(Reading time: 26 - 52 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 10 - தீபாஸ்

oten

தித் டிரைவிங்கில் கார் வேகம் பறந்த அதே வேகத்தில் அவனது மனமும் பின்னால் சென்று. அழகுநிலாவை மயக்கத்தில் இருந்து பார்த்தபோதிலிருந்து தன் மனம் துடித்தது முதல், அவள் விழும்போது தாங்கிப் பிடித்தபோது உணர்ந்த மென்மையும், அவள் தன்னை நிலைபடுத்தியபின் கூச்சத்துடன் சேர்ந்த நடுக்கமும், அதை தாங்கமுடியாமல் தானே நடந்துகொள்வதாக ஒலித்த அவளில் மெல்லிசை போன்ற குரலும், அவனை தடம்புரள வைத்தது.

அவனுக்கு அவனின் மேல் கோபம் எழுந்தது. ஏற்கனவே தான் வர்ஷாவை காதலித்துக் கொண்டிருகும்போது இன்னொரு பெண்ணின்மேல் தனக்கு ஈடுபாடு வருவதை நினைத்தவனுக்கு, தான் அவ்வளவு பலவீனமானவனா? தன் தந்தையை மட்டும் ஏற்கனவே ஒருத்தியுடன் குடும்பம் நடத்தும்போது, தன அம்மாவை சூழ்நிலையில் கை பற்றினாலும் அதுவும் குற்றம் என்று அவருடன் முகம்கொடுத்து பேசாமல் இருந்துகொண்டு, தானும் அவரை போல் வேலைதானே பார்கிறேன் என்ற சுயவெறுப்பு உண்டானது .

இனி அழகுநிலாவை அருகிலேயே சேர்க்க கூடாது அம்மாவிற்கு உடனே வர்ஷாவை அறிமுகப் படுத்திவைத்து தங்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லவேண்டும். அப்பொழுதுதான் தேவையில்லாமல் என் ஊருக்காரப் பெண் என்று உறவு கொண்டாடிக்கொண்டு அழகுநிலாவை வீட்டிற்கு அழைத்துப் பேசுவதை வர்ஷாவிற்கு பிடிக்காது என்று கூறி தடுக்கமுடியும் என சிந்தனை எழுந்தது.

ஆனால் அதற்குமுன் தன்னுடன் அன்று மாலில் அழகுநிலாவை பார்த்தது முதல், கோபம் கொண்டு தன போன் அழைபைக் கூட அட்டன் பண்ணாமலும் மற்ற வாட்ஸ்அப் மற்றும் வேறுவழிகளில் தொடர முயன்றாலும் அதை ஏற்காமலும் தவிர்க்கும் வர்ஷாவின் செயல்வேறு அவனுக்கு பெரும் இம்சையாக இருந்தது.

இவள் ஒழுங்கா என் மனசை புரிந்து நடந்துகொண்டால், என்னை உலகஅழகி வந்து மயக்கினால் கூட மயங்கமாட்டேன். ஆனா எப்போபார்த்தலும் இவள் கூட மல்லுக்கட்டிக்கொண்டே என்னை இருக்கவைகிறாள். நான் அவளின் அழகு மற்றும் என்மீதான தூண்டில் பார்வையை மட்டும் கண்டு எனக்கு பொருத்தமில்லாத பெண்ணை தேர்ந்தெடுத்துவிட்டேனோ? என்று ஒருநிமிடம் குழம்பிப்போனான்.

ம்...கூம்ம்ம்ம் இது சரிப்பட்டுவராது வார்ஷா இந்தநேரம் எங்க இருப்பா என்று யோசித்தவன் தன பி.ஏ விற்கு பொன் செய்து இன்னும் ஐந்து நிமிடத்தில் வார்ஷா எங்கு இருக்கிறாள் என்று தெரிவிக்கும்படி கூறி தன மொபைல் தொடர்பை துண்டித்தவன். நேராக தன்னுடைய பீச் ஹவ்ஸ்க்கு வந்து உள்ளேயே போகாமல் அதன் அருகில் இருந்த கடற்கரைக்கு சென்று அதில் எழும் அலைகளை பார்த்தவாறு தன மனதினை சமன்படுத்த முயற்சிசெய்து கொண்டிருந்தான்.

