(Reading time: 19 - 38 minutes)

இதெல்லாமே நம்ம கல்யாணம் நடக்குற வர நீ மாத்திக்க வேண்டியது..அதுக்கப்பறம் உன்னை முழுசா மாத்ற பொறுப்பு என்னோடது..அண்ட் நா கொஞ்சம் இப்படிதான் ஒரு மாதிரி ரஃவ்வாவே இருந்து பழகிட்டேன் இனி கண்டிப்பா மாத்திக்க ட்ரை பண்றேன்..சரி நா கிளம்புறேன்..எதுவாயிருந்தாலும் கால் பண்ணு சரியா..நா அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு அப்டேட் சொல்றேன்..பை..”அனைத்திற்கும் சிறு குழந்தையாய் தலையாட்டி வைத்தாளே தவிர வேறெதுவும் கூறவில்லை..

தன் வீட்டிற்கு வந்தவன் சரோஜாவைத் தேட உள் அறையில் இருப்பதை உணர்ந்து சென்று அவர் மடியில் படுத்துக் கொண்டான்..

“என்னடா கொஞ்சல் அதிகமா இருக்கு??”

“ம்மா நீ எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்கநு உனக்கு புரியுதா??அதுவும் நம்மள மாதிரி நடுத்தற குடும்பத்துல ஒரு அம்மாவா நீ எடுத்த டெஸிஷன் பெரிய விஷயம்மா..”

அப்படி எதுவுமேயில்ல தமிழு..ஒரு பொண்ணா இதை செய்றதுல தப்பு இல்லனு தோணிச்சு அதான் பண்ணிணேன்..எல்லா காலத்துலயும் பெண்களுக்கு எதிரா எதாவது இருந்துட்டுதான் இருந்துருக்குப்பா..அந்தகாலத்துல உடன்கட்டை ஏறுதல்ங்கிற பேர்ல புருஷன் போய்ட்டா அந்த பொண்ணையும் சாகடிக்குறது..அடுத்த அடுத்த காலத்துல புருஷனை இழந்துட்டா வெள்ளைபுடவை குடுத்து ஒரு ஓரமா உக்கார வச்சாங்க..இதெல்லாம் ஒரு சமூகமே சேர்ந்து இது இப்படிதான்னு முடிவு பண்ணி வச்ச விஷயங்கள் இதையே அந்தகாலத்து பெண்கள் தூக்கி எறிஞ்சு மாத்திருக்காங்க..

அப்படியிருக்கும் போது இப்போ நடக்குற இதெல்லாம் என்னஅசிங்கம்டா..ஆண் இனமே வெட்கி தலை குனிய வேண்டிய யுகம்டா இது..லவ் லவ்னு டார்ச்சர் பண்ணாங்க அதுக்கப்பறம் அந்த பொண்ணு ஒத்துக்கலனா அவ மேல ஆசிட் அடிச்சாங்க அதுக்கப்பறம் எனக்கில்லாதவ யாருக்கும் கிடைக்க கூடாதுநு கொலை பண்ணவே துணிஞ்சாங்க..இப்போ வன்முறைங்கிறத தாண்டி அவங்க பரம்பரைக்கே பாவத்தை பண்றாங்க..

முன்னப் பின்ன தெரியாத பொண்ணு மேல கை வைக்குற உரிமைய யாரு குடுக்குறாங்க இவங்களுக்கெல்லாம்..இவன் பண்றத தான நாளைக்கு இவனோட அம்மாவோ அக்கா தங்கையோ ரோட்ல போறப்போ மத்தவங்க பண்ணுவாங்க..அந்த எண்ணம் ஏன்டா வரமாட்டேங்குது..இவனுங்க திமிரு எடுத்து பண்ற தப்புக்கு தண்டனை வாழ்க்கை முழுசும் பாதிக்கப்பட்ட அந்த பொண்ணுக்கா??

இந்த நிலைமை மாறணும்டா அவங்க மாத்துவாங்க இவங்க மாத்துவாங்கனு வேடிக்கை பாக்குறதவிட நாமளே ஆரம்பிச்சோம்ங்கிற திருப்தி நமக்கு கிடைக்கும் அது போதும்டா…அந்த பொண்ணு நேத்து கோவில்ல விஷயத்தை சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம அதே நேரம் உன் வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு தன்னைப்பத்தின உண்மையை போட்டு உடைச்சப்போ மனசு கனத்து போச்சுடா..உடலளவிலேயும் மனசளவிலேயும் எவ்வளவு ரணம் இருந்திருக்கும்..

நெஞ்சே பதறது தமிழு..இனி அவளுக்கு எல்லாமுமா இருந்து அவளை நல்லா பாத்துக்கோடா..அவ குடும்ப வாழ்க்கைக்கு எல்லா விதத்திலேயும் தயாராக நாள் ஆகும்டா..நீதான் புரிஞ்சு அவளுக்கு ஆதரவா இருக்கனும்..எந்த ஒரு நேரத்துலயும் அந்த பொண்ணு நாம இங்க வந்திருக்க கூடாதோநு நினைச்சுர கூடாது..அதுதான் உன் வாழ்க்கைல பெறப்போற மிகப் பெரிய வெற்றி..சரியாப்பா??

அம்மா..உனக்கு புள்ளையா பொறந்ததுல நா ரொம்ப ரொம்ப பெருமை பட்றேன்ம்மா..நீ சொன்ன எல்லாத்தையும் நா கண்டிப்பா புல்பில் பண்ணுவேன்..தேங்க் யூ சோ மச்..நீ அப்பாகிட்ட பேசும்மா..ரொம்ப நாள் தள்ளி போட வேணாம்..அவ எப்போ எப்படி மாறுவானே தெரியாது.என மேலும் தேவையானவற்றை அவரோடு பேசிக் கொண்டிருந்தான்..

அன்று இரவு படுக்கச் சென்றவன் தற்செலாய் மொபைலை எடுக்க அவளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பத் தோன்ற ஹாய் என அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்..பத்து நிமிடம் களித்து சொல்லுங்க,என பதில் மெசெஜ் வந்தது..

“சாப்டியா??என்ன பண்ற??”

“ம்ம் சாப்டேன்..புக் படிச்சுட்டு இருக்கேன்..”

“ஓ..புக்ஸ் படிப்பியா??என்ன மாதிரியான புக்ஸ்??”

“தமிழ் பேச தான் வரும் படிக்க அவ்ளோ புல்லா வராது..இங்கிலீஷ் நாவல்ஸ் தான் படிப்பேன்..இப்போ ரூம்மேட் ஒரு நாவல் குடுத்தாங்க அதை படிச்சுட்டு இருக்கேன்..”

“ம்ம்ம்..”

“உங்ககிட்ட நா ஒண்ணு கேக்கவா???”

“என்ன சொல்லு??”

“கண்டிப்பா இதெல்லாம் தேவையா செல்வா??நீங்க ஏன் இன்னொரு தடவை உங்க முடிவை மாத்திக்கிறத பத்தி யோசிக்க கூடாது..”

இதழோரம் தோன்றிய சிரிப்போடு பதில் அனுப்பினான்..”யா கண்டிப்பா யோசிக்கனும் நீ இப்படியே பேசிட்டு இருந்தா எவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணணும்னு யோசிக்கனும்..”

அதற்கு பதில் வராமலிருக்க,” என்ன ஆளக் காணும்??”,என இவனே அனுப்பினான்..

“ம்ம் இருக்கேன் சொல்லுங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.