(Reading time: 11 - 22 minutes)

“என்ன வேணும் உனக்கு?”

“டேய் ரொம்ப நடிக்காத ஒண்ணுமேயில்லாமயா அவளுக்கு வேலை வாங்கி கொடுத்துருக்க..இதையே வேற யாரும்  கேட்டுருந்தா பண்ணிருப்பியா?”

ஹரிஷ் என்னால முடிஞ்ச உதவியா இருந்தா கண்டிப்பா பண்ணிருப்பேன்..அவ ஐடி லைன்ல படிச்சுருந்தா எனக்கு தெரிஞ்சவரு இருந்தாரு சொன்னேன் அவ்ளோ தான்..வேற ஒண்ணுமில்ல..

“ஓ.கே ஓ.கே நம்பியாச்சு..”

என்றவாறு அவன் வெளியே சென்றுவிட தமிழ்க்கே சற்று யோசனையாய் தான் இருந்தது ஏனோ அவளுக்காக உருகுகிறோமோ என்று தோன்றியது..இனி இதை வளரவிடக் கூடாது இத்தோடு மறந்து விடுவது நல்லது என தனக்கு தானே கூறிக் கொண்டான்..

அனைத்துமே அடுத்து அவளை பார்க்கும் வரைதான்..பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஹரிஷ் ஷாலினியை அழைத்துக் கொண்டு செக்  அப்பிற்கு செல்ல,வரும்போது லஞ்ச் வெளியே சாப்பிடலாமென தமிழையும் அழைத்திருந்தான்..கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் லேட்டாகி விட தமிழ் ஹோட்டலுக்கு வந்து காத்திருப்பதாய் கூறினான்..பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு வந்தவனை நோக்கி அவள் வந்து கொண்டிருந்தாள்..

“ஹலோ சார்..”

“ஹாய் நிர்பயா ரைட்..எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் சார்..ரொம்ப தேங்க்ஸ் சார் வேலைல ஜாய்ன் பண்ணிட்டேன் 3 டேஸ் ஆகுது..”

“நோ ப்ராப்ளம்..என்ன இந்தபக்கம்?”

“இங்க பின்னாடி தான் என் ஹாஸ்ட்டல் உள்ளே வர்றப்போ உங்களை பாத்தேன் அதான்..”

“ஓ இங்க இருந்து ஆபீஸ் ரொம்ப டிஸ்டன்ஸ் ஆச்சே எப்படி போறீங்க?”

“பஸ்தான் சார்..அங்க இருக்குற கேள்ஸ் பிஜில தங்கிருக்காங்க நெக்ஸ்ட் வீக் ஷிப்ட் ஆய்டுவேன்..அண்ட் ஐ அம் சாரி…”

“எதுக்கு??”

“இல்ல பர்ஸ்ட் ரெண்டு தடவையும் நீங்க யாருநு தெரியாம..ஐ அம் சாரி..”

“தட்ஸ் ஓ.கே தெரியாதவங்க கிட்ட அப்படி இருக்குறது நல்லதுதான்..”

எனும்போதே ஹரிஷ் வந்துவிட மனதிற்குள் நொந்து கொண்டான்..ஐயோ இவன்பாட்டுக்கு எதையாவது உளறிடுவானே..

அதற்குள் ஷாலினி அவர்கள் அருகில் வந்துவிட,” அண்ணா லேட் ஆய்டுச்சு நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா??ஆமா இவ்ங்க யாரு??”

“இல்லடா இப்போ தான் வந்தேன்..இவங்க பேரு நிர்பயா..இங்கதான் பக்கத்துல ஹாஸ்ட்டல இருக்காங்க..தெரிஞ்சவங்க..”அதற்குள் ஹரிஷ் ஷாலினியிடம் கண்ஜாடை காட்ட,

ஷாலினி அவளிடம்,”ஹாய் என் பேரு ஷாலினி இவரு என் ஹஸ்பெண்ட் ஹரிஷ்..ஃப்ரீயா இருந்தா வாங்களேன் லஞ்ச் ஜாய்ன் பண்ணலாமே..”

“இல்ல பரவால்ல மேம்..அதெல்லாம் வேண்டாம் நா கிளம்புறேன்..”

“என்ன மேம் மா??பேர் சொல்லியே கூப்டுங்க..அண்ணாவே பேசுறாங்கனா நீங்க இனி என் ப்ரெண்ட் வாங்க வாங்க”,என கைப்பிடித்து இழுத்துச் செல்ல..

தமிழ் ஹரிஷை முறைத்தான்..”டேய் நா என்னடா பண்ணேன் என்ன ஏன் முறைக்குற??”

“நல்லா பண்றீங்கடா புருஷனும் பொண்டாட்டியும்..போ போ..”

நால்வரும் ஏசி ஹாலில் சென்று அமர நிர்பயாவோ தயக்கத்தோடேயே அமர்ந்திருந்தாள்..ஷாலினி இயல்பாய் சென்று ஹரிஷின் அருகில் அமர்ந்து கொள்ள தமிழ் வேறு வழியின்றி அவளருகில் அமர்ந்தான்..

“ஏன் நிர்பாயா ஏதோ டென்ஷனாவே இருக்கீங்க..இந்த போலீஸை பாத்து பயப்படுறீங்களோ??அதெல்லாம் ஆப் டியூட்டில தான் இருக்காங்க பீல் ப்ரீ..”-ஷாலினி.

அதற்கும் அரைகுறையாய் சிரித்து வைத்தாளே தவிர பதில் பேசவில்லை..வேண்டியதை ஆர்டர் செய்ய அவள் ஒன்றும் கூறாமலிருக்க ஷாலினியே அவளுக்கும் ஆர்டர் செய்தாள்..

“அப்பறம் உங்களைபத்தி சொல்லுங்க நிர்பயா??சொந்த ஊர் எது??அம்மா அப்பாலா எங்க இருக்காங்க??”

“ஆங்ங் எனக்கு நேடிவ் மும்பை..அம்மா அப்பா இப்போ உயிரோட இல்ல..அதான் நா இங்க வந்துட்டேன்..”

“ஓ அம் சாரி..கவலபடாதீங்க இனி நாங்கயெல்லாம் இருக்கோம் உங்களுக்கு..ஒரு காலத்துல உங்க நிலைமைதான் எனக்கும் இப்போ பாத்தீங்களா??இதேமாதிரி உங்க லைப்பும் மாறும் தைரியமா இருங்க” என கையை பிடித்து தேற்றினாள்..

“தேங்க் யூ என சிரித்தவள் வந்த உணவை அரைகுறையாய் வாயில் போட்டோக் கொண்டு..நா கிளம்புறேன்..சாரி ஹாஸ்ட்டல்ல தேடுவாங்க தப்பா எடுத்துக்காதீங்க” என அனைவருக்குமாய் பொதுவாய் கூறிவிட்டு திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாள்..தமிழோ உச்சகட்ட கோபத்தில் இருந்தான்..

“ஷாலும்மா இது உனக்கு தேவையா பாரு எப்படி போறாநு..ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை..அவ எப்பவுமே இப்படிதான்..அவளுக்காக தோணினா பேசுவா இல்ல நிக்க கூட மாட்டா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.