ஆதித்தின் பி.ஏ சங்கர், தனது பாஸ் ஆதித்தின் பேச்சில் ஒருநிமிடம் உறைந்து போய் நின்றுவிட்டான். ஏனெனில் அவனுக்கு அவனது பாஸ் ஆதித்திடம் வேலைக்கு வருவதற்கு முன் அவரை பற்றி எதுவும் தெரியாது.

அவன் தொழில் ஆரம்பித்த காலம் முதல் அவனுடனே இந்த எட்டுவருட பயணத்தில் அவனின் தீயான உழைப்பையும், அவனது அறிவையும் எதிராளிகளை எளிதில் வென்று முன்னேறி இன்று சிகரத்தில் நின்றிருக்கும் அவனின் உழைப்பின் மூலம் சிகரம் தொட்டு இருக்கும் ஆதித்தின் அடிமையாகவே தன்னை வரிந்து கட்டிக்கொண்டிருப்பவன் சங்கர் .

ஆனால் இதுவரை ஆதித் தனது தொழில் அல்லாத மற்ற எதற்கும் தன்னை ஏவியது இல்லை. அப்படிபட்டவன் ஆதித்தின் காதலி இருக்கும் இடதை அறிந்து ஐந்தே நிமிடத்தில் சொல்! என்று சொன்னால் ஆச்சரியத்தில் உறைந்து நிற்காமல் என்ன செய்வான்?

ஆனால் ஒருநிமிடத்திலேயே தன்னை நிலைபடுத்தி கொண்டவன், அவர்களது கிளையன்ட் டீடைல்ஸ்சை எடுத்து அதில் வர்ஷாவின் குளோஸ் நண்பர்கள் மூன்று பேரின் தொலைபேசி நம்பர்களை குறித்தான்.

அதில் ஒருவனை தொடர்புகொண்ட சங்கர், சார் வார்சா மேடம் கால் ரீச்ஆகல அவங்கட்ட உங்க மொபைலை கொடுகுறீங்களா என்று அவனுடன் இருபது தனக்கு தெரியும் என்பது போல பேச்சுக்கொடுத்தான் சங்கர்

அதற்கு அவ்ன் நீங்க யாரு என்று கேட்டதும் நான் ஆதித் சார் பி ஏ, சார் ஒரு முக்கியமான பிசினஸ் விசயமா தொடர்புகொள்ளனும் ஆனா பாஸ்ஸை மொபைலில் ரீச் பண்ண முடியல அதனால்தான் வார்ஷா மேடத்திடம் சொல்லி பாஸை காண்டாக்ட் பண்ணலாம் என்றுதான் கேட்டேன் என்று கூறினான்.

வர்சாவின் அந்த நண்பன் தற்போது வர்சாவுடன் இல்லையென்றாலும் அவள் தனது மற்ற நண்பர்களுடன் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ஓர் பார்டியில் பங்கெடுத்துக்கொண்டிருகும் விபரத்தையும் அவளின் போன் நம்பரையும் ஆதித்தின் பி.ஏ தானே கேட்கிறார் என்ற எண்ணத்திலும் கொடுத்தான்.

உடனே சங்கர் ஆதித்துகுப் போன் பண்ணி வார்சா லீலா பேலஸ் ஹோட்டலில் இருக்கும் விபரத்தை கூறிவிட்டு அதற்குமேல் வேறு எதுவும் கேட்காமல் அவன் நேரில் இருபதுபோல் பவ்யமாக சொல்லி வைத்தான்.

ஆதித் ஒரு மூச்சை ஆழ்ந்து இழுத்து வர்சாவை மீட்செய்யும் பொது அவள் என்னை டெண்சன் பன்ணாமல் புரிந்து நடந்துக்கிடணும் என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தவன் அவள் இருக்கும் இடத்திற்கு தனது காரில் ஏறி பயணத்தை மேற்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.