(Reading time: 19 - 38 minutes)

ஏனோ நேரில் அவனிடம் அவள் பேசுவதைவிட இதில் இன்னமும் இலகுவாய் பேசுவதாய் அவனுக்கு தோன்றியது..இனி தினமும் இதை செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் மேலும் பேச்சை வளர்த்தான்..

இரவு வெகுநேரத்திற்கு பின் உறங்கியதால் கண்சிவக்க தயாராகி வந்தவனை பார்த்த ராஜி தொண்டை யை செருமியவாறு

“,ம்ம் என்ன தம்பி கண்ணெல்லாம் சிவந்துருக்கு நைட்டெல்லாம் தூங்கல போல..”என சிரிக்க,அவர் குடுத்த காபியை கையிலெடுத்தவாறே,

“அட நீங்க வேற அண்ணி அதே புராணம்தான் போன்லயும் இது சரி வராது நீங்க யோசிங்கநு..ஷப்பா இந்த பொண்ணுங்கள சமாளிக்குறது கஷ்டமாதான் இருக்கு இப்போ தான் தெரியுது அப்பாவும் மாறனும் மறுபேச்சு பேசாம ஏன் தலையாட்றாங்கனு..”

“தம்பி நீங்க டைம் கிடைக்குறப்போ அவளை வெளில எங்கேயாவாது கூட்டிட்டு போங்களேன்..கொஞ்சம் பாசிட்டிவ்வா பேசுங்க..அவளுக்கும் அதுதான் தேவை இப்போ..”

“ம்ம் அப்படிங்குறீங்க..லேடிஸ் சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும் பண்ணிட்றேன்”, என்று கூறி சிரித்தவாறே வேலைக்கு கிளம்பினான்..அன்று முழுவதும் அந்த சிந்தனையே தலையில் சுற்றிக் கொண்டிருக்க அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் மாலை வேளையில் அவளை அழைத்தான்.

“ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டியா??”

“இல்ல இப்போதான் கிளம்ப போறேன்  என்னாச்சு??”

“சரி ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு நா வரேன் பை..”

சொன்னபடியே அடுத்த பத்தாவது நிமிடம் அவள் அலுவலக வாசலுக்குச் சென்று அவளை அழைத்தான்..அவனருகில் வந்தவள் மெதுவாய்..

“வந்து..”

“என்னாச்சு??”

“இல்ல நானே போய்க்குறேன்..”

“ஏன் என்னாச்சு??”

“அது அது ரூம் மேட்ஸ் யாராவது பாத்தா..”

“பாத்தா???”

கிண்டல் பண்ணுவாங்க..லேசாய் அவள் முகம் சிவந்ததை கண்டவனின் முகத்தில் புன்னகை அரும்பியது..

“ஏன் என்ன சொன்னாங்க??”

இல்ல நேத்து நாம பேசிட்டு இருக்கும்போதே வந்துட்டாங்களாம் நம்மள பாத்தவுடனே உள்ளே வராம பக்கத்துல காபி ஷாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களாம்.என எங்கோ பார்த்தபடி கூறியவளை பார்த்தவன் பற்கள் தெரியவே சிரித்தான்..சரி வா..

“??”

“நாம வீட்டுக்கு போகல போதுமா ஏறு..”

மீண்டூம் அவள் கேள்வியாய் பார்க்க,”என்ன நம்பி வாழ்க்கை புல்லா என்கூட வரப்போற இப்போ ஒரு ஒன் அவர் வர மாட்டியா??வா..”,என்றவாறு அவளை முதன்முதலாக பார்த்த அந்த மாலுக்கு அழைத்துச் சென்றான்..முதலில் புட் கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்கு சாப்பிட வேண்டியவற்றை கேட்டு வாங்கிக் கொடுத்தான்..

“ஹவ் வாஸ் யுவர் டே??”

“ம்ம் வழக்கம்போல தான்..மேனேஜர் எஸ்கலேஜன் பெருசா சொல்ற அளவு ஒண்ணுமில்ல.என்றவாறு சாப்பிட ஆரம்பித்தவள்  ஏதோ தோன்ற,உங்களுக்கு???”

உன்னைமாதிரியே தான் அக்யுஸ்ட் லத்தி டென்ஷன்..வேறென்ன..சரி அதான் உனக்கும் இந்த டைம்ல ஆபீஸ் முடிஞ்சுருமேநு தான் கால் பண்ணேன்.உன்னை பத்தி சொல்லிட்ட என்னை பத்தி தெரிஞ்சுக்க தோணலயா உனக்கு??ம்ம் முக்கியமா ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன் எதை வச்சு என்னை இவ்ளோ நம்புற??ஷாலினி கூப்டாங்கிறதுக்காக என் வீடு வர வந்த??

அது..அது..

சொல்லு நா ஒண்ணும் நினைச்சுக்க மாட்டேன் என அவளையே பார்த்திருக்க,

வந்து என்னை பொறுத்தவரைக்கும் ஒரு பொண்ணு எந்த ரத்த சம்மந்தமும் இல்லாத ஒருத்தர நம்புறானா அவரு நிச்சயமா நல்லவரா தான் இருக்க முடியும்..முதல்தடவை நாம மீட் பண்ணப்போ அவங்க உங்கள அண்ணா அண்ணானு அவ்ளோ உரிமையா கூப்டப்பவே உங்க மேல முழு நம்பிக்கை வந்துருச்சு..

ப்பார்ரா அமைதியா இருக்கநு நினைச்சா இவ்ளோ யோசிப்பியா..ம்ம் ஷாலுவ பத்தி பேசினவுடனே தான் நியாபகம் வருது நா இன்னும் நம்ம கல்யாண விஷயத்தை அவங்ககிட்ட சொல்லல..நீதான் அவகிட்ட சொல்ற..

நானா??எதுக்கு அதெல்லாம்..

ம்ம் அன்னைக்கு நீ அவகிட்ட பேசினதுக்கு அவ எவ்ளோ வருத்தப்பட்டா தெரியுமா??அதுமட்டுமில்லாம இந்த கல்யாணத்தை முதல்ல இருந்தே விருப்பப்பட்டது அவதான்..சோ அவகிட்ட நீதான் சொல்லனும்..எப்போ போலாம்னு சொல்லு நானே கூட்டிட்டு போறேன்..ஓ.கே வா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.