என கண்கலங்கி பின்னே நகர தன் கையை நீட்டி அவள் கையை பிடிக்க அவன் முன்னேற,

வேண்டாம் செல்வா..இன்னும் அழுகை நிற்கமால் வழிந்தது.

இரு கைகளையும் தன் கரங்களால் பிடித்தான் தன்னை மறந்து அவன்மேல் சாயப் போனவள் மீண்டும் அவனிடம் விழிகளால் கெஞ்ச அவள் பின்தலையை பிடித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்..அவன் சட்டையை பிடித்தவள் அப்படியே கதறி தீர்த்தாள்..அவனுக்குமே கண்ணில் நீர் கோர்த்திருந்தது..அவளாய் அழுகையை நிறுத்தும் மட்டும் பொறுமை காத்தவன் அதன்பின் அவளை பிரித்தெடுத்து கண்களை துடைத்து ,”இனி நா இருக்கேன் உனக்கு வேற எதையும் யோசிக்காத புரியுதா..??போ போய் முகத்தை துடைச்சுட்டு வா”, என உள்ளே அனுப்பி வைத்தான்..

அவர்கள் இருவரும் வந்தவுடன் இருவரிடமும் விடைபெற்று அவனைப் பின் தொடர்ந்தாள்..நேராய் ஒரு துணிக்கடை வாசலில் வண்டியை நிறுத்த என்ன கூறவென தெரியாமல் திருதிருவென முழித்தவளை உள்ளே வருமாறு ஜாடைகாட்டிச் சென்றான்..பெண்கள் பிரிவில் சென்று அமர்ந்தவன் தினசரி உபயோகத்திற்கு சுடிதாரும் இரண்டு புடவையும் எடுத்துக் கொள்ளுமாறு கூற..

“அதெல்லாம் எதுக்கு வேண்டாமே என்கிட்ட இருக்குறதே போதும்..”

“ம்ம் உன்கிட்டதான அப்படியே நிறைய வச்சுருக்குறமாதிரி பேசாத அழுது வடிஞ்சமாதிரி நாலு ட்ரெஸ்..ஒழுங்கா எடுத்துக்கோ இது எப்பவோ நினைச்சதுதான் ஆனா எப்பவுமே ஒரு பொண்ணுக்கு ட்ரெஸ் வாங்கி தர்றதாயிருந்தா ஒண்ணு அவ அப்பா அண்ணணா இருக்கனும் இல்ல புருஷனா இருக்கனும்..அதனாலதான் எதுவும் சொல்லாம விட்டுட்டேன்..எடுத்துட்டு வா நா வெயிட் பண்றேன் “,என போனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்..

அப்போதும் மனசு ஒரு நிலையிலில்லாமல் ஏனோதானோவென சுடிதார்களைப் பார்க்க அங்கிருந்த விற்பனை பெண்ணோ,”என்ன மேடம் எங்க வீட்டுகாரங்கலா நாங்க ட்ரெஸ் எடுக்க போறோம்னு சொன்னாலே மிரண்டு போவாங்க..சார் உங்க விருப்பத்துக்கு எடுக்க சொல்லியும் நீங்க இப்படி விருப்பமே இல்லாதமாதிரி பாத்துட்டு இருக்கீங்க”, என சிரிக்க பதில் கூற தெரியாமல் சிரித்து வைத்தவள் பத்து நிமிடத்தில் தேவையானவற்றை எடுத்து பிலிங்கிற்கு வந்தாள்..அதை வாங்கிக் கொண்டு அவளை வீட்டில் இறக்கி விடச் சென்றவன் அவளே சாவி கொண்டு திறப்பதை பார்த்து”,யாரும் இல்லையா??”

“இல்ல எல்லாரும் வெளில போறதா சொன்னாங்க அதான் என்கிட்ட சாவி குடுத்துட்டு போய்ட்டாங்க..”

ஓ என்றவன் பைக்கை நிறுத்திவிட்டு அவளோடு வர ,”கொஞ்சம் தண்ணி வேணும் குடிக்க..”

இதோ எடுத்துட்டு வரேன் என்றவள் உள்ளே செல்ல வாசலை ஒட்டிய ஹாலில் அமர்ந்தான்..டம்ளரை வாங்கி பருகியவன்,”கொஞ்சம் உக்காரு நா உன்கிட்ட பேசனும் “,என எதிரிலிருந்த சேரை காட்ட மறுபேச்சு பேசாமல் அமர்ந்தாள்..

“ஒண்ணுமில்ல ஜஸ்ட் சொல்லனும்னு தோணுது..இதுவர நீ இப்படி அமைதியா சோகமா இருந்ததெல்லாம் போதும்..இனி எல்லாரையும் மாதிரி சகஜமா இருக்க ட்ரை பண்ணு..மனசை சந்தோஷமா வச்சுக்க ட்ரை பண்ணு..அண்ட் அட்லீஸ்ட் என்கிட்ட மட்டுமாவது நீ நீயா இருக்க முயற்சி பண்ணு..ஸ்கூல் டிச்சர பாக்குறமாதிரி பயப்படுறது இல்ல விலகி போறது இதெல்லாம் வேணாம்..அதிகபட்சம் அன்னைக்கு காபி ஷாப்ல என்னைப் பாத்தவுடனே கர்ட்டஸிக்காக ஒரு சிரிப்பு சிரிச்சே அது போதும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